புதிதாக ஆரம்பித்து எங்கோ ஒரு மூலையில் இருந்த இணையத்தளம் எம்மைப்பார்த்து எமது வளர்ச்சியைக்கண்டு தானும் எம்மைப்போல் வர முயற்சிக்கின்றது அதற்காக மயிலிட்டி டொட் கொம் தனது நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவிக்கின்றது.

____________________________________

மயிலிட்டி ஒன்றியம் முதன்முதல் 2005ம் ஆண்டு ஆரம்பித்தது முதல் 2008 வரை திரு ஜெயறட்ணம் சற்குணநாதன் (ஜெயா) செயலாளராக கடைமையாற்றினார் அவரின் கடின முயற்சியாலும் அவரது துணைவியாரின் ஒத்துழைப்பாலும் ஜெயறட்ணம் ஒன்றியத்தை மிகவும் முன்னேற்றமடையச்செய்தார். மயிலிட்டியைச் சேர்ந்த எல்லோரையும் முதன்மைப்படுத்தி செயற்படவேண்டும் என்று ஒவ்வொரு வீடாக ஏறி இறங்கினார். ஆனால் ஒரு உயர்ந்த மனிதரால் அவருக்கு கிடைத்த பட்டம் மயிலிட்டி ஒன்றியத்தை நாசமாக்கிவிட்டான் என்று. இதில் கவலைக்குரியது என்னவென்றால் திரு ஜெயறட்ணம் மயிலிட்டி ஒன்றியத்தின் அடிப்படை அங்கத்தவர் உரிமையிலிருந்து விலகிவிட்டார் தனது அங்கத்தவர் பத்திரத்தை திருப்பி உடனடியாக அனுப்பவும் சொல்லிவிட்டார் தனக்கும் ஒன்றியத்திற்கும் எனிமேல் எந்தவித தொடர்பும் இல்லை என்று. ராஜபக் ஷா குடும்பம் ஆட்சி செய்ததுபோல்தான் சங்கத்திலும் ஆட்சி நடக்கின்றது.

ஜெயறட்ணத்திற்கே இந்த நிலை என்றால் மற்றவர்களுக்கு ?

பாவம் நல்லவர்கள் ?


மயிலிட்டி மக்களிற்கு


எமது இணையத்தளத்திற்கு வந்த கடிதத்தை பாருங்கள். நாம் அவர்களின் தனிப்பட்ட படங்கள் எதையும் போடவில்லை பொது நிகழ்ச்சிகளில் எடுத்த படங்களைத்தான் போட்டோம். இவர்களின் இப்படியான செயல்களால் மயிலிட்டி மக்கள் இவர்களை புரிந்துகொள்ளக்கூடியதாக இருக்கின்றது. அவர்களின் வற்புறுத்தலுக்கமைய சில படங்களில் உள்ள அவர்களை மட்டும் மிகவும் மனவருத்தத்துடன் மறைப்பு செய்கின்றோம்.

நாம் ஆங்கில அறிவு இல்லாமல் இத்தனை உலகநாடுகளில் பார்க்கும் அளவிற்கு இந்த இணையத்தளத்தை செயற்படுத்தவில்லை.


இது சாதி மதம் குறிச்சி தெரு மேல் கீழ் எந்தவித வேறுபாடுமின்றி அனைத்து நாடுகளிலும் வாழும் மயிலிட்டி மக்களிற்காக ஆரம்பிக்கப்பட்டது இது உங்களின் இணையத்தளம்.