யாழ். மயிலிட்டி வீரமாணிக்கதேவன்துறையைப் பிறப்பிடமாகவும், மாதகலை வதிவிடமாகவும், இந்தியா திருச்சியை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட இராசநாயகம் இராசகிளி அவர்கள் 21-12-2015 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தசாமி பரிமளம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கோவிந்தசாமி இரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
இராசநாயகம் அவர்களின் அன்பு மனைவியும்,
நந்தன்(நகுலேஸ்வரன்- இந்தியா), வரதன்(வேல்வரதன்- லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற தங்கமயில், மருக்கொழுந்து, செல்வம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
வில்வராசா(யாழ். கரவெட்டி), காலஞ்சென்ற மல்லிகா, தங்கன்(பிரான்ஸ்), ஆனந்தன், காலஞ்சென்ற வயித்திலிங்கம், மெய்யழகர், தாண்டவராசா(இந்தியா), சோதிலிங்கம், இந்திரா(இன்பருட்டி) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
செல்லப்பவுன்(இந்தியா), சுபாகினி(லண்டன்) ஆகியோரின் அன்பு மருமகளும்,
நிரோசா, அமரேந்திரன்(சீனு), கரிசனா(இந்தியா), துளசிகா, சுகுமார்(லண்டன்) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.