Content on this page requires a newer version of Adobe Flash Player.

Get Adobe Flash player

Content on this page requires a newer version of Adobe Flash Player.

Get Adobe Flash player


free page counter

___________________________________________________________________________


மயிலிட்டி டொட் கொம் அறக்கட்டளையின் ஒரு வருட நிறைவையிட்டு மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு 19-04-2013 அற்று தாயகத்தில் நடைபெற்றபொழுது எடுக்கப்பட்ட புகைப்படங்கள். நன்றி


மயிலிட்டி . கொம் அறக்கட்டளை கல்வி கற்கையின் உதவி பெற்று படிக்கும் மாணவர்களின் ஒரு பகுதியினர்.

___________________________________________________________________________

செய்தியாளர் தேவை

தாயகத்திலிருந்து மயிலிட்டி செய்திகளை மயிலிட்டி டொட் கொம்முக்கு தருவதற்கு ஒரு செய்தியாளர் (ஆண்,பெண்) தேவைப்படுகின்றார். கணணி வைத்திருத்தல் அவசியம். மயிலிட்டி மக்களாகிய நீங்கள் உங்கள் கிராமத்துக்கு உதவியாகவும் செய்யலாம் அல்லது நீங்கள் விரும்பினால் சேவைக்கேற்ற ஊதியம் வழங்கப்படும். புலம் பெயர் நாடுகளில் வாழ்கின்ற எமது மயிலிட்டி மக்களுக்கு உடனுக்குடன் செய்திகள் சென்று அடையவேண்டும் என்பதற்காக இந்த ஏற்பாடு செய்யப்படுகின்றது. தொடர்புகளுக்கு மின் அஞ்சல் முகவரி worldwide@myliddy.com ,அல்லது பொறுப்பாளர்களுடன்.
நன்றி
மயிலிட்டி டொட் கொம்/ மயிலிட்டி டொட் கொம் அறக்கட்டளை

___________________________________________________________________________

மண்ணில் 21-04-1968

விண்ணில் 24-01-2015

அமரர் வேலும்மயிலும் கிருபானந்தன்

மயிலிட்டியை பிறப்பிடமாகவும் ,லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட வேலும்மயிலும் கிருபானந்தன் அவர்கள் 24-01-2015 சனிக்கிழமை அன்று காலமானார் .
அன்னார் சாமிநாதர் வேலும்மயிலும், உமாதேவி தம்பதிகளின் அன்பு மகனும், சுகந்தினி அவர்களின் அன்பு கணவரும்,
கிருசாந்,மதுசாந்,விந்தியா ஆகியோரின் பாசமிகு தந்தையும், காலஞ்சென்ற கேஸ்வரன், கீதாஞ்சலி ஆகியோரின் அன்பு சகோதரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார் ,உறவினர் ,நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
கீதாஞ்சலி 00447947566909
உமாதேவி 00442086952941
மதுசாந்      00447445203361

ஈமைக் கிரியைகன் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
நன்றி திரு. செல்வம்


இவரது பிரிவால் துயருறும் குடும்பத்தினருக்கு அனைத்து உலக மயிலிட்டி மக்கள் சார்பாக
மயிலிட்டி . கொம் ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கின்றது.

_____________________________________

வேலும்மயிலும் கிருபானந்தன் அவர்களின் ஈமைக் கிரியைகள் பற்றிய அறிவித்தல்

கிரியை


திகதி:

வியாழக்கிழமை 29-01-2015, காலை 9:00 மணி முதல் 11:00 மணி வரை
முகவரி:

The Funeral Centre, 43-47 Rushey Green, Catford SE6 4AS

தகனம்

திகதி:

வியாழக்கிழமை 29-01-2015, காலை 11:30 மணி

முகவரி:

Hither Green Crematorium, Verdant Lane, London SE6 1J

___________________________________________________________________________

மயிலிட்டி ஆலயங்களில் வழிபாடு

தைப்பூசத்திற்காக 03-01-2015 அன்று மயிலிட்டி ஆலயங்களுக்கு சென்று வழிபடுவதற்காக அனுமதி கேட்கப்பட்டுள்ளதாகவும்  அனுமதி கிடைத்தவுடன் தாயகத்தில் மக்களுக்கு அறிவிக்கப்படும் என்று ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளார்கள்.
நன்றி
21-01-2015

___________________________________________________________________________

கலந்துரையாடல்

தேர்தல் மாற்றத்தின் பின் தாயகத்தில் மயிலிட்டியின் பெயரால் இயங்கும் அமைப்புக்களில் உள்ள அங்கத்தவர்கள், மற்றும் முகாம்களின் அங்கத்தவர்கள் ஒன்று கூடி மயிலிட்டியோடு சேர்ந்த கிராமங்களுக்கு சென்று வசிப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்வதற்காக எதிர் வரும் 25-01-2015 ஞாயிறு 3 மணியளவில் கலைமகள் மகா வித்தியாலயத்தில் கலந்துரையாடல் நடைபெறுவதாக ஏற்பாட்டாளர் அறிவித்துள்ளார்.
நன்றி 21-01-2015.

___________________________________________________________________________

சைவ சித்தாந்தம்

திரு நாகேந்திரம் கருணாநிதி அவர்கள் படித்து பட்டம் பெற்ற பிறகு சைவ சித்தாந்தம் பற்றி முதன் முதலாக மக்களுக்கு தொடராக தருகின்றார் எதிர் பாருங்கள் விரைவில்
22-01-2014

___________________________________________________________________________

உண்மைச் செய்திகளை எடுத்துவரும் மயிலிட்டி டொட் கொம்

மயிலிட்டி மக்களுக்கு,

தாயகத்திலிருந்து மக்கள் எங்களோடு தொடர்பு கொண்டு பொதுக்கூட்டங்களில், அமைப்புக்களில், நிர்வாகம் சார்ந்த தனி மனிதனாலும், கூட்டாகவும் தவறுகள் நடைபெறுகின்றது இவற்றை மக்களுக்கு தெரியப்படுத்துங்கள் நீங்கள்தான் துணிந்து எழுதுகின்றீர்கள் என்று கேட்டுக்கொண்டார்கள், முதலில் தயங்கினோம் காரணம் பல இணையங்கள் இருக்கும்போது நாங்கள் மட்டும் ஏன் இதை செய்யவேண்டும் என்று பின்பு தாயகத்திலுள்ளவர்களோடு தொடர்பு கொண்டு அவர்கள் கூறியது பற்றி கேட்டபோது அதைவிட கூடுதலாக அறிந்துகொண்டோம். மயிலிட்டி டொட் கொம் நல்ல பெயர் எடுக்க வேண்டும் என்பதற்காக நல்ல செய்திகளோடு பிறந்த நாள் வாழ்த்து, கவிதைகள் என்று இணையத்தை நிரப்பிவிட்டு இருக்க நாங்கள் விரும்பவில்லை மயிலிட்டி மக்கள் மத்தியில் நடை பெறும் அனைத்தையும் மக்கள் முன் எடுத்து வரும் ஊடகம் என்ற வகையில் மயிலிட்டி டொட் கொம் சொன்னால் அது உண்மையாக இருக்கும் என்று மக்கள் கூற வேண்டும் என்பதோடு, மக்களின் ஒற்றுமையை பலப்படுத்தவேண்டும் என்பதற்காகவும், ஆராய்ந்து சரியான விளக்கத்தை தெரிந்து கொண்ட பின்புதான் மக்களுக்கு தெரிவிக்கின்றோம். தாயகத்திலும் சரி புலம் பெயர்ந்த நாடுகளிலும் சரி மயிலிட்டி மக்களின் ஒற்றுமையை குழப்பும் வகையில் சிலரின் செயற்பாடுகள் அமைந்திருக்கின்றது.குறிப்பாக தாயகத்தில் வெள்ளை உடுப்புடன் உலா வரும் சிலர், மற்றும் வேறு சிலராலும்  மக்கள் விரும்பாத செயற்பாடுகள் நடைபெறுகின்றது. மயிலிட்டி மக்களுக்கு உதவி செய்வதாக கூறிக்கொண்டு மக்களின் பணத்தை சுரண்டுகின்றார்கள். சமீபத்தில் நடந்தது ஒரு அமைப்பின் பெயரை சொல்லிக்கொண்டு ஒருவர் நிர்வாகத்திலுள்ளவர்களுக்கு தெரிவிக்காமல் கூட்டமைப்பு மற்றும் அமைப்புக்களை தனியாக சந்தித்து வருகின்றார் .நடந்து முடிந்த தேர்தலின்போது கூட்டமைப்பினரால் 12 பேரூந்துகளுக்கான பணம் கொடுக்கப்பட்டுள்ளது 5 பேரூந்துகள்தான் ஒழுங்கு செய்யப்பட்டது மிகுதிப் பணம் பொருளாளரிடம் கொடுக்கப்படவில்லை. பணம் எங்கே போனது? ஊர்ஜிதப்படுத்தப்பாத செய்தி ஒன்றும் எங்கள் காதுகளுக்கு வந்தது இந்த வெள்ளை அங்கி மனிதர் வரும் பிரதேச சபை தேர்தலில் போட்டியிட மறைமுகமாக ஆயத்தங்களை செய்து வருவதாக இது உண்மையாக இருந்தால் மக்களின் பணத்திற்கு என்ன நடக்கும் சிந்தித்து பாருங்கள். ? மயிலிட்டிக்கு மக்களை விட்டால் பல கோடி ரூபாக்களை அரசாங்கமும் மக்களும் இவர்களிடம் கொடுத்தால் பணத்தின் நிலை என்ன. ? மயிலிட்டி ஆலயங்களுக்காக பாடல்களின் குறுந்தட்டு (CD) வெளியிட்டது நீங்கள் அறிந்தது அதற்காக முதன் முதல் சிறு தொகை பணத்தை மயிலிட்டி டொட் கொம்தான் கொடுத்து ஆரம்பித்து வைத்தது.  மேலதிகமாக பணம் சேர்க்கப்பட்டுள்ளது பல மாதங்களாகியும் உரியவர்கள் மிகுதிப் பணத்தின் கணக்கை மக்களுக்கு இன்றுவரை கையளிக்கவில்லை பல வெளி நாட்டு மக்கள் இவர்களை நம்பி கஸ்ரப்பட்ட மக்களுக்கு உதவி செய்வதற்காக பணத்தை கொடுக்கின்றார்கள். பணத்தின் நிலை என்ன மக்களே சிந்தியுங்கள். ஊர் பணத்தை இவர்கள் கொள்ளையடித்தால் மக்களிடம் போய் எப்படி பண உதவி கேட்கமுடியும்.. தாயகத்தில் மயிலிட்டியின் பெயரால் இயங்கும் அமைப்புகள் இருக்கின்றன. இவற்றினுள் சிலவற்றுக்கு பொதுக் கூட்டங்கள் நடைபெற்றது மக்களுக்கு அறிவிக்காமல் தங்களை தாங்களே தலைவர், செயலாளர் என்று தெரிவு செய்துகொண்டு போயுள்ளார்கள். இதை அறிந்த சிலர் கூட்டத்திற்கு போயுள்ளார்கள். கூட்டத்தில் ஒரு வெள்ளை வேட்டிக்காறர் தன்னை ஒரு பதவிக்கு போடும்படி வாக்குவாதப்பட்டுள்ளார் மக்கள் அவரை போடமுடியாது என்று சொல்லியுள்ளார்கள் தன்னை உப தலைவருக்கு போடும்படி பிடிவாதம் பிடித்துள்ளார் இன்னுமொரு வெள்ளை வேட்டிக்காறர் இவரது நண்பர் மக்களிடம் விட்டுக்கொடுங்கோ என்று கேட்டுவிட்டு படிவத்தில் ஒரு பதவிக்கு தனது நண்பரான வெள்ளை வேட்டிக்காறரின் பெயரை யாருக்கும் தெரியாமல் எழுதியுள்ளார். பிறகு தெரிவு செய்யப்பட்டவர்களின் பெயர்களை படிக்கும்போது மக்கள் இதை கண்டு திகைத்தார்கள். மக்களுக்கு நல்லது செய்வதாக கூறிக்கொண்டு ஏன் முக்கிய பதவிகளுக்கு சண்டை பிடிக்கின்றார்கள் மக்களுக்கு நன்மை செய்யவா பதவிக்கு அடிபடுகின்றார்கள்? தாயகத்தில் மயிலிட்டி மக்களால் கடற்தொழிலாளர் கூட்டுறவுச்சங்க வளாகத்தினுள் கலைமகள் சன சமூக நிலையம் என்று மக்களால் பெயர் வைத்து திறக்கப்பட்டது. இதை ஏற்கனவே நாங்கள் படிப்பகம் பக்கத்தில் இணைத்துள்ளோம். திறந்து ஒரிரு வருடம்தான் நிறைவடைந்துள்ளது. சிலர் இந்த பெயரை மாற்றுவதற்கு முயற்சி செய்து கொண்டிருப்பதாக அறிகின்றோம். மயிலிட்டி மக்கள் அனைவரும் கல்வி கற்ற பாடசாலையின் பெயர்தான் வைக்கப்பட்டுள்ளது.. சிலர் தங்கள் சுய. நலத்திற்காக இந்த பெயர் மாற்றத்தை செய்ய முயற்சிப்பதாக அறிகின்றோம் கேள்வி பெயரை மாற்றவேண்டிய அவசியம் என்ன?. சம்மந்தப்பட்டவர்களிடம் நாங்கள் கேட்பது பெயர் மாற்றத்தை நிறுத்தி மக்களின் ஒற்றுமைக்கு முன் நிற்கும்படி அன்போடு கேட்கின்றோம்.
உங்கள் கருத்துக்களை கருத்து தெரிவித்தல் பக்கத்தில் பதிவு செய்யுங்கள்
நன்றி
22-01-2014

___________________________________________________________________________

மயிலிட்டி பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்

முதலில் மாணவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்று முன் வந்த மாணவர்கள் அனைவருக்கும் அனைத்து உலக மயிலிட்டி மக்கள் சார்பாக மயிலிட்டி டொட் கொம்,
மயிலிட்டி டொட் கொம் அறக்கட்டளையின் வாழ்த்துக்கள்.
இணையத்திற்கு சில புகைப்படங்களும் ஒரு அறிவித்தலும் அனுப்பியுள்ளார்கள். எங்களுக்கு அனுப்பினார்களா, அல்லது போடுவதற்கு அனுப்பினார்களா அதற்கான விபரம், இணைப்பு கடிதம் எதுவும் இல்லாமல் மொட்டையாக அனுப்பியுள்ளார்கள். இதற்கான எங்கள் கருத்தினை மயிலிட்டி யுத்திற்கு அடுத்த வாரம் தருகின்றோம்

___________________________________________________________________________

தோற்றம் 03/30/1948
மறைவு 01/08/2015

அமரர் திருநாவுக்கரசு மோகனதாஸ்

வல்வெட்டிதுறையைப் பிறப்பிடமாகவும் காங்கேசன்துறை மயிலிட்டியை வசிப்பிடமாகவும் தற்போது இந்தியா திருச்சியில் வசித்து வந்தவருமான திருநாவுக்கரசு மோகனதாஸ் அவர்கள் 01/08/2015 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். இவர் காலஞ்சென்ற திருநாவுக்கரசு பரமேஸ்வரி ஆகியோரின் பாசமிகு மகனும் காலஞ்சென்ற சின்னையா தங்கச்சியம்மா ஆகியோரின் அன்பு மருமகனும், கருணையின் அன்புக் கணவரும், காலஞ்சென்ற சுரேஸ் நிறஞ்சன் உமகாந்த் (ரமணன் - கனடா) துவாரகன் (கண்ணா – பிரான்ஸ்) ஷாலினி - (பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும். வாணி,ரேனுகா, ரமேஸ்குமார் ஆகியோரின் அன்பு மாமனரும் லோகநாதன் (ஜேர்மன் ) கஜேந்திராவதி (கனடா) ராதவதி (ஜேர்மன் ) அகிலாவதி (அமெரிக்கா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும் மகிஷர மிதுஷா ஷாண் ஆகியோரின் அன்புப்பேரனும் கீர்த்திகா, ஆர்த்திகா ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும். பிரஷாத், மீரா மிகிரா மயூரன், பிரணவன், குமரன் ஆகியோரின் பாசமிகு மாமாவும். புனிதவதி, சிவபாதம், சந்திரகுமார் ஆதியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார் அன்னாரின் இறுதிச்சடங்குகள் அவரின் இல்லத்தில் 01/12/2015 திங்கட்கிடிமை பி.ப 3 :00 மனிக்கு நடைபெறும் என்பதை அறியத்தருகிறோம். இத்தகவலை உற்றார், உறவினர் மற்றும் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தகவல் – பிரஷாத்
இந்தியா தொடர்புக்கு 011 91 431 235 1346
ஷாலினி (FRANCE) 33 14 255 4659
பிரஷாத் (CANADA) 416 493 7690
றதாவதி (GERMANY) 011 49 29 6151 1230
அகிலாவதி (AMERICA) 718 494 4980
உதயம் (LONDON) 020 869 20428
செல்வி (SRI LANKA) 00 943 2222 3956


இவரது பிரிவால் துயருறும் குடும்பத்தினருக்கு அனைத்து உலக மயிலிட்டி மக்கள் சார்பாக
மயிலிட்டி . கொம் ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கின்றது.

___________________________________________________________________________

மயிலிட்டி மக்களுக்கு

உங்களின் கருத்துக்களை பதிவு செய்வதற்காக கருத்து தெரிவித்தல் பக்கதில் இரண்டு வழிகளில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, உங்கள் கருத்துக்கள் மக்களையும், எங்களையும் வளர்சி அடைய செய்யும். நன்றி

___________________________________________________________________________

பாராட்டு

திரு, திருமதி கருணாநிதி தம்பதிகள் இருவரும் சைவ சித்தாந்தம் படித்து பட்டம் பெற்றமைக்காக மயிலிட்டி மக்கள் சார்பாக நன்றியையும், பராட்டுக்களையும் தெரிவிக்கின்றோம். நன்றி

"சைவசித்தாந்த ரத்தினம் "சிறப்புப் பட்டம்

மயிலிட்டி  வீரமாணிக்கதேவன் துறையைச் சேர்ந்த லண்டன் ஈஸ்ர்காமில் (East Ham, London )வசித்து வரும் திரு நாகேந்திரம் கருணாநிதிக்கும் அவரின் மனைவி சதியேஸ்வரி கருணாநிதிக்கும் லண்டன் சைவமுன்னேற்றச்சங்கத்தின் ஆதரவில் முதல் முறையாக ஆசியக் கண்டத்திற்கு வெளியில் தமிழ்நாடு திருக்கயிலாய பரம்பரை மெய்கண்ட சந்தானம் திருவாவடுதுறை ஆதீனத்தினால்,மதிப்பிற்குரிய ஆசான் "செந்நெறிச் செம்மல் "திருவாளர் சூ.யோ.பற்றிமாகரன்[S.J.Fatimaharan BA, Special Diploma (Oxford), BSC, PG Diploma, MA (Politics of democracy), MA (Tamil) ]அவர்களால் லண்டனில் 2012 ஆம் ஆண்டு ஒரு வருடமாக நடத்தப்பட்ட சைவசித்தாந்த நேர்முகப் பயிற்சிநெறியை நிறைவு செய்து ,அதற்கான வேலைத்திட்டத்தை (14 சைவசித்தாந்தசாத்திர நூல்களான திருவுந்தியார், திருக்களிற்றுப்படியார், சிவஞானபோதம், சிவஞானசித்தியார்,  இருபா இருபது,உண்மைவிளக்கம்,சிவப்பிரகாசம்,திருவருட்பயன்,வினாவெண்பா,போற்றி

ப்ப∴றொடை,கொடிக்கவி,நெஞ்சுவிடுதூது,உண்மை நெறி விளக்கம்,சங்கற்ப நிராகரணம் ஆகியவற்றுடன் ஞானாமிர்தம் மற்றும் திருமந்திரம் உட்பட 12 திருமுறைகள்)பூர்த்தி செய்து, சைவசித்தாந்தத்தை விளங்கிக்  கொண்டதை வெளிக்காட்டியதற்காக " சைவசித்தாந்த ரத்தினம் " சிறப்புப்  பட்டம் 20-09-2014 அன்று லண்டன் செட்ஜ்ஹில் பள்ளியின் கேட்போர் கூடத்தில் (London SedgeHill School Auditorium )லண்டன் லூசியம் சிவன் கோயிலும்,மலேசியா இந்து சங்கமும் சேர்ந்து நடாத்திய இரண்டாவது உலகத் திருமுறைப் பெருவிழாவில் திருக்கயிலாய பரம்பரை திருவாவடுதுறை ஆதீனம் 21 ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமிகள் அவர்களால் வழங்கப்பட்டது.

___________________________________________________________________________

கடிதம்

திரு அன்ரன் ஞானப்பிரகாசம் அவர்களால் ஐக்கிய நாடுகள் சபைக்கு தனிப்பட்ட முறையில் அனுப்பப்பட்ட கடிதம்.

___________________________________________________________________________

 

2015 புதுவருட சிறப்பு நிகழ்ச்சியில்

திரு அன்ரன் ஞானப்பிரகாசம் அவர்கள் நேரடியாக சுவிசிலிருந்து கலந்துகொண்டு சிறப்பித்திருந்தார்.


___________________________________________________________________________

50ம் ஆண்டு நினைவு அஞ்சலி


திரு அன்ரன் ஞானப்பிரகாசம் (றாஜ்) அவர்களுக்கு அனைத்து உலக மயிலிட்டி மக்கள் சார்பாக மயிலிட்டி டொட் கொம் நன்றியை தெரிவிக்கின்றது..

23.12.1964 எமது ஊரில் மிகப் பெரிய ஒரு சூறாவளிப்புயல் ஏற்பட்டு இதில் 153 பேர் வரை கடலில் மரணித்ததாக தகவல் உள்ளது அதில் 96 பேர் மயிலிட்டி மக்கள் ஏனையோர் எம் ஊர் வள்ளங்களில் தொழில்புரிந்த ஏனைய ஊர் மக்கள்.

1964 மார்கழி 23ல் ஏற்பட்ட சூறாவளிப்புயலுக்கு இலக்காகி இறந்தவர்களின் 50ம் ஆண்டு நினைவாக மலரும் நினைவு ......

விட்டுப் போனவன் விண்ணில் சாந்திபெற

அறுபத்தி நான்கில் அலைகடல் ஓரத்தில்
பெரும்துயர் நடந்து போனது அன்று
ஐம்பது ஆண்டுகள் ஆகியும் இன்று
அன்றைய நினைவினை இங்கிதம் பகிர்கின்றேன்.

மண்ணில்ப் பிறப்பு நாமெடுக்கும் முன்பே
அள்ளுண்டு போநோர்க்கு அஞ்சலிகள் இன்று
பொல்லாத புயல் சொல்லாமல் வந்து
அந் நாளில் எம்மவர் உயிர் குடித்து சென்றதுவே.

மயிலிட்டிக் கரையில் மரண ஓலம்......
மாதாவின் பிள்ளைகளோ வாழ்விழந்த கோலம்......
மாரியம்மன் பக்தர்களோ விதவைகளாய் நின்றகாலம்......
மார்கழி இருபத்தி மூன்று மறக்க முடியாத சோகம்.....

பச்சிளம் பாலகர் படிப்பினைத் துறந்தனர்
தத்தளித்த குடும்பங்களின் தலைவர்கள் ஆயினர்
கட்டுமரம் ஏறி மீண்டும் கடல்மடி தவண்டனர்
தொண்ணூறு (15.06.1990) வரை கடலில் செல்வம் குவித்தனர்.

விண்ணகம் சென்றவர் சாந்தி பெற
மண்;ணிலிருந்து யாகங்கள் செய்கின்றோம்
விட்டுப் போனவரே விண்ணில் சாந்தி பெற....
விட்டுப் போனவரே விண்ணில் சாந்தி பெற....

அரை நூற்றாண்டு அமரர்களே
அடைந்திடுவீர் சாந்தி
ஆண்டவரின் பாதத்தில்
நித்திய சமாதானத்தில் இளைப்பாறக்கடுக

1964ல் சூறாவளியில் காலமானவர்களின் பெயர் விபரம்.

1)    மிக்கேல்பிள்ளை அந்தோனிப்பிள்ளை   
2)  கிறிஸ்து அந்தோனிமுத்து
3)  அந்தோனிமுத்து வேதநாயகம்
4)  செல்லத்துரை
5)  பாக்கிநாதன்
6)  கலித்தர் சந்தியாப்பிள்ளை
7)  இரத்தினர் ஜெயராமன்
8)  செல்லத்துரை
9)  கணபதிப்பிள்ளை
10) கணபதிப்பிள்ளை துரை
11) சரவணணை கந்தசாமி
12) சரவணனை செல்வராஜர்
13) கந்தசாமி
14) ஐயாச்சாமி ஆனந்தவேல்
15) பெரியதம்பி
16) ஐயாத்துரை
17) தேவசகாயம் அருளப்பு
18) ஆ.மார்க்கண்டு
19) சவரிமுத்து
20) சி.அழகரட்ணம்
21) நல்லையா
22) வல்லிபுரம்
23) சாம்பசிவம்
24) சிவனெளி
25) பச்சடியார்
26) சுப்பையா
27) சின்னராசா
28) இராமசாமி

29) இராசகனி
30) இராசலிங்கம்
31) ஆனந்தராசா
32) கந்தையா மருகன் --------
33) முருகேசு (ஆனையிறவு)
34) விசுவலிங்கம் தம்பியய்யா
35) கந்தசாமி (சுறுக்கன்)
36) சின்னத்துரை குமாரசாமி
37) முத்தையா ஐயாத்துரை
38) சின்னத்துரை செல்லச்சாமி
39) மாணிக்கர் இராசையா
40) துரைராசா
41) செல்லக்கண்டு மகன்-------
42) சாபாபதி இலச்சுமிகாந்தன்
43) செல்வநாயகம் அந்தோனிப்பிள்ளை
44) இரத்தினம்
45) சின்னத்தம்பி அர்சுனன்
46) வாவாசிங்கம்
47) செல்லத்தம்பி சின்னத்துரை
48) கனகசபை
49) சண்முகம்
50) தங்கலிங்கம்
51) பராசிங்கம்.
53) சின்னர் திருச்செல்வம்
54) யோசேவ்
55) அமிர்தநாதர்
56) சின்னத்தம்பி

மேலேயுள்ள பெயர்கள் பல மயிலிட்டியில் அழைக்கப்பட்ட பெயர்களாகவுள்ளன இவர்களின் முழுப்பெயர்தெரிந்தவர்கள் என்னுடன் தொடர்பு கொண்டு இதனை பூரணப்படுத்த உதவுமாறு வேண்டுகின்றேன்.அத்துடன் இந்தப் பெயர்பட்டியல்களில் இல்லாதவர்களின் விபரங்கள் தெரிந்தவர்கள் தயவு செய்து இதனைப் பூரணப்படுத்த உதவுமாறு வேண்டுகின்றேன்.

மயிலிட்டி மக்களின் ஒருவனாய்

அன்ரன் ஞானப்பிரகாசம் (றாஜ்)

AND TO SEE VIDEO

___________________________________________________________________________


11-07-2014 அன்று மக்கள் மயிலிட்டி ஆலயங்களுக்கு சென்று வழிபட்டபோது எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள. மட்டும் ஏற்பாட்டாளர்களால் எங்களுக்கு அனுப்பப்பட்டது. நன்றி

___________________________________________________________________________


இவர் திரு இரத்தினராஜா அவர்களின் பேத்தி. 22-07-2014

___________________________________________________________________________


மயிலிட்டி மக்களின் வல்வை சிவன் கோவில் திருவிழாவல்வெட்டித்துறை சிவன் கோயிலில் மயிலிட்டி மக்களின் கொடியேற்ற திருவிழா 01-03-2014 அன்று மயிலிட்டி மக்களால் மிகவும் சிறப்பக நடைபெற்றது. அப்போது எடுக்கப்பட்ட நிகழ்படத்தை இங்கே காணலாம். 
நன்றி

___________________________________________________________________________

___________________________________________________________________________இந்தியா டெல்லியில் National Racing Championship 2013 MMSC FMSCI in
போட்டியில் செல்வன் மதன் சற்குணநாதன் கலந்துகொண்டு முதலாவது இடத்தையும், இரண்டாது இடத்தையும் தனதாக்கிக்கொண்டார்.

___________________________________________________________________________இந்தியா சென்னையில் Yamaha MMSC One Make Championship 2013 போட்டியில் கலந்துகொண்டபோது செல்வன் மதன் சற்குணநாதன்

___________________________________________________________________________இந்தியா சென்னையில் MRF challenge போட்டியில் 09-02-2014 அன்று செல்வன் மதன் சற்குணநாதன் பங்குற்றி 2 வது, மற்றும் 3வது இடத்தை பெற்றார்.

___________________________________________________________________________

செல்வி நர்வினிடேரியின் சிறப்பு பேட்டி


செல்வி நர்வினிடேரி அவர்கள் டென்மார்கிலிருந்து 28-02-2014 அன்று நேரடியாக
மயிலிட்டி டொட் கொம் வானொலி நிகழ்ச்சியில் இணைந்து வழங்கிய செவ்வி. உங்கள் வாழ்த்துக்களையும், கருத்துக்களையும் தெரிவியுங்கள்.
நன்றி
மயிலிட்டி டொட் கொம்/ மயிலிட்டி டொட் கொம் அறக்கட்டளை 
அனைத்துலக மயிலிட்டி மக்கள்___________________________________________________________________________

மயிலிட்டி மக்களால் வல்வெட்டித்துறை சிவன் கோவிலில் நாடாத்தப்பட்ட கொடியேற்ற திருவிழாவின் 2013 இன் வரவு செலவு அறிக்கை.பங்குனி மாதம் 01 திகதி 2014 கொடியேற்ற உற்சவத்தில் நீங்கள் கலந்து கொள்வதிற்கும் உங்கள் பங்களிப்பை செய்வதிற்கும் திரு நா.வடிவேஸ்வரனுடன் தொடர்பு கொள்ளவும். எங்களுடன் தொடர்புகொண்டாலும் நாங்கள் அவர்களுடனான தொடர்பை ஏற்படுத்தித்தருவோம். நன்றி
ஒவ்வொரு வருடமும் இந்த திருவிழாவை நல்லமுறையில் முன்நின்று நடத்துவதிற்காக
நிரு நா.வடிவேஸ்வரன், திரு க.அருணகிரிநாதன், திரு இ.ஞானராசா அவர்களிற்கு அனைத்து உலக மயிலிட்டி மக்கள் சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்ளுகின்றோம்.

மயிலிட்டி டொட் கொம்

___________________________________________________________________________

தெய்வீக ராகங்கள் பாடல்கள்


மயிலிட்டி மக்கள் பல நாடுகளிலிருந்து தங்களால் (CD)யை  பெறமுடியவில்லை என்று தெரிவித்திருந்தார்கள் அவர்களைப்போல் மேலும் உள்ள மயிலிட்டி மக்களுக்காக இந்த பாடல்களை இணையத்தில் எடுத்து வந்து அவர்களின் காதுகளுக்கு விருந்தாக்கி இருக்கின்றோம். தாயகத்தில் உருவாக்கப்பட்ட மயிலிட்டி ஆலயங்களின் மீதெழுந்த தெய்வீக ராகங்கள் பாடல்களின் இறுவெட்டு என்று வெளியீட்டாளர்கள் அறிவித்ததால் DVD என்று அறிவித்திருந்தோம் ஆனால் வெளியிட்டது குறுந்தட்டு (CD)  பாடல்கள்  என்பதை அறியத்தருகின்றோம். பாடல்கள் பற்றிய உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள். நன்றி 19-01-2014

___________________________________________________________________________

மயிலிட்டி மாணவிக்கு தங்கப்பதக்கம்

வட மாகாணங்களுக்கு இடையிலான வெளிவாரியாக 06-06-2013 அன்று நடைபெற்ற
48 கிலோ எடைப் பிரிவில் பெண்களுக்கான பளு தூக்கும் போட்டியில் மயிலிட்டியை சேர்ந்த மகாஜனாக் கல்லூரியின் மாணவி செல்வி விஜயஜீவன் சுகந்திகா அவர்கள் முதலாம் இடத்தை பெற்று தங்கப் பதக்கத்தை பெற்றுக்கொண்டார்.  சுகந்தியாவை மேலும் பல வெற்றிகளை பெற்று மயிலிட்டிக்கு பெருமை சேர்க்கவேண்டும் என்று மயிலிட்டி மக்கள் சார்பாக  வாழ்த்துகின்றோம். நன்றி 02-12-13

___________________________________________________________________________

2013 இல் மயிலிட்டி டொட் கொம் அறக்கட்டளையின் உதவியில் கல்வி கற்கும் மாணவர்கள்.

___________________________________________________________________________

மயிலிட்டி டொட் கொம் வாக்கெடுப்பின் பயனாக மயிலிட்டித்துறை மீண்டும்
மயிலிட்டி என்று முதலாவதாக மீள் குடியேற்ற குழு மாற்றியுள்ளது.


மயிலிட்டி டொட் கொம் இணையம் வாயிலாக மயிலிட்டித்துறை பெயர் மாற்றம் பற்றி இரண்டு வருடம் வாக்கெடுப்பு நடத்தி அதன் முடிவு மக்கள் மயிலிட்டி யை தான் விரும்பினார்கள். இந்த முடிவு பெயர் மாற்றம் செய்த அனைவருக்கும் தெரியும். இந்த முடிவை கடல்தொழிலாளர் கூட்டுறவுச்சங்கம், மீள் குடியேற்ற குழு, வினாயகர் ஆலய பரிபாலன சபை, முன் பள்ளி, கலைமகள் படிப்பகம், ஆகியவற்றிற்கு முறைப்படி இரண்டு மாதத்திற்கு முதல் தபாலில் கடிதம் அனுப்பப்பட்டதும் அனைவரும் அறிந்தது. ஏற்கனவே மீள் குடியேற்ற குழு செயலாளரிடம் கடிதம் கொடுக்கப்பட்டுவிட்டது அதன் பிறகுதான் மக்களின் வாக்கிற்கு மதிப்பளித்து மீள் குடியேற்ற குழு மயிலிட்டி என்று மீண்டும் பெயரை மாற்றியுள்ளார்கள். வாக்களித்த மக்கள் மற்றும் அனைத்து மயிலிட்டி மக்கள் சார்பாகவும் மயிலிட்டி இடம் பெயர்ந்தோர் மீள் குடியேற்றக் குழுவுக்கு நன்றியை தெரிவிக்கின்றோம். மற்றவர்களுக்கும் தற்போது கடிதங்கள் கொடுக்கப்பட்டுவிட்டது. அனைவரும் பதில் தருவார்கள் என்று நம்புகின்றோம். தந்தவுடன் மக்கள் பார்வைக்கு போடப்படும்.
நன்றி - 05-08-2013


___________________________________________________________________________


திரு நா.கருணாநிதி அண்ணா அவர்களுக்கு உங்கள் வாழ்த்துக்களுக்கும், மயிலிட்டி டொட் கொம் இன் வளர்ச்சியில் நானும் ஒரு பங்காளனாக இருப்பேன் என்று கூறி எங்களுக்கு மேலும் ஊக்கமளித்ததிற்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்ளுகின்றோம். உங்களின் கடிதம் எங்களுக்கு  நடந்துகொண்டிருக்கின்றதை அப்படியே சொல்லுகின்றது அதில் ஒன்றுதான் சமீபத்தில் மயிலிட்டி டொட் கொம்ஐ அழிக்க முயற்சி செய்தது. இப்படிப்பட்டவர்களை மயிலிட்டி மக்கள் எப்போது திருத்தப்போகின்றார்கள்?

___________________________________________________________________________

அறிவித்தல்

மயிலிட்டி டொட் கொம் ஒரு ஊடகம் என்ற வகையில் மயிலிட்டி மக்களின் பெருமைகளை உலகறிய செய்வதோடு நின்றுவிடாமல் மயிலிட்டிக்கும் மயிலிட்டி மக்களுக்கும் பாதிப்பு ஏற்படக்கூடிய செயல்கள் நடைபெறும் பட்சத்தில் அவற்றை நிறுத்துவதிற்காக மயிலிட்டி மக்களின் பார்வைக்கு கொண்டுவருவதற்கு் கடமைப்பட்டுள்ளோம். நன்றி

___________________________________________________________________________

உண்மைக் கதை, கனடாவில் மயிலிட்டி மக்களின் நிலை என்ன ??___________________________________________________________________________


நம்ம ஊரைப்போல வருமா!!!


கனடாவில் வணக்கம் FM ரேடியோவில் நம்ம ஊரைப்போல வருமா என்ற நிகழ்ச்சி நடைபெற்று வருகின்றது. அந்த நிகழ்ச்சிக்காக ரேடியோவிலிருந்து எங்களை அழைத்து மயிலிட்டிவரலாற்றை குறிகிய நேரத்தில் சொல்லும்படி கேட்டிருந்தனர். அவர்கள் கேட்டுக்கொண்டதிற்கு அமைவாக 10 நிமிடத்திற்குள் சுருக்கமாக சொல்லப்பட்டுள்ளது. இதுபற்றிய உங்கள் கருத்துக்களை எங்களுக்கு அறியத்தரவும்.
நன்றி

உங்கள் மயலிட்டி டொட் கொம்/ மயலிட்டி டொட் கொம் அறக்கட்டளை

கருத்துக்களுக்கு/ COMMENTS

___________________________________________________________________________

வாக்கெடுப்பு முடிவைந்துவிட்டது இரண்டு வருடம் நடைபெற்ற வாக்கெடுப்பில்
மயிலிட்டிக்கு 351 வாக்குகளும்
மயிலிட்டித்துறைக்கு 80 வாக்குகளும்
தேவன்துறைக்கு 61 வாக்குகளும்
மொத்தம் 492 பேர் வாக்கழித்திருந்தனர்.
மயிலிட்டியைதான் மக்கள் விரும்புகின்றார்கள் என்பதை மயிலிட்டி மக்கள் மயிலிட்டி டொட் கொம் இணையத்தின் மூலம் வாக்களித்து தங்களின் விருப்பத்தை தெரிவித்துள்ளார்கள் என்பதை மயிலிட்டி மக்கள் அனைவருக்கும் அறியத்தருகின்றோம். இந்த முடிவை தற்பொழுது பெயர் மாற்றம் செய்த
மயிலிட்டி கடற்றொழிலாளர் கூட்டுறவுச்சங்கம்,
மயிலிட்டி மருதடி வரசித்தி வினாயகர் ஆலய பரிபாலன சபை,
மயிலிட்டி கலைமகள் படிப்பகம்,
மயிலிட்டி முன் பள்ளி
மயிலிட்டி மீள் குடியேற்ற குழு ஆகியவற்றின் பொறுப்பாளர்களுக்கு முறைப்படி அறிவித்துள்ளோம். அவர்களிடமிருந்து மயிலிட்டி மக்களிற்கான பதிலையும் கேட்டிருக்கின்றோம். அவர்களின் பதில் எங்களுக்கு கிடைக்கப்பெற்றதும் மக்களின் பார்வைக்காக இங்கே போடப்படும் என்பதையும் தெரிவிக்கின்றோம். வாக்களித்த அனைவருக்கும் நன்றியை தெரிக்கின்றோம். தொடர்ந்தும் பெயர் மாற்றம் பற்றிய உங்களின் கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள்.
நன்றி


___________________________________________________________________________


இந்தியா தமிழ் நாட்டில் மயிலிட்டியை சேர்ந்த குடும்பங்கள் அகதி முகாம்களில் இருப்பதாக அறிகின்றோம். குடும்ப வருமானம் குறைந்த படிக்க ஆர்வம் உள்ள தகுதி உடைய மாணவர்கள் மயிலிட்டி . கொம் அறக்கட்டளையின் கல்வி உதவி திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம் மேலதிக விபரங்களுக்கு பொறுப்பாளர்களுடன் அல்லது மின் அஞ்சல் மூலம் worldwide@myliddy.com தொடர்புகொள்ளவும்.
___________________________________________________________________________

மயிலிட்டி மக்களின் மயிலிட்டி டொட் கொம்மின் அடுத்த மைல்கல்!!!

மயிலிட்டி டொட் கொம் மயிலிட்டி மக்களுக்கென்று ஒரு பாடல் பாடி இசை அமைத்து வெளியிடவுள்ளது. பாடலை நீங்கள் எழுத விரும்பினால் மயிலிட்டியும், மயிலிட்டி மக்கள் சம்பந்தப்பட்ட நல்லவைகள் என்று கருதும் அனைத்தும் உள்ளடங்கியதாக 4 முதல் 6 நிமிடம் வரை பாடல் வரக்கூடியதாக எழுதி அனுப்பவும். கிடைக்கும் பாடல்களில் ஒரு பாடலை அனைத்துலக பொறுப்பாளர்களினால் தெரிவு செய்யப்பட்டு வெளியிடப்படும். பாடலை பாட விருப்பம் உள்ளவர்கள் மற்றும், பாடல் சம்பந்தமாக மேலதிக விபரங்களுக்கும் பொறுப்பளர்களுடன் தொடர்புகொள்ளவும்.
நன்றி

___________________________________________________________________________

வெளிநாடுகளில் வாழுகின்ற மயிலிட்டி மக்களுக்கு

தாயகத்தில் இந்த அறக்கட்டளை மூலமாக எமது பிள்ளைகளுக்கு கல்வி கற்க உதவி செய்கின்றோம் பிள்ளைகளின் எண்ணிக்கை கூடிக்கொண்டு  போகின்றது. அவர்களின் குடும்ப சூழ்நிலையை அறியும் போது யாரையும் தட்டிக்கழிக்க முடியாமல் உள்ளது எனவே இதற்கு உதவி செய்ய விருப்பம் உள்ளவர்கள் பொறுப்பாளர்களுடன் தொடர்புகொண்டு மேலதிக விபரங்களை பெற்று உங்களால் முடிந்த உதவியை செய்யவும். உங்களின் ஒவ்வொரு ரூபாவும் அவர்களிற்கு நல்வாழ்வை வழங்க உதவும்.
நன்றி

___________________________________________________________________________

இலவச திருமண இணைவுச் சேவை

___________________________________________________________________________

மிகவும் பிடித்த பாரதியார் கவிதை

தேடிச் சோறு நிதந்தின்று – பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி – மனம்
வாடித் துன்பமிக உழன்று – பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து – நரை
கூடிக் கிழப்பருவம் எய்தி – கொடுங்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும் – பல
வேடிக்கை மனிதரைப் போலே – நான்
வீழ்வே னென்று நினைத்தாயோ !

___________________________________________________________________________

மயிலிட்டி டொட் கொம்மிற்கு மயிலிட்டியில் இருக்கும் கோயில்களின் பெயர்கள் கிடைத்துள்ளது. இவற்றில் சில கோயில்கள் எங்கே இருந்தது என்பது தெரியவில்லை இவை எங்கே இருந்தது என்ற விபரத்தை தெரிந்தவர்கள் எமக்கு அறியத்தரவும், இவை மயிலிட்டி வரலாற்றில் ஆவணப்படுத்தப்படவேண்டியவை, இவற்றில் இல்லாத கோயில்கள் தெரிந்தால் அவற்றையும் தெரியப்படுத்தவும்.

நன்றி மயிலிட்டி டொட் கொம் worldwide@myliddy.com


1
KOLLVIYAKALLATI VINAYAGAR TEMPLE
15
PUTHUKINNATRU VAIRAVAR TEMPLE
2
SRI MURUGAN TEMPLE
16
SANGVATHAI MANNIKA PILLAYAR TEMPLE
3
KANNAHAI AMMAN TEMPLE
17
MAILUVAKATTAI PILLAYAR TEMPLE
4
SRIPATHIRAKAALI AMMAN TEMPLE
18
THOPU PILLAYAR TEMPLE
5
PARASAKTHI AMMAN TEMPLE
19
KONDALADI VAIRAVAR TEMPLE
6
THEVIAKOLLAI AMMAN TEMPLE
20
KOTHAVATHI VAIRAVAR TEMPLE
7
MUTHUMARI AMMAN TEMPLE
21
MUNNIYAPPAR TEMPLE
8
PUVANESVARI AMMAN TEMPLE
22
MAILODAI VAIRAVAR TEMPLE
9
KANNAHAIAMMAN TEMPLE
23
NAVALADY VAIRAVAR TEMPLE
10
KATTAIKADU VAIRAVAR TEMPLE
24
SRI MURUGAN TEMPLE
11
THIRUPOOR PECHIAMMAN TEMPLE
25
VEERAPATHTHIRAR TEMPLE
12
POOTHVARAYAR TEMPLE
26
HOSPITAL MURUGAN TEMPLE
13
VADAPRUMPARPPU PILLAYAR TEMPLE
27
KAANIKKAI MAATHA TEMPLE
14
MARUTHADDI PILLAYAR TEMPLE
28
MULAVAI MAATHA TEMPLE
___________________________________________________________________________

என்ன நடந்தாலும்
எதை இழந்தாலும்
சோர்ந்து போகமாட்டேன்
காரணம்
நான் 100 வெற்றிகளை பார்த்தவன்
அல்ல
1000 தோல்விகளை பார்த்தவன்...

___________________________________________________________________________


கருத்துக்களுக்கு/ COMMENTS


Share


Content on this page requires a newer version of Adobe Flash Player.

Get Adobe Flash player