|
வாக்கெடுப்பு முடிவைந்துவிட்டது இரண்டு வருடம் நடைபெற்ற வாக்கெடுப்பில்
மயிலிட்டிக்கு 351 வாக்குகளும்
மயிலிட்டித்துறைக்கு 80 வாக்குகளும்
தேவன்துறைக்கு 61 வாக்குகளும்
மொத்தம் 492 பேர் வாக்கழித்திருந்தனர்.
மயிலிட்டியைதான் மக்கள் விரும்புகின்றார்கள் என்பதை மயிலிட்டி மக்கள் மயிலிட்டி டொட் கொம் இணையத்தின் மூலம் வாக்களித்து தங்களின் விருப்பத்தை தெரிவித்துள்ளார்கள் என்பதை மயிலிட்டி மக்கள் அனைவருக்கும் அறியத்தருகின்றோம். இந்த முடிவை தற்பொழுது பெயர் மாற்றம் செய்த
மயிலிட்டி கடற்றொழிலாளர் கூட்டுறவுச்சங்கம்,
மயிலிட்டி மருதடி வரசித்தி வினாயகர் ஆலய பரிபாலன சபை,
மயிலிட்டி கலைமகள் படிப்பகம்,
மயிலிட்டி முன் பள்ளி
மயிலிட்டி மீள் குடியேற்ற குழு ஆகியவற்றின் பொறுப்பாளர்களுக்கு முறைப்படி அறிவித்துள்ளோம். அவர்களிடமிருந்து மயிலிட்டி மக்களிற்கான பதிலையும் கேட்டிருக்கின்றோம். அவர்களின் பதில் எங்களுக்கு கிடைக்கப்பெற்றதும் மக்களின் பார்வைக்காக இங்கே போடப்படும் என்பதையும் தெரிவிக்கின்றோம். வாக்களித்த அனைவருக்கும் நன்றியை தெரிக்கின்றோம். தொடர்ந்தும் பெயர் மாற்றம் பற்றிய உங்களின் கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள்.
நன்றி
|
________________________________________________________________
தாயகத்தில் மயிலிட்டி மக்கள் தற்போது உத்தியோகபூர்வமாக சங்கங்கள், கோயில்கள், என்பனவற்றில் மயிலிட்டித்துறை என்று எழுத அரம்பித்துள்ளார்கள். உதாரணம் பிள்ளையார் கோயில் பரிபாலன சபையின் அஞ்சல் தாளில் எழுதியுள்ளார்கள். இப்படி பெயர் மாற்றம் செய்வது சரியா என்பது மனதில் தோன்றும். நீங்கள் வாக்களித்து உங்கள் விருப்பத்தை தெரிவிக்கவும்.நாம் அறிவித்த நாட்களிலிருந்து பலபேர் எம்முடன் தொடர்புகொண்டு இதுபற்றி கதைத்தார்கள். எல்லோரையும் எழுதித்தரும்படி கேட்டோம். நாம் கேட்டதிற்கு இரண்டுபேர் மட்டும் எழுதித்தந்துள்ளார்கள். அதை இத்துடன் இணைக்கின்றோம். மேலும் இணையத்தளத்தில் வாக்களிப்பு செய்யும்போது ஒன்றை கவனத்தில்கொள்ளவேண்டும் ஒரு வீட்டில் பலபேர் இருப்பார்கள் ஒரு முறைதான் வாக்கழிப்பு செய்வார்கள். அதனால் வாக்களிப்பு செய்த வீதம் குறைவு என்று நினைக்கவேண்டாம். |
|
________________________________________________________________
பெயர் மாற்றம் பற்றி கருத்துக்கணிப்பு போட்டபின் எம்முடன்தொடர்பு கொண்டு பெயர் மாற்றுவதாயின் வேறுபெயர் வைக்கலாம் என்று கருத்து தெரிவிக்கின்றார்கள் அவர்களின் கருத்தை ஏற்காமல் விடமுடியாது.
ஒரு கிராமத்தின் பெயர் மாற்றம் என்பது சாதாரண விடயம் இல்லை. முறைப்படி மக்களிற்கு அறிவித்து. மயிலிட்டி மக்களின் ஏகோபித்தமுடிவாக இருக்கவேண்டும்
தற்போது சில நாட்கள் நடந்த வாக்களிப்பின்படி புதிதாக மாற்றிய பெயரை மக்கள் விரும்பவில்லை பெயர் மாற்றம் செய்தவர்கள் தவறு செய்துவிட்டார்களோ என்று தோன்றுகின்றது. வாக்களித்தவர்கள் தாயகம் முதல் அனைத்து நாடுகளிலுமிருந்து வாக்களித்திருந்தார்கள். மக்கள் வாக்களித்தபின் எங்களை யோசிக்க வைத்துள்ளது. இது மக்களின் இணையத்தளம்,
அதே தவறை நாங்களும் விடக்கூடாது என்பதிற்காக மக்களுக்கு முறைப்படி அறிவித்து மீண்டும் மக்களிடம் புதிதாக ஒரு வாக்கெடுப்பை நடத்த முடிவெடுத்துள்ளோம்.
மக்கள் வாக்களிப்பு செய்து வரும் முடிவே இறுதியானது என்று அனைத்துலக மயிலிட்டி மக்கள் சார்பில் மயிலிட்டி டொட் கொம் கேட்டுக்கொள்கின்றது.
மக்கள் தரும் முடிவை முறைப்படி இணையத்தில் அறிவிப்போம் சம்பந்தப்பட்ட பெயர் மாற்றம் செய்தவர்கள் இதை ஏற்று ஆவன செயற்படுவார்கள் என நம்புகின்றோம்.
இதுபற்றிய கருத்துக்களையும் மக்களிடமிருந்து எதிர்பார்க்கின்றோம்.
தொடர்புகட்கு
உங்கள் பொறுப்பாளர்கள்.
worldwide@myliddy.com |
|
________________________________________________________________
அன்று
தேவன்துறை
இடைக்கால பகுதியில்
பெரிய நாட்டுத்தேவன்துறை, வீரமாணிக்கதேவன்துறை
இன்று
மயிலிட்டிக்கரை
எமது மூதாதையர்களால் வைக்கப்பட்ட பெயர் “ தேவன்துறை ”.
அன்றைய காலத்தில் தமிழ் நாட்டில் உள்ள காவிரிப்பூம் பட்டினத்திற்கு நிகராக வியாபாரத்தில் “ தேவன்துறை ” சிறந்து விளங்கியது. அதனால் அன்னியரான போத்துக்கேயர் யாழ்ப்பாணத்தில் முதல் எமது தேவன்துறையில் வந்து இறங்கினார்கள். எமது தேவர்களுடன் வியாபரம் செய்தார்கள்.
இப்பகுதி எமது தேவர்களுக்கு உரித்துடையதாயிருந்தமையால் தாம் இப்பகுதியில் ஒரு பண்டகசாலை கட்டுவதற்கு காணியை விலைக்கு தரும்படி வேண்டினர் தமது காணிகளை விற்க தேவர்கள் விரும்பவில்லை ஆதலால் இரண்டு ஏக்கர் காணியை இனாமாக கொடுத்தார்கள். அந்த காணிதான் இன்று கலைமகள் பாடசாலையாக உள்ளது. இந்த காணிக்குள் இன்றும் போத்துக்கேயரால் கட்டப்பட்ட பண்டகசாலை, ஆலையம், பாடசாலை அழிந்த நிலையில் உள்ளது.
எமது தேவர்களின் பரம்பரை ஆட்சியிறமை ஒரு தாய், தந்தையின் மூன்று ஆண் பிள்ளைகளுக்கு உரிமையாக வந்தன. இதனால் “ தேவன்துறை ” மூன்று பிரிவாக பிரிக்கப்பட்டன. மூத்த மகன் பெரியநாட்டுதேவன் வட கிழக்கு பகுதியையும் பெரியநாட்டுதேவன்துறை என்றும், இரண்டாவது மகன் வீரமாணிக்கதேவன் வட மேற்கு பகுதியை வீரமாணிக்கதேவன்துறை என்றும் மூன்றாவது மகன் நரசிம்மதேவன் தமது தெற்கு பகுதிக்கு மயிலிட்டி என்றும் மூன்று பிரிவுகளாக பிரித்தன்ர்.
இந்த உண்மைகளை அறிய விரும்புகிறவர்கள் 1950ம் ஆண்டுக்கு முன் எழுதப்பட்ட உங்களுடைய உறுதிகளிலும் உங்களுடைய தாய் தந்தையரின் பிறப்பு சான்று பத்திரங்களில் பாருங்கள் இந்த உண்மை தெரியும். அது மாத்திரமல்ல காணிக்கைமாதா கோயில் இன்றும் பெரியநாட்டுதேவன்துறை பங்கு என்றுதான் உள்ளது. இதை உங்கள் பங்குதந்தையிடம் கேட்டு அறிந்து கொள்ளுங்கள்.
இந்த பெருமைக்குரிய பெயர்கள் எப்படி மறைந்து மயிலிட்டிகரை என்று வந்தது என்று சிந்தியுங்கள். நரசிம்மதேவனுடைய வழித்தோன்றல்கள்தான் 1945ம் அண்டளவில் உடையார் பதிவாளராயிருந்தார்கள். இவர்கள் எமது பெருமைக்குரிய பெயர்களை இல்லாமல் செய்யவேண்டும் என கருதி எமது பகுதி மக்களுக்கு அறியாமால் மயிலிட்டிகரை என்று மாற்றிவிட்டார்கள். அன்று உடையார் என்பது இன்று உதவி அரசாங்க அதிபருக்கு உள்ள அதிகாரங்கள் உள்ளவர்கள். ஆதலால் இவர்கள் மிகவும் சாமர்த்தியமாக செய்துவிட்டார்கள்.
இன்று எமது பகுதி மக்கள் ஒரு சிலர் பெரியநாட்டுதேவன்துறை என்றும் மறு பகுதியினர் வீரமாணிக்கதேவன்துறை என்றும் சிலர் மயிலிட்டிக்கரை வேறுசிலர் மயிலிட்டித்துறை என்றும் கூறிவருகின்றோம். ஒரு இடத்திற்கு இப்படி பல பெயர் இருப்பதைவிட நாம் ஏன் ஒரு பெயரை வைத்து அழைக்கக்கூடாது சிந்தியுங்கள்.
ஏன் நாம் எமது மூதாதையர் வைத்த மதிப்புக்குரிய “ தேவன்துறை ” என்ற பெயரை எமது பகுதிக்கு திரும்பவும் வைத்து அழைக்கக்கூடாது.
இன்று யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளிலும் வாழ்ந்துகொண்டிருப்பவர்களும் வெளிநாடுகளில் வாழ்ந்துகொண்டிருப்பவர்களும் எமது உறவுகள் அனைவரும் உங்கள் அபிப்பிராயங்களை தெரிவித்தால் நாம் ஒரு நல்ல முடிவை எட்டமுடியும்.
இப்படிக்கு
வி.இரத்தினராஜா |
_______________________________________________________________
________________________________________________________________
|
|