கலாபூஷணம் பண்டிதர்.திரு.சீறீரங்கம் அப்புத்துரை அதிபர் மயிலிட்டி கலைமகள் மகா வித்தியாலயம்.
யாழ்பாணம் இளவாலை மயிலங்கூடலைப் பிறப்பிடமாகவும் கனடாவை வதிவிடமாகவும் கொண்ட பண்டிதர்.திரு.சிறீரங்கம் அப்புத்துரை அவர்கள் 11-10-2012 வியாழக்கிழமை கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார் சீறிரங்கம் சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மகனும் குப்பிளான்
சுப்பையா தில்லைமுத்துவின் அன்பு மருமகனும் இரத்தினம் (ஆசிரியர்) அவர்களின் அன்புக் கணவரும் Dr. அன்பழகன் (அவுஸ்ரேலியா), இளவழகன் (இங்கிலாந்து), இந்துமதி (இங்கிலாந்து), சாந்தி (கனடா), ஆகியோரின் பாசமிகு தந்தையும் இராசேந்திரம் (ஆசிரியர்), பொன்னையா (ஆசிரியர்), செல்வநாயகி, செல்வலக்சுமி, ஆகியோரின் சகோதரனும் நிலோசனி (அவுஸ்ரேலியா), விமலினி (இங்கிலாந்து), சதீஸ்வரன் (இங்கிலாந்து), சிவபாலன் (கனடா), ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆருரன், அனந்தன், ஆத்மீகன், அபூர்வா, அதீதன், அபிதா, ஆரண்யா, அகல்யா, ஆதித்தன், ஆகியோரின் பேரனும் ஆவார். அன்னாரின் பூதவுடல் வெள்ளிக்கிழமை 12-10-2012 பி.ப 5.00 மணிதொடக்கம் 9.00 மணிவரை
4164 SHEPPARD AVENUE EAST (MIDLAND/SHEPPARD) OGDEN FUNRAL HOMES இல் பார்வைக்காக வைக்கப்பட்டு,சனிக்கிழமை காலை 11.00 மணியிலிருந்து 1.30 மணிவரை ஈமைக்கிரியைகள் நடைபெற்று பின்னர் FOREST LAWN 4570 YONGE STREET (YONGE/401) CEMETERY இல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள், மயிலிட்டி மக்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தகவல் குடும்பத்தினர். மற்றும் மயிலிட்டி . கொம்
தொடர்புகளுக்கு
அம்பிகா
:
416 282 6668
சாந்தி
:
416 438 1937
உங்கள் அனுதாபச் செய்திகளை அனுப்ப விரும்பினால் worldwide@myliddy.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.
இவரது பிரிவால் துயருறும் குடும்பத்தினருக்கு அனைத்து உலக மயிலிட்டி மக்கள் சார்பாக மயிலிட்டி . கொம் ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கின்றது.
அனைத்து உலக மயிலிட்டி மக்கள் மயிலிட்டி . கொம் மற்றும் மயிலிட்டி . கொம் அறக்கட்டளை.
மயிலிட்டி கலைமகள் மகாவித்தியாலய அதிபர் பண்டிதர் கலாபூசணம் சி.அப்புத்துரை அவர்களின் பூதவுடல் மக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டபோதும், மற்றும் இறுதிக் கிரியைகள் நடைபெற்றபோதும், கனடாவில் அவரின் புத்தக வெளியீடு மயிலிட்டி மக்களால் நடைபெற்றது நீங்கள் அறிந்தது. அப்பொழுது மயிலிட்டி மக்களின் சார்பில் அதிபர் அவர்களை கௌரவித்து வாழ்த்து மடல் வழங்கப்பட்டது. அந்த வாழ்த்து மடலைத்தான் அவரின் குடும்பத்தினர் அவரின் பூதவுடலோடு வைத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதிபரின் வாழ் நாளில் எவ்வளவோ இதேபோல் வேண்டியிருப்பார் ஆனால் அதை எல்லாவற்றையும் விட மயிலிட்டி மக்களால் வழங்கப்பட்ட வாழ்த்துமடலுக்கு முக்கியத்துவம். கொடுத்து அதை மட்டும் அவரின் பூதவுடலோடு வைத்திருந்ததை பார்க்கும்போது எங்களுக்கு மிகவும் சந்தோசமாக இருந்தது, நீங்களும் இங்கே உள்ள படங்களில் அதை காணலாம். அதிபர் இப்போது இல்லாத காலத்திலும் அவரது குடும்பத்தினர் எங்கள்மேல் (மயிலிட்டி மக்கள் மிது) அளவுகடந்த பாசமும், மரியாதையும் வைத்திருப்பதையிட்டு நாங்கள் அவர்களுக்கு நன்றி கூற கடமைப்பட்டுள்ளோம்.
அதிபரிள் மறைவையொட்டி மயிலிட்டி . கொம்மிற்கு பலர் அனுதாபச்செய்திகள் அனுப்பியிருந்தார்கள். அதை அவர்களிடம் தெரிவித்தோம் அதற்கு அவர்கள் தங்கள் நன்றிகளை தெரிவித்திருந்தார்கள். அனைவருக்கும் மயிலிட்டி . கொம்மும் தனது மனமார்ந்த நன்றிகளை தெரிவிக்கின்றது.
நன்றி