Content on this page requires a newer version of Adobe Flash Player.

Get Adobe Flash player

பாடசாலை
   

Content on this page requires a newer version of Adobe Flash Player.

Get Adobe Flash player

Content on this page requires a newer version of Adobe Flash Player.

Get Adobe Flash player


யாழ்ப்பாணம் மயிலிட்டி கலைமகள் மகா வித்தியாலயத்தின்,
ஓய்வு பெற்ற அதிபர் ,பண்டிதர்  ௵ரங்கம் அப்புத்துரை அவர்களின்,
 "20ம் நூற்றாண்டில் வாழ்ந்த, 21ம் நூற்றாண்டில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற புலவர்கள்" 
எனும் நூல் வெளியீட்டு விழாவில்,நூலாசிரியரை  மதிப்பளிக்கும் முகமாக கலைமகளின் பழைய மாணவர்கள்


வாழ்த்தி வழங்கிய வாழ்த்திதழ்

திருவாழும்   பதிமைலங்   கூடலூரில்
௵ரங்கம்   தம்பதிகள்  தம்வாழ்வில்   
மெருகேற   செய்தவத்தால்  மேதினியே 
மேன்மையுறவந்த  அப்புத்   துரைமேலோன்
திருவேறும்  ஆசிரிய  வாண்மைசேர
பண்டிதர்  என்றரிய  பட்டம்பெற்று
மருவேறு  சைவப்  புலவருமாயாகி
உயரதிபர்  பதவிகண்டாய்  உயர்ந்தேவாழி!

அந்நாளில் அமெரிக்கப் பாதிரிமார்
அமைத்த உயர்கல்லூரியாய் மிளிர்ந்து
பிந்நாளில் கல்விகுன்றி பேரழிந்து
பேய்ப் பள்ளிக்கூடமென்று பேர்தாங்க
நன்னாளில் அதிபராய் எமதூர்வந்து
கல்லூரிக் கோர்பெயரை தேடியன்று
மன்னு கலைமகள் கல்லூரியென்று
மறுநாமம்   சூட்டிநின்ற   மன்னவனே நீ வாழி!

கட்டிடங்கள்  ஏதுமில்லை  கதிரையில்லை
கல்விதனை தந்திடவே குருவுமில்லை
கொட்டினரே  அத்தனையும்  கலைமகளின்காலடியில்
காசினியில் கல்லூரிப் பெயரதுவும்உயர்ந்ததுவே
படிப்படியாய் கல்வியிலே உயர்ந்துவந்து
பண்புநிறை ஆசிரியர் பலரைப்பெற்று
பட்டப்  படிப்பிற்கு  பலபேரைஅனுப்பிநின்ற
பண்டிதனே பாரதனில் என்றும்வாழி!

வேலியில்லாக்  கல்லூரிக்கோர்  வேலியானாய்
சுற்றுமதில் கட்டடங்கள் தந்தாய்வாழி
காலியாய் இருந்த வகுப்பெலாம்நிரம்பிடவே
கல்விதனை தந்த கற்றவனேவாழி
ஞாலமதில் வாழ்ந்த புலவர்தம்பெருமையினை
பத்தகமாய்தந்த புண்ணியனே நீவாழி
தாலியுடன் நின்மனையாள் தரணியிலே வாழ்ந்திடவே
தலைமகனே நீஎன்றும் வாழி! வாழி!!

கனடாவில் 15-04-2012 அன்று கலாபூஷணம் பண்டிதர் சி.அப்புத்துரை அவர்களின் நூல் வெளியீட்டு விழா மயிலிட்டி மக்களால் மிகவும் சிறப்பாக நடைபெற்றது அன்று நூலாசிரியரை மதிப்பளிக்கும் முகமாக கலைமகளின் பழைய மாணவர்கள் வாழ்த்தி வழங்கிய வாழ்த்திதழ்.

_________________________________________________________________________


கனடாவில் 15-04-2012 அன்று கலாபூஷணம் பண்டிதர் சி.அப்புத்துரை அவர்களின் நூல் வெளியீட்டு விழா மயிலிட்டி மக்களால் மிகவும் சிறப்பாக நடைபெற்றது அன்று திரு திருமதி அப்புத்துரை அவர்கள் மயிலிட்டி கலைமகள் மகாவித்தியாலயத்தில் ஆற்றிய சேவையை பாராட்டி கௌரவிக்கப்பட்டபோது மயிலிட்டி மக்கள் சார்பாக வழங்கப்பட்ட வாழ்த்து மடல்.

_________________________________________________________________________

அதிபர் தந்த வாழ்த்து மடல்