எம் மண் வாசனை இணையமெங்கும் நுகர வகை செய்வோம்
மயிலிட்டி வாசகர்களிற்கு வணக்கங்கள்!
மயிலிட்டி டொட்கொம் என்ற பெயரில் இணையம் ஆரம்பிக்க வேண்டும் என்று எமது மனதில் தோன்றியபோது இவ் இணையம் வேறு கிராமத்தவரால் பதிவு செய்யப்பட்டு எமது கிராமம் போலவே எந்த அடையாளமும் இல்லாமல் வெறும் இணைய முகவரியுடன் இருந்நது. இந்த இணையத்தை நாம் பெறுவதிற்கு கலியுகன் தனி மனிதனாக பல நாட்கள் பல இரவுகளில் நித்திரை இல்லாமல் பல டொலர்கள் தொலைபேசிக்கு செலவு செய்து பல சிரமத்தின் பின் எமக்கு கிடைத்தது, அதுவும் பாவிப்பதிற்கு மட்டும், கணணி வேலைகளில் எமக்கு உதவுவதாக பிரசாந்தன் ( பெரியதம்பி ) கூறியபடியால் அவரிடம் அந்த பொறுப்பை கொடுத்தோம் கொடுத்ததிலிருந்து அவர் சரியான முறையில் தேவையான நேரத்தில் அவர் எமக்கு உதவி செய்யாததால் எம்மால் எந்தவிதமான செயற்பாடுகளையும் நல்ல முறையில் கணனியில் இதுவரை செய்ய முடியவில்லை. 2008ம் ஆண்டின் ஓன்றுகூடல் படங்கள் மற்றும் 2008ம் ஆண்டின் மலரை போடும்படி பலமுறை கேட்டோம் 2009 August வரை அவர்கள் போடவில்லை. 2009 March மாதத்திலிருந்து இணையத்தளத்திலிருந்த பல படங்கள் அகற்றப்பட்டன நாம் பல முறை அந்தப்படங்களை மீண்டும் போடுவதிற்கு முயற்சி செய்தோம் அவர்கள் அதை போடவில்லை. 2009 August மாதத்தின்பின் இணையத்தின் விரைவான பதிவேற்றம் நன்மை கருதி கணனியின் பொறுப்பை நாமே ஏற்று எமது செலவில் பல மாற்றங்களுடன் எமது மயிலிட்டி தொடர்பான தகவல்களை தன்னகத்தேகொண்டு புதுப்பொலிவுடன் உருவாக்கப்பட்டுள்ளது. இப்போது இதை பார்த்ததும் நீங்களே புரிந்துகொண்டிருப்பீர்கள்.
நாட்டில் ஏற்பட்ட போர்ச்சூழல் காரணமாக மயிலிட்டி மக்கள் பாதிக்கப்பட்டு முற்றாக வெளியேற்றப்பட்டனர். அதன் பாதிப்பால் அனைவரும் சிதறுண்டு வாழ்ந்துவருகின்றனர் குறிப்பாக புலம்பெயர் நாடுகளில் வாழ்ந்துவருகின்றபோதும் நாங்கள் பிறந்த கிராமத்தில் காலணிகள் இல்லாமல் ஓடிவிளையாடிய மண்ணை மயிலிட்டி என்ற பெயரை அனைவரின் மனங்களில் இருந்தும் மறைக்கப்பட்டுவிடக்கூடாது என்பதிற்காகவும் எமது அடுத்த சந்ததியினருக்காகவும் இவ் மயிலிட்டி டொட்கொம் உருவாக்கப்பட்டுள்ளது.
இவ் இணையத்தில் மயிலிட்டியின் வரலாறு. மயிலிட்டி தொடர்பான புகைப்படங்கள். மயிலிட்டி ஆலயங்கள். பாடசாலைகள். மரண அறிவித்தல்கள் மாவீர்ர்கள். ஒன்றியம் போன்ற விபரங்களுடன் உருவாக்கம் செய்யப்பட்டுள்ளது.
மயிலிட்டி தொடர்பான தகவல்களை எல்லா நாடுகளிலும் வாழ்பவர்கள் எமக்கு அனுப்பி உதவி செய்வதின் மூலம் இவ் இணையத்தின் ஊடாக வெளிக்கொணர்வதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம்.
ஒன்றே செய்யினும்
நன்றே செய்வாய் அதை
எப்படியும் செய்வாய்
மயிலிட்டி வளர்ச்சிக்கு
நன்றி
|