பிரித்தானியாவில் இவ்வருடத்திற்கான தமிழ்பாடசாலைகள் விளையாட்டுச்சங்கத்தின்(tssa)உதைபந்தாட்டப் போட்டியில் எமது அணியாகிய மயிலிட்டி விளையாட்டுக்கழகம் . மயிலிட்டி றோமன் கத்தோலிக்க வித்தியாலயம் சார்பாக போட்டியிட்டு 12வயதிற்குட்பட்டோர் பிரிவில் 1ஆம் இடத்தைப்பெற்று எமக்கும் எமது ஊரிற்க்கும் பெருமை சேர்த்துள்ளார்கள் . அத்துடன் இப்போட்டியின் ஆட்ட நாயகனாகவும் எமது அணியைச்சார்ந்த சாரங்கன் தங்கக்குமரனையே தெரிவுசெய்துள்ளார்கள். இச்சாதனைக்குரிய வீர்ர்களை வாழ்த்துவதில் பிரித்தானிய மயிலிட்டி மக்கள் ஒன்றியம் பெருமை கொள்கின்றது. நன்றி. 08-11-2015
பிரித்தானியாவில் 26-08-2013 அன்று TSSA இன் உதை பந்தாட்ட சுற்றுப்போட்டி நடைபெற்றது. 10 வயதுக்கு கீழ்ப்பட்ட பிரிவில் எமது சிறுவர்கள் (மயிலிட்டி விளையாட்டு கழகம்) கலந்துகொண்டு முதலாவது பரிசை தமதாக்கிக்கொண்டார்கள். இந்த போட்டியின் சிறந்த விளையாட்டு வீரராக செல்வன் இனிதன் இன்பன் தெரிவு செய்யப்பட்டார். அனைத்து விளையாட்டு வீரர்களையும், பெற்றோர்களையும், பொறுப்பாளர்களையும் வாழ்த்துகின்றோம். நன்றி - 03-09-2013
பிரித்தானியாவில் வல்வை புளூஸ் அமைப்பினரால் 07-07-2013 அன்று நடாத்திய உதைபந்தாட்ட சுற்றுபோட்டியில் மயிலிட்டி விளையாட்டுக்கழகம் 10 வயதிற்கு கீழ்ப்பட்ட பிரிவில் கலந்துகொண்டு விளையாடி தொடர் வெற்றியாக இதிலும் முதலாவது இடத்தை தமதாக்கிக்கொண்டார்கள். இந்த போட்டியின் சிறந்த விளையாட்டு வீரனாக செல்வன் தர்ஷன் கருணாநிதி தெரிவு செய்யப்பட்டார். இவர்கள் சமீபகாலமாக தொடர்ந்து விளையாடிய அனைத்துப் போட்டிகளிலும் முதலாவதாக வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. பல கிராமங்களோடு போட்டி போட்டு இந்த இடத்தை பெற்ற சிறுவர்களுக்கும், வெற்றியை பெறுவதற்கு உழைத்த அனைவருக்கும் மயிலிட்டி மக்கள் நன்றி கூற கடமைப்பட்டுள்ளோம்.
நன்றி
பிருத்தானியாவில் தாயகம் அமைப்பினரால் 30-06-2013 அன்று நடாத்தப்பட்ட உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியில் மயிலிட்டி விளையாட்டுக்கழகம் கலந்துகொண்டு 10 வயதிற்கு கீழ்ப்பட்ட பிரிவு முதலாவது இடத்தை பெற்றது. இந்த போட்டியின் சிறந்த விளையாட்டு வீரனாக செல்வன் ஷாருதாசன் செல்வம் தெரிவு செய்யப்பட்டார். 12 வயதிற்கு கீழ்ப்பட்ட பிரிவு இரண்டாவது இடத்தை பெற்றது. இவர்களது தொடர் வெற்றிகள் எங்களை மேலும் பெருமைப்பட வைக்கின்றது. வாழ்த்துக்கள்.
பிரித்தானியாவில் TRO அமைப்பினரால் 16-06-2013 அன்று நடாத்தப்பட்ட உதைப்பந்த்தட்ட போட்டியில் பல கிராமங்களை சேர்ந்த கழகங்கள் கலந்துகொண்டு வளையாடின அவற்றில்.
10 வயதிற்கு கீழ்பட்ட பிரிவில் மயிலிட்டி விளையாட்டுக்கழகம் கலந்துகொண்டு விளையாடி முதலாவது இடத்தை தமதாக்கிக்கொண்டார்கள். இந்த போட்டியின் சிறந்த விளையாட்டு வீர்ராக செல்வன் மாதுளன் முறளியை தெரிவு செய்து கெளரவிக்கப்பட்டார். 12வயதிற்கு கீழ்பட்ட பிரிவு இரண்டாவது இடத்தை பெற்றுக்கொண்டது. இந்த போட்டியில் விளையாடிய சிறிய வீரர்களுக்கும் இந்த வெற்றிக்கு பின்னால் இருந்து செயற்பட்ட அனைவருக்கும், மற்றும் பொறுப்பாளர்களுக்கும் அனைத்து உலக மயிலிட்டி மக்கள் சார்பாக வாழ்த்துக்களை தெரிவிக்கின்றோம்.
பிரித்தானியாவில் 26-05-2013 அன்று T R O அமைப்பினரால் உதை பந்தாட்டப்போட்டி நடாத்தப்பட்டது. அன்று மயிலிட்டி விளையாட்டுக்கழகத்தின் 10வயது, மற்றும் 12வயதுக்கு கீழ்ப்பட்ட பிரிவில் சிறுவர்கள் விளையாடினார்கள். 10வயதுக்கு கீழ்ப்பட்ட பிரிவு 2வது இடத்தை பெற்றுக்கொண்டது. இந்த போட்டியில் சிறந்த விளையாட்டு வீரராக செல்வன் சாரங்கன் தங்கக்குமரன் தேர்வு செய்யப்பட்டு பரிசு வழங்கப்பட்டது. இளம் வீரர்களை அனைத்து உலக மயிலிட்டி மக்கள் சார்பாக மயிலிட்டி டொட் கொம் வாழ்த்துகின்றது.
பிரித்தானியாவில் 26-08-2012 அன்று V4U UK யினர் நடாத்திய உதை பந்தாட்டப்போட்டியில் பங்கு பற்றி இடண்டாவது இடத்தை பெற்றனர். சிறுவர்களின் விடாமுயற்சிக்கு மயிலிட்டி . கொம் வாழ்துகின்றது.
மகாஜனாக்கல்லூரி பழைய மாணவர்கள் சங்கம் பரித்தானியாவின் 25வது வருட வெள்ளி விழா உதைபந்தாட்டப்போட்டி 22-07-2012 அன்று பரித்தானியாவில் நடைபெற்றது. 10 வயதுக்கு உட்பட்டவர்கள் பிரிவில் மயிலிட்டி விளையாட்டுக்கழகம் பிரித்தானியா கலந்துகொண்டு மிகவும் திறமையாக விளையாடி 2வது இடத்தைப் பெற்றார்கள். வளையாடிய வீரர்களுக்கும் அவர்களை ஊக்குவித்து விளையாட வைத்த பொறுப்பாளர்களுக்கும் அனைத்து உலக மயிலிட்டி மக்கள் சார்பாக மயிலிட்டி . கொம் வாழ்த்துகின்றது. அவர்களை வாழ்த்த விரும்புவோர் உங்கள் வாழ்த்துச் செய்திகளை worldwide@myliddy.com இந்த முகவரிக்கு அனுப்பிவையுங்கள்.
நன்றி
பிரித்தானியாவில் தாயக விளையாட்டுக்கழகம் நடாத்திய உதைபந்தாட்டப்போட்டியில்
10 வயதிற்கு உட்பட்ட பிரிவில் 2வது இடத்தை பெற்றுள்ளார்கள், அத்துடன் சிறந்த விளையாட்டு வீரராக செல்வன் கவிதாசன் அன்புதாசன் தெரிவுசெய்து கௌரவிக்கப்பட்டார்.
குறுகிய காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட மயிலிட்டி விளையாட்டுக்கழகம். அனைத்து போட்டிகளிலும் பங்குபற்றி முன்னேறி வருவது குறிப்பிடத்தக்கது இவற்றை முன்நின்று ஊக்குவிக்கும் செயலாளர் அன்புதாசன் மற்றும் பொறுப்பாளர்களுக்கும் அனைத்துலக மயிலிட்டி மக்கள் சார்பில் வாழ்த்துக்களையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்ளுகின்றோம்.
26-06-2011 அன்று வல்வை புளூஸ்விளையாட்டுக்கழகத்தின் 50வது ஆண்டு
விளையாட்டுப்போட்டியில் மயிலிட்டி வீரர்கள்
வருண்தாசன் கண்ணதாசன் உறி உடைத்தலில் வெற்றி
கயிறு இளுத்தலில் 2வது இடம்
கரணி சிறிவரதன் 100m ஒட்டம் 3வது இடம்
சுபாஸ் சிறிவரதன் கிழங்கு பொறுக்குதல் 3வது இடம்
பிரித்தானியாவிலுள்ள மயிலிட்டி விளையாட்டுக் கழகத்தின் இவ்வருடத்திற்கான பொதுக்கூட்டத்தில் (12-06-2011) இக்கழகத்திற்கான யாப்பு உறுதிசெய்யப்பட்டு அங்கீகரிக்கப்பட்டுள்ளதோடு, கழகத்திற்கான போசகர்கள் மற்றும்
அடுத்த காலப்பகுதிக்கான நிர்வாகிகளும் விளையாட்டுப் பொறுப்பாளர்களும் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.
போசகர்கள்
திரு. நாகேந்திரம் கருணாநிதி
திரு. பொன்னையா பாபநாதசிவம்
நிர்வாகிகள் விபரம்
தலைவர் திரு. பொன்னையா மலரவன்
உப தலைவர் திரு செல்வராசா தவராஜா ( தவம்)
செயலாளர் திரு சிவதாசன் அன்புதாசன் ( செல்வம்)
உப செயலாளர் திரு பரமநாதன் அன்ரன் ஜோர்ஜ்
பொருளாளர் திரு சுப்பிரமணியம் சிறிவரதன் (வரதன்}
உப பொருளாளர் திரு செல்வவேலாயுதம் கிரகேந்திரன் (ராசன்)
கணக்காய்வாளர் திரு. சிவராஜா நல்லைக்குமரன்
விளையாட்டுப் பொறுப்பாளர்கள்
உதைபந்தாட்டம் திரு இரட்னராஜா( ரூபன்) திரு செல்வராசா இன்பராஜா (இன்பன்) திரு. தாசன் ரூபதாசன் (உமேஸ்)
கிரிக்கெட் திரு.குணசேகரம் இராஜலிங்கம்( ராஜா) திரு. சிவதாசன் குணதாசன் (மதன்)
கரப்பந்தாட்டம் திரு.செல்வவேலாயுதம் ஜீவேந்திரன் (முரளி)
திரு. உருத்திராபதி ரமேஸ்வரன் (ரமேஸ்)
இதேவேளை, இக்கழகத்தில் உறுப்பினராகச் சேரவிரும்பும் பிரித்தானியாவில் வசிக்கும் மயிலிட்டி மக்களும், (மயிலிட்டியில் விவாகபந்தம் கொண்டவர்கள் உட்பட) இங்கிலாந்திற்கு வந்து விளையாடக்கூடிய,
ஏனைய நாடுகளில் வசிக்கும் மயிலிட்டியைச் சேர்ந்த அனைத்து விளையாட்டு வீரர்களும் இக்கழகத்துடன் தொடர்பு கொள்ளுமாறு தயவுடன் வேண்டப்படுகிறீர்கள்.
மயிலிட்டி விளையாட்டுக்கழகத் தொடர்புக்கு
திரு. சிவதாசன் அன்புதாசன் செயலாளர் - 44-07714202527
திரு. சுப்பிரமணியம் சிறிவரதன் பொருளாளர்- 44-07403210387
மின்னஞ்சல் mscuk@live.co.uk
பிரித்தானியாவில் 29-05-2011 அன்று BTSA அமைப்பினரால் நடாத்தப்பட்ட போட்டியில் மயிலிட்டிவிளையாட்டுக்கழம் பங்குபற்றி கயிறு இளுத்தலில் இரண்டாவது பரிசை எமதாக்கிக் கொண்டார்கள். விளையாட்டு வீரர்களுக்கும் பொறுப்பாளர்களுக்கும் அனைத்துலக மயிலிட்டி மக்கள் சார்பில் வாழ்த்துக்களை தெரிவிக்கின்றோம்.