யாழ். மயிலிட்டியைப் பிறப்பிடமாகவும், புத்தூர் கிழக்கை வதிவிடமாகவும் கொண்ட சின்னத்துரை விஜயம்மா 06-06-2013 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் மாரிமுத்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான ஐயம்பிள்ளை பரிமளம் தம்பதிகளின் மருமகளும்,
காலஞ்சென்ற சின்னத்துரை(உதவி அஞ்சல் அத்தியட்சகரும், சமாதான நீதவானும்) அவர்களின் பிரிய பத்தினியும்,
காலஞ்சென்ற நேசரத்தினம், சபாரத்தினம், மகேஸ்வரி, யோகேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற செல்லையா, கனகம்மா, காலஞ்சென்ற சரவணமுத்து, இராசரத்தினம், நடராசா, இரத்தினம், தர்மலிங்கம், இராசதுரை, குணசிங்கம், இராணி அம்மா, இராசாத்தி அம்மா ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 07-06-2013 வெள்ளிக்கிழமை அன்று புத்தூரில் நடைபெற்றது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
|
|
இவரது பிரிவால் துயருறும் குடும்பத்தினருக்கு அனைத்து உலக மயிலிட்டி மக்கள் சார்பாக மயிலிட்டி . கொம் ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கின்றது.
|