தாயகத்தில் தைப்பூசத்திற்காக 03-01-2015 செவ்வாய்க்கிழமை அன்று மயிலிட்டி ஆலயங்களுக்கு மக்கள் சென்றபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள், மற்றும் காணொளி.
நன்றி 09-02-2015
மயிலிட்டி மக்கள் கடந்த 06-09-2013 அன்று மயிலிட்டி கோயில்களுக்கு சென்று வழிபட்டது நீங்கள் அறிந்தது. இதற்கு முதல் கோயில்களுக்கு சென்றபோது அங்கே எடுக்கப்பட்ட பல புகைப்படங்கள் இணையங்களில் உடன் போடப்பட்டது ஆனால் இந்தமுறை இதுவரை ஒரு புகைப்படம்கூட வெளிவரவில்லை காரணம் அந்தளவுக்கு அரசாங்கம் பயத்தோடும், அதிகாரத்தோடும் ஆளுகின்றது, வெளியில் காட்டமுடியாத நிலைக்கு மயிலிட்டி மாற்றப்பட்டுவிட்டதுதான் காரணம் இவ்வளவு ஆயுதத்தோடு கூடிய பாதுகாப்புக்குள்ளும் கோயிலுக்குள் எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் எமக்கு கிடைத்துள்ளது.
புகைப்படத்தை எடுத்து தந்த பெயர் குறிப்பிடமுடியாத அவருக்கு எமது மனமார்ந்த நன்றியை தெரிவிக்கின்றோம். 03-11-2013
மயிலிட்டி மக்கள் 15-04-2011 அன்று கோயில்களுக்கு சென்றபோது எடுக்கப்பட்டது. 1990ம் ஆண்டின் பின் இன்று தான் மயிலிட்டி கடற்கரையை பார்க்கின்றோம். வேறு என்ன சொல்லமுடியும்?
மயிலிட்டி மக்கள் 15-04-2011 அன்று மயிலிட்டி அம்மன், முருகன் கோயிலுக்குச் சென்று வழிபட்டனர். இதைப்பார்க்கும்போது. நாம் நேரில் சென்று வந்த உணர்வை ஏற்படுத்தியிருக்கின்றது. தற்போதுள்ள சூழ்நிலையில் இந்த ஏற்பட்டை மக்களுக்கு. செய்து கொடுத்த திரு வடிவேஸ்வரன், திரு இளங்குமரன் மற்றும் அனுமதிப்பத்திரத்தை எடுத்துக்கொடுத்தவருக்கும் மயிலிட்டி டொட் கொம் நன்றியை தெரிவிக்கின்றது.
மயிலிட்டி டொட் கொம்மிற்கு மயிலிட்டியில் இருக்கும் கோயில்களின் பெயர்கள் கிடைத்துள்ளது. இவற்றில் சில கோயில்கள் எங்கே இருந்தது என்பது தெரியவில்லை இவை எங்கே இருந்தது என்ற விபரத்தை தெரிந்தவர்கள் எமக்கு அறியத்தரவும், இவை மயிலிட்டி வரலாற்றில் ஆவணப்படுத்தப்படவேண்டியவை, இவற்றில் இல்லாத கோயில்கள் தெரிந்தால் அவற்றையும் தெரியப்படுத்தவும்.