|
_________________________
_________________________
அ-ன்போடு பெற்றெடுத்தாள் எம் அன்னை.
ஆ-ருயிர் உறவுகளும் எம்மோடு.
இ-ன்பங்களை இழந்துவிட்டோம்.
ஈ-ன்றவளை கலங்க வைத்தார்கள்.
உ-றவு, உடமை, உரிமையும் இழந்தோம்.
ஊ-மையாய் இருந்தோம்.
எ-ண்ணங்கள் பல இருந்தும்.
ஏ-க்கங்கள் எம்மோடு.
ஐ-யங்களை தவிர்த்திடு.
ஒ-ற்றுமையாய் இருந்திடு.
ஓ-டிவா எம் தலைவனோடு.
ஔ-வினை ஒழித்திடு.
*
* *-யுதம் ஏந்திடு ஈழம் எமது..!!!
- உங்களில் ஒருவன் அன்பு பார்தீ.
தமிழனென்று சொல்வோம் தலை நிமிர்ந்து நிற்போம் என்றும் உங்கள் பார்தீ..!!! |
_________________________
இணையில்லா உலகத்தில் இளைப்பாற
இடம் கொடுத்தோம்..!!!
இன்று எம் ஈழக் கற்றை
சுவாசிக்க எமக்கு உரிமையில்லையாம்.!!!
எம் உறவுகள் பல இருந்தும்
எமக்கு கல்லரையில் கூட இடமில்லையாம்...!!!
கொத்து கொத்தாய் எம்இனம் அழிந்தும்
இரக்கமில்லா மிருகங்கள் எம் பினகுவியல்களின்மீது
அரசியல் செய்கின்றது..!!!
நாங்கள் அழிந்தாலும் நம் உண்மையான
போராட்டம் அழியாது ..!!!
ஒவ்வொரு தமிழன் இருக்கும்வரை எம்மினத்தை
இழிவுபடுத்தவோ, ஈழம் அமைவதை தடுக்கவோ முடியாது..!!!
எம்மை மதிக்கவிட்டலும் பரவாயில்லை எம்
உணர்வை மிதிக்க வேண்டாம்...!!!
ஈழம் ஒன்றே எமது இலக்கு...அதில்
உயிர்பிரிவது எமது பெருமை..!!!
தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்..!!!
ஈழக் கடவுள் அண்ணனின் தம்பிகளில் ஒருவன், ஈழத் தாயின் அன்பு மகன்..!!!
-உங்களில் ஒருவன் அன்பு பார்தீ..!!! |
_________________________
கலைஞர்திலகம் சின்னத்துரை - நவரத்தினம் (சிற்பாசாரியார்)
மயிலிட்டி முருகன் கோயிலின் சித்திரத்தேரின் வெள்ளோட்டத்தின்போது எடுக்கப்பட்டது
கருத்துக்களுக்கு/ COMMENTS
|
|
தேவரூருக்கு ஏகிய தேவனே தெய்வ மா கலை வாணனே!
|
கலையோடு உறவாடி கணிவான மோழி பேசி
சிலையோடு கதை பேசி சித்திரத் தேராக்கி
நிலையில்லா வாழ்விலும் நிலையன பெயரெடுத்த
மயிலையின் மைந்தனே கலைஞர் திலகமே!
சிம்மானம் ஏறிய சிங்கமே
பாயும் குதிரைகள் கண்ணீர் வடிக்கின்றன
வாகை மாலைகள் சூடிய தேரெல்லாம் வாடுகின்றன
தேவரூருக்கு ஏகிய தேவனே தெய்வ மா கலை வாணனே
முனையன் வளவு முருகன் தேர் [உன் வாழ்வின் வரலாறு]
உன் வாழ்வின் முகவுரை
வற்றாப்பளை மஞ்சம் உன் வரலாறு கூறிடும்
கரவெட்டி மஞ்சம் கட்டயம் கூறும்
ஊற்றங்கரை சப்பறம் உன் உயர்வை காட்டும்
புதுக்குடியிருப்பு சப்பறம் புதுமைகள் பேசிடும்
கிளிநொச்சி முருகன் தங்க ரதமும் தனித்துவம் பேசிடும்
பாயும் சிங்கமும் – பாயும் குதிரையும்
கம்பீர கடாவும் – தோகை மயிலும்
பறக்கும் மயிலும் –பாம்பு
சுழல் சூரனும் – இரும்பனும்
வீறு கொண்ட இடபமும் – மூசிகமும்
காராம் பசுவும் – அன்னமும்
யானையும் – யாழியும்
உம் கலையின் உச்சத்தை காட்டி நிற்கும்
சிறி முருகன் கனக சிற்பாலயம் உன் வரவு கண்டு சிலிர்த்திடும்
கனகசபை தந்த கலை கலைஞர் வழியாக கடல் கடந்தும் பரவிடும்
திக்கெட்டும் உம் புகழ் பரவிடும்.
:-சுதா நவம் |
_________________________
கலைமகளின் கண்மணிகளே
|
மயிலையின் தவப் புதல்வரே எங்கு சென்றீர்,
தன்மானம் காக்க தம்முயிர் தந்தவரே,
வசந்தங்களை துறந்து பாசறை சென்றவரே
எதிரி கதை முடித்து சாதனை ஆனவரே,
கலை மகளின் கண் மணிகளே
உம் கனவுகள் கானல் நீர் ஆகிப்போகாது.
ஒரு கூட்டு பறவையாக நாமிருந்தோம்.
எம் உரிமைக்காக நீர் சிறகடித்து பறந்தீர்.
வீர மாணிக்க தேவன் துறை தந்த நெடுமாறனும்
எங்கள் தங்க மகள் தாரணியும் (பிரபா)
பாலசுந்தரம் தந்த மகன் சதீசும் (ஈழவேதன்) (சுப்ரா)
அவன் அண்ணன் சுவர்ணனும்
இன்னும் முகம் தெரியா உறவுகள் பலரும்.
மூட்டிய வேள்வித் தீ தொடர்ந்து எரியும்.
மாவிட்ட புரம் மடத்தடி பேசும் நெடுமாறன் வீரம்
கட்டைக் காட்டு வெளி கூறிடும் சதீசின் சாதனை
குச்ச வெளி கூறிடும் சுவர்ணனின் கதை
தாயின் மடிச் சுகத்தில் தாலாட்டு கேட்டபடி
வாய் வாட்டு சிரித்திங்கு வாழ்ந் திருந்த குருவிகளே.
பெற்ற வயிறு மட்டும் இங்கே புலம்பித் தவிக்கும்
மற்றவருக்கு உறவின் மகிமை தெரியாது.
ஈழம் புலரத் தொடங்கும் பொழுது ஆரம்பம்
தெற்கே இருளத் தொடங்கும் வேளை ஆரம்பம்.
கொண்ட கொள்கையில் குன்றிடா இலட்சியம்
கொண்டவர் மீதினில் ஆணை
பகை அழிந்து எம் தேசம் புகுவோம்.
சுதா நவம்:-
|
_________________________
திரு தமிழ்செல்வன் அவர்களால் தந்தையர் தினத்திற்காக தனது பாசமிகு அப்பாவுக்கு வரையப்பட்டது.
_________________________
செல்வன் பிரித்தானியா
|
_________________________
|
நீர் வளமும் நில வளமும்
தன்னகத்தே மணம் பரப்பி
தரணியெங்கும் புகழ்மிக்க
நன் – ஊராம் மயிலிட்டி
கடலோடு கவிபாடி மீன் வளம் தேடி
செம்மண் மரவள்ளியும், தக்காளியும்
வாழையுமென – மூலக்கூறுகளின்
ஆதாரமின் நன் - ஊராம் மயிலிட்டி
மருதமும், நெய்தலும்
ஒன்றோடு ஒன்றிணெந்த
சமத்துவமும், கலாச்சாரமும்
நாகரீகமும் மிளிரிய
நன் - ஊராம் மயிலிட்டி
இன்று – கடலும் மண்ணும்
சிங்கத்தின் கால் பட்டு
சீறி சினக்கின்றன.......
எப்போ? அன்னிய தேசம் போன
ஈழ மகன் வருகைக்காய்..........
தாரணி |
_________________________
|
|
பாலன் வதையோ? பார்....ஏ...பதில் கூறு.... |
இ |
லட்சியம் உனக்குமோ? |
இ |
ச் சிங்கத்தின் கூட்டுச்சதிக்கு துணைபோன கண்டங்களே, |
|
சட்டை கொடுக்குமா? சாட்டை கொடுக்குமா? |
சி |
ந்தனையில் உன் வதனமோ? |
எ |
திரி அறியா உன் விழியோ? |
|
ரணங்களாய் பூவுடலில் ரவைகளோ? |
உ |
ன் அநீதியில் மர்ணித்தது நீ அல்ல
|
மனிதம்......... |
பவதா |
|
_________________________
மிகக் கடினமானவை மூன்றுண்டு
|
1. இரகசியத்தை காப்பது
2. இழைக்கப்பட்ட தீங்கை மறப்பது.
3. ஓய்வு நேரத்தை உயர்ந்த வழியில் பயன் படுத்துவது. |
_________________________
நன்றி காட்டுவது மூன்று வகையிலும்
|
1. இதயத்தால் உணர்தல்.
2. சொற்களால் தெரிவித்தல்.
3. பதிலுக்கு உதவி செய்தல். |
_________________________
பெண்மையை காக்க மூன்றுண்டு
|
1. அடக்கம்.
2. உண்மை.
3. கற்பு. |
_________________________
மகிழ்ச்சியான வாழ்க்கைக்குரியவை மூன்றுண்டு
|
|
1. சென்றதை மறப்பது.
2. நிகழ்காலத்தை நேர்வழியில் செலுத்துவது.
3. வருங்காலத்தைப் பற்றிச் சிந்திப்பது. |
|
_________________________
இழப்பு மூன்று வகையிலுண்டு
|
|
1. சமையல் அமையாவிட்டால ஒரு நாள் இழப்பு.
2. அறுவடை சிறக்காவிடில் ஓராண்டு இழப்பு.
3. திருமணம் பெருந்தாவிட்டால் வாழ்நாள் முழுவதும் இழப்பு |
|
_________________________
உயர்ந்த மனிதனின் வாழ்வு மூன்று வகையில் இருக்கும்
|
|
1. அவன் ஒழுக்கத்தோடிருப்பதால் கவலையற்றிருப்பான்.
2. அவன் அறிவாளியாயிருப்பதால் குழப்பங்களற்றிருப்பான்.
3. அவன் துணிவாக இருப்பதால் அச்சமின்றிருப்பான். |
|
_________________________
மிகவும் பிடித்த பாரதியார் கவிதை
தேடிச் சோறு நிதந்தின்று – பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி – மனம்
வாடித் துன்பமிக உழன்று – பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து – நரை
கூடிக் கிழப்பருவம் எய்தி – கொடுங்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும் – பல
வேடிக்கை மனிதரைப் போலே – நான்
வீழ்வே னென்று நினைத்தாயோ ! |
_________________________
இழப்பு
துன்பத்தை நினைத்து
மகிழ்ச்சியை இழக்காதே
காதலை நினைத்து
வாழ்க்கையை இழக்காதே
சோதனையை நினைத்து
சாதனையை இழக்காதே
தோல்வியை நினைத்து
வெற்றியை இழக்காதே |
_________________________
இறைவன் எங்கே
அடி எடுத்து வைக்கும் ஆலயத்து வாசலிலே
பசியால் வதங்குகின்றது ஒரு பச்சை குழந்தை
தாண்டிப்போய் கருவறையில் கல்லிலே
இறைவனை தேடுகிறது ஒரு கூட்டம். |
_________________________
|
ஈழம் செந்தமிழ் தேவியின் சிறப்பு
பெற்ற தனி பூமி.....
இயற்க்கை எழில் கொஞ்சிவிளையாடும்
சொர்க்க பூமி நம் ஈழபூமி
பச்சை பசேலென்று வயல்வெளிகள் வந்தாரை
வரவேற்க்க காத்திருக்கின்றன.....
விலங்குகள் மற்றும் பறவைகளும் ஏன்!
எமக்கும் கலையாத கனவாய் இருந்த சொர்க்கபூமி.....
அன்னை பத்து மாதங்கள் சுமந்து எம்மை
பெற்றெடுக்க எங்களோடு கொஞ்சி விளையாடக்
காத்திருந்தது எம் ஈழபூமி.....
தொன்று தொட்டு பழமையிலிருந்தே பண்பாட்டில்
சிறந்து விளங்கியவன் தமிழன்
இதுதான் எங்களின் குற்றமா ???
நாம் தமிழன் அல்லவா வந்தாரை வரவேற்றோம்
இருக்க இடம் கேட்டார்கள் அதைக்கொடுத்தோம்
படுக்க பாயும் கேட்டார்கள் அதையும் கொடுத்தோம் ....
பின்பு எம்மை கேட்காமலே எம் உறவுகளை இலட்சம் இலச்சமாய் கொன்றுகுவித்தர்கள்.....
இழந்தோம் இழந்தோம் தாயை இழந்தோம்
தந்தையை இழந்தோம் ....
அன்பு அண்ணன் தம்பியை இழந்தோம்
பாசமான அக்க தங்கையை இழந்தோம் ....
இழந்தோம் இழந்தோம் குடிஉரிமை இழந்தோம்
இழந்தோம் இழந்தோம் பிறப்புரிமை இழந்தோம்
இழந்தோம் இழந்தோம் கல்வி உரிமையும் இழந்தோம் .....
காந்தியின் அகிம்சா வழியில் சென்றோம்
பயனில்லை இலட்சம் இலச்சமாய் உறவுகளைத்
தான் இழந்தோம் .....
இன வெறிப்பிடித்தவர்களின் காமப்பசிக்கு
இறையாகிய அக்கா தங்கையின் கதரல்கூட
மறையவில்லையே .......
அனால் மறைந்து போனது எம் தமிழினம்......
கடற்கரை மணலிலே நாம் பதித்த பாதச்சுவடுகளை
அடித்துச்செல்வது போல....
இனவெறி என்ற சுனாமி அலைகளால் எம்
தமிழினமே இருந்த சுவடுகள்கூட இல்லாமல்
போய்விட்டதே .....
மனிதா உனக்கு எங்கு போனது உன்
மனிதாபிமானம் ????
காக்கை கூட ஒன்று சேருமாம் தன்னினம்
காக்க ...........ஏன்
ஐந்தறிவு படைத்த உயிரினமே அதன்
உயிர்களை மதிக்கும்போது ஏன்
நீ மட்டும் வேடிக்கை பார்த்தாய் ????
நாம் தமிழர்கள் என்ற காரணத்தாலா???
ஏன் தமிழனாய் பிறந்தது எம் குற்றமா ???
வந்தவர்களை வரவேற்பது தான் எம் குற்றமா???
கண் இமைகள்கூட துரும்புகள்
எதிர்நோக்கும்போது முடிக்கொல்லுமமாம்
தம்மை பாதுகாக்க .....ஏன்
நாம் மட்டும் எம்மை பாதுகாத்துக் கொள்ளக்கூடாதா??? இது எம் குற்றமா???
தேடினேன் தேடினேன் எம் உறவுகளின்
கல்லறைச் சுவடுகள்கூட எமக்கு கிடைக்கவில்லையே.......
கற்பனை செய் காலம் வருமென்று அறின்ஞர்
அப்துல்கலாம் சொன்னார் அன்று அதனால்
இன்று வரை கற்பனை காண்கிறேன் ஈழம்
எம்வசப்படும் என்றெண்ணி .........
தேடினேன் தேடினேன் விடியலைத்தேடி வாழ்வின் வசந்தகாலம் வருமென்று.........
நன்றி திரு சின்னத்தரை பார்த்தீபன் |
_________________________
உன்னை நேசிக்கப் பழகிக் கொள்...
உன்னை நேசிக்கப் பழகிக் கொள்..
ஏனென்றால்...?
இது கலிகாலம்.
நீ கனகாலம் நேசித்த காதலி...
உன்னைக் கைவிட்டுச் செல்லலாம்.
என்றும் உன் மனதில் நிறைந்த மனைவி
மாற்றானுடன் கைபிடித்துச் செல்லலாம்.
பாசமுடன் வளர்த்த பிள்ளைகள்...
பிசாசுகளாய் மாறலாம்.
நண்பன் எதிரியாகலாம்.
நட்பு பகையாகலாம்.
உறவுகள் பிளவுகளாகலாம்.
உணர்வுகள் மரத்துப் போகலாம்.
உண்மை சாகலாம்.
தர்மம் தற்கொலை செய்யலாம்.
நியாயம் நிலையற்றுப் போகலாம்.
அன்பு அறவே அற்றுப் போலாம்.
இதற்கெல்லாம் நீ கலங்காதே...
நடைமுறையில் நடப்பவைகளே இவை...
மற்றவர்கள் உன்னைப்பற்றி எண்ணாத போது ?
நீ ஏன் அவர்களைப் பற்றி எண்ணுகின்றாய் ?
மற்றவர்கள் உன்னை நேசிக்காத போது ?
நீ ஏன் இவர்களை நேசிக்கின்றாய்.
இது கலிகாலம்...
இக் காலத்திற்கும்
இக் கால இயந்திர மனிதர்களுக்கும்.
ஏற்றால் போல்
வாழப் பழகிக்கொள்
மற்றவர்களை நேசி...
அதற்காய்...
உன்னைவிட அதிகம்
அவர்களை நேசித்து
அவர்களுக்காய் உயிரை விட்டுவிடாதே...
எனவே... உன்னை நேசிக்கப் பழகிக்கொள்
ஏனென்றால் இது கலிகாலம்...
கௌசிகன் |
_________________________
_________________________
நினைவுகளாய்
ஆழ்கடலை ஆர்ப்பரித்து பாட்டிசைக்க
மாலைக்கதிரவன் வானில் பல மாயம் புரிகையில்
மேக நெற்றியில் வட்டப்பொட்டென
நிலா மகள் வந்து விட
நிலாச் சோறு உண்ட காலம்
சொர்ப்பணமாய் மாறியதேன் ?
பிறந்ததும் மிகக்கற்றுத்தெளிந்ததும்
இழந்த தமிழ் பண்பினை போற்றி
வாழ்ந்த மண்மீது கொண்டகாதல் தேயாது,
மலரும் நினைவுகளாய் வந்தது என் நினைவில்
வாழ வழியின்றி தினம் வடுவோர்
வளம் கண்டது என் ஊரில்...
வளநிறை நல்மயிலை தலைநிமிர்
தானென்று ஆங்காரமாய் நின்ற நாள் என்னமோ
இன்று ஊர்திகளின் அணிவகுப்பில்
நசுங்குண்ட நங்கை போல
உடம்பெல்லாம் உரசலிலே எரிவுகண்டு
பிணம்தின்னி கழுகுகளின் உறைவிடமாய்
கோலமிழந்து உனை இழந்தாய்
கனா ஒன்று நான் கண்டேன்
முன்போல எழில் மயமாய் எனை அழைக்க
நானும் வருவதாய்த்தான் சொல்லி இருந்தேன்
அது உனக்கும் எனக்கும் தூரம் கொஞ்சமென நினைத்தேன்
இது வெடிகளின் ஒசைகளின்பின்
ஆனால் உன்னை புத்தன் பூமி என்றல்லவா சொல்கிறார்கள்
அப்ப சித்தன் சொன்னான் நீ எங்கள் பூமி என்று
பொறுத்திரு வருவோம் அழிந்திடும் இடைவெளியெல்லாம்
வருவோம், நாம் இனி தணியோம்
ஆளான நாள் முதலாய் ஆன வதை போதுமம்மா
மயிலை உன் வாடகை இல்லா வசந்தத்தை வசீகரிக்க
உன் சேய்களாய்
திருமதி உமை ஜெயறட்ணம் |
_________________________
_________________________
|
|