என்ற நூலில் எல்லா ஊர்களின் ஆய்வு குறிப்புக்கள் உள்ளன.
அதில் மயிலிட்டியின் ஆய்வை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன்.
மயிலிட்டி (வலி.வ.33.6)
மயில்+இட்டி= மயிலிட்டி. காங்கேசன்துறைக்குக் கிழக்கே கடற்கரை
ஓரமாக மயியிட்டி ஊர் அமைந்துள்ளது. இவ்விடப் பெயரை மயில் + ஈட்டி எனப்பிரித்துப் பொருள் கூறுவாருமுளர். மயில் வடிவான அடையாளம்பொறிக்கப்பட்ட ஈட்டிப்படையினர் தங்கியிருந்த இடம். பின்னாளில் மயிலிட்டிஎனப் பெயர்பெற்றதென்பர்.ஆனால் மயிலாப்பூர் (மயிலை) வாசிகள் வந்து தங்கியிருந்தஇடம். என்ற பொருளில். மயிலை+இட்டி= மயிலிட்டி ஆயிற்று எனக் கொள்வதே பொருத்தம்.
இவ்வுர் "மயிலையம்பதி" எனத் தண்டிகைக் கனகராயன்பள்ளிலே வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆரியச் சக்கரவர்த்தி காலத்தில் மயிலாப்புரிலிருந்து வரவழைக்கப்பட்ட அரசிறை அலுவலரானநரசிங்கதேவர் தங்கியிருந்த இடம் (மயில் + இட;டி) மயிலிட்டி உன வழங்கிற்று என்கிறார்வ.குமாரசாமி (1932;26)மயிலிட்டியில் வீரமாணிக்கதேவன்துறை பெரியநாட்டுதேவன்துறை நரசிங்கதேவன்துறை முதலிய பெயர் கொண்ட இடங்களுமுள்ளன.இங்கு பழமை வாய்ந்த கண்ணகி
அம்மன் கோயிலுள்ளது.கோயில் அமைந்தவிடம் "தேவியா கொல்லை"எனப்படும். கோயிலின் முன்அமைந்துள்ள குளம் "தேவகுளம்" என்று பெயர் பெறும்.ஒல்லாந்தரின் தோம்புகளிலும் இப்பெயரே குறிப்பிடப்பட்டுள்ளது.ஆனால் இங்குள்ளோர் இதனைத் "தொண்டைமான் குளம்" என்றே வழங்குகின்றனர். தொண்டை நாட்டிலிருந்து குடிபெயர்ந்தோர் மயிலிட்டியிற் குடியேறினர் என
இராசநாயகம் (1923 :239-246)கூறுவர். ஒல்லாந்தர் காலத்தில் மயிலிட்டியிற் பெரிய தோவாலயம்
இருந்தமைபற்றிய செய்திகள் பிலிப்ஸ் பால்தேயஸ( Phillipus Badaius -1672)
குறிப்புக்களால் அறியப்படுகின்றன. அத் தேவாலயம் அழிந்து மண்மேடாகக் காணப்படுகின்றது.
அதன் அருகே புதிய தேவாலயம் இப்போது அமைந்துள்ளது. இவ் ஊர் பற்றி வ.குமாரசாமி (1932:29) குறிப்பிடும் இரு கருத்துக்கள் வருமாறு:
(1) மயிலிட்டியாவர்களது குல தெய்வம் பூதராயர் என்பர். இப்பெயரின் உற்பத்தியை ஆராயுமிடத்து. இது"போத்தரையர்"என்பதன் திரிபாகக் காணப்படுகின்றது. போத்தையர் என்பது பல்லவ மன்னரின்
ஆட்சிப் பெயராகும் இந்தியாவில் பல்லவரின் கீழ் அரசபணி செய்தவர்களின் மரபினர் அவ்வரசரைத் தெய்வமாக்கிக் கோயில் அமைத்து வணங்குவராயினர் என்னும் கொள்கை வழுவாகாது.
(1) மயிலிட்டியில் "பள்ளம்தரை" என்ற ஓரிடம் உண்டு. இது பழைய உறுதிகள். தோம்புப்பதிவு. காணிப்பதிவுப் புத்தகங்களில் "பள்ளம்திரை" காணப்படுகின்றது. இது பல்லவ திரையர் ஒருவருக்கு உறைவிடம் ஆயினமையின் "பல்லந்திரை" என்றழைக்கப்பட்டு அது "பள்ளந்திரை" ஆகி பின் "பள்ளளந்தரை" ஆக மாறிற்று எனலாம்.
இப் பள்ளந்தரையில் முன்னாளில் மண்டலாதிபதிகள்.பிரபுக்கள் முதலியோர் வாழ்ந்தனர் என்றும்.அவர்கள் மரபினேர் இருபாலை .கோப்பாய். தெல்லிப்பளை. மாவிட்டபுரம். கந்தரோடை ஆகிய பகுதிகளிற் சிறந்து விளங்கினர் என்னும் அறியப்படுகிறது. மயிலிட்டியின் வடபாலுள்ள சங்குவத்தை. மயிலியோடை.தோரணப் புலம். முதலிய குறிச்சிப் பெயர்களும் நோக்கத்தக்கன.
அன்ரன் ஞானப்பிரகாசம் ( றாஜ்)
நன்றி திரு அன்ரன் ஞானப்பிரகாசம் அவர்களுக்கு
திரு இராசரத்தினம்(நேசம்) அவர்கள் மாசி மாதம் 2013 இல் தனது தாய் தந்தையாரின் ஞாபகமாக இந்த புத்தகத்தை வெளியீடு செய்துள்ளார். மயிலிட்டி மக்களின் வரலாறுகளை எழுதியதையிட்டு நாம் மகிழ்ச்சி அடைகின்றோம். அவர் இதை எழுதியதிற்காக மயிலிட்டி மக்கள் சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்ளுகின்றோம். உங்களின் நிறை குறைகளை தெரிவியுங்கள் அவைகள் எங்களின் புத்தக வெளியீட்டுக்கு பெரும் உதவியாக இருக்கும் என நம்புகின்றோம்.
நன்றி
அதிபர் சி.அப்புத்துரை அவர்களின் இரண்டாவது பாகம் நூல் வெளியீட்டு விழா கனடாவில் நடைபெற்றது. அதற்கு மயிலிட்டி மக்களை அழைத்திருந்தார்கள். சிலர்தான் சென்றிருந்தார்கள். அதிபர் சுகயீனமுற்றிருக்கின்றார் என்று உலகம் முளுவதும் தெரிந்து அதிபரை நலம் விசாரிக்கின்றபோது அந்த விழாவிற்கு செல்லாத கனடாவில் இருப்பவர்கள் ஒரு முறையேனும் போய் பார்க்காதவர்கள் தங்கள் புத்தகங்ளையும் இணையத்தையும் அழகு படுத்துவதற்கு மட்டும் அவர்களின் புகைப்படங்களை கேட்டு வீட்டுக்கு நடையாய் நடக்கின்றார்கள். நடிகர் வடிவேலு சொல்வதுபோல் காமெடியாக இருக்கின்றது. இதைப்படித்ததும் அதிபரைத் தேடி ஒரு கூட்டம் போகும் காரணம் மக்களுக்கு எதையாவது நாங்கள் சுட்டிக்காட்டியவுடன் ஒன்றும் தெரியாதவர்களைப்போல் நாசுக்காக மாற்றிவிடுவார்கள்.
“வீரம் செறிந்த மண்” இந்த நூலின் மூலம் எமது மயிலிட்டி மக்கள் தேவர்கள் பரம்பரை என்றும் அவர்களின் வரலாறு பற்றியும் எழுதி வெறியிட்டமைக்காக, திரு இரத்தினராசா அவர்களுக்கு மயிலிட்டி மக்கள் சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கின்றோம்