Content on this page requires a newer version of Adobe Flash Player.

Get Adobe Flash player

  

Content on this page requires a newer version of Adobe Flash Player.

Get Adobe Flash player

Content on this page requires a newer version of Adobe Flash Player.

Get Adobe Flash player

 


Morning Motivation

When I
 woke up this morning lying in bed, 
I was
 asking myself, What are some of the secrets of success in life?
I found the answer right there, In my very room.









நிலவில் முதன்முதலில் கால் வைத்தவர் யார்? இந்தக் கேள்விக்கு யாராயிருந்தாலும் உடனே பதில் சொல்லிவிடுவீர்கள், நீல்ஆம்ஸ்ட்ராங் என்று.

நிலவில் முதன் முதலில் கால் வைத்திருக்க வேண்டியவர் யார் தெரியுமா? பல பேருக்கு தெரியாது என்பதால் நானே சொல்லி விடுகிறேன் அவர், எட்வின் சி ஆல்ட்ரின். அவர்தான் நிலவுக்கு சென்ற அப்பல்லோ விண்கலத்தின் பைலட். அதாவது விமானி.

ஆல்ட்ரின் அமெரிக்காவின் விமானப் படையில் பணிபுரிந்தவர். மேலும் விண் நடை அனுபவம் உள்ளவர். அதனால் அவர் பைலட்டாக நியமிக்கப்பட்டார்.

நீல் ஆம்ஸ்ட்ராங்க் அமெரிக்காவின் கப்பல் படையில் வேலைபார்த்தவர். மிகுந்த தைரியசாலி என்பதால்தான் இந்த பயணத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் கோ-பைலட் அதாவது இணை விமானி.

இவர்கள் சென்ற அப்பல்லோ விண்கலம் நிலவை அடைந்ததும் நாசாவிலிருந்து பைலட் பர்ஸ்ட் என்று கட்டளை பிறப்பிக்கப்பட்டது. ஆனால், ஆல்ட்ரினுக்கோ மனதில் சின்ன தயக்கம். இடது காலை எடுத்து வைப்பதா? வலது காலை எடுத்து வைப்பதா? என்றல்ல. ‘நிலவில் முதன் முதலில் கால் எடுத்து வைக்கிறோம். புவியீர்ப்பு விசையற்ற இடத்தில் இருக்கிறோம். கால் வைக்கும் இடம் எப்படி இருக்கும் என்று தெரியாது. புதை மணலாக இருந்து உள்ளே இழுத்துவிட்டால், எரி மணலாக இருந்து காலை சுட்டுவிட்டால்’ தயக்கத்தில் மணிக்கணக்காக தாமதிக்கவில்லை. சில நொடிகள்தான் தாமதித்திருப்பார்.

அதற்குள் நாசாவில் இருந்து இரண்டாவது கட்டளை பிறப்பிக்கப்பட்டது. கோ பைலட் நெக்ஸ்ட். நீல் ஆம்ஸ்ட்ராங் கட்டளை வந்த அடுத்த நொடி காலடி எடுத்துவைத்தார்.

உலக வரலாறு, ஒரு நொடி தயக்கத்தில் மாற்றி எழுதப்பட்டது. திறமையும் தகுதியும் இருந்தும்கூட தயக்கத்தின் காரணமாக தாமதித்ததால் இன்று ஆல்ட்ரினை யாருக்கும் தெரியவில்லை.

முதலாவது வருபவரைத்தான் இந்த உலகம் நினைவில் வைத்திருக்கும் என்பது மட்டுமல்ல. தயக்கம், பயம் இவை எந்த அளவுக்கு நம் வெற்றியை பாதிக்கும் என்பதற்கு இதுவே உதாரணம்.

இனி நிலவை பார்க்கும்போதெல்லாம் இந்தச் சம்பவத்தை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

ஒரு நிமிடத் தயக்கம் நம்முடைய மிகப் பெரிய வெற்றிகளைத் தடுத்துவிடுகிறது. நாம் எல்லோருமே மிகப்பெரும் சாதனைகளை படைக்கிற வல்லமை உடையவர்கள்தான். நம்முடைய தயக்கம், பயம், கூச்சம் இவைதான் நம் முதல் எதிரி.

வெற்றிக்கு உதவும் ஆறு குணங்கள்

1. பணிவு

ஒரு துறையில் புதிதாக வேலைக்குச் சேர்ந்தவர் நாலு விசயங்களைப் பழகியவுடன் கர்வம் அவர்களுடைய தலைக்கு மேல் ஏறிக் கொள்கிறது. என்னைப் போல் யார்? என்று நினைக்கிறார்கள். இதுதான் அவர்களின் சரிவுக்கான முதல் படி. முன்னேற்றத்துக்கு முட்டுக்கட்டை. இதற்குப் பதிலாகத் துணிவை வளர்த்துக் கொள்ளுங்கள். உங்கள் வெற்றிக்கு அது துணை நிற்கும்.

2. கருணை

உங்களைச் சுற்றியுள்ளவர்கள் துயரத்தை அனுபவிக்கும் போது, அவர்களுக்கு ஆறுதலாக இருங்கள். உங்களுக்குப் பிரச்சனை என்று வரும் போது அவர்கள் உதவுவதற்கு ஓடோடி வருவார்கள்.

3. பழகும் தன்மை

வீட்டிலும் சரி, வெளியிலும் சரி, உங்களுக்கு மேலே உள்ளவர்களிடமும், கீழே உள்ளவர்களிடமும் வெளிப்படையாக நடந்து கொள்ளுங்கள். திறந்த புத்தகமாக வாழத் தொடங்குங்கள். பல புதிய வெற்றி வாசல்கள் திறப்பதை அறிவீர்கள்.

4. அரவணைக்கும் குணம்

உலகில் எல்லாவிதமான மனிதர்களும் இருப்பார்கள் என்பதை ஒப்புக் கொண்டு, அவர்களிடம் உள்ள நல்ல விசயங்களைப் பார்த்துப் புரிந்து கொண்டு பழகத் தொடங்கினால் நட்பு வட்டம் பெருகும். வாழ்க்கை சிறகடிக்கும்.

5. இணைந்து பணியாற்றும் தன்மை

நாம் ஒவ்வொருவரும் பல தனிப்பட்ட திறமை கொண்டவர்களாக இருப்போம். நாம் அனைவரும் இணைந்து பணியாற்றினால் அந்த வெற்றி பல மடங்காக உயரும்.

6. முடிவெடுக்கும் திறன்

நாம் தினந்தோறும் எல்லாப் பிரச்சனைகளுக்கும் ஏதாவது ஒரு முடிவை எடுக்கிறோம். நமது திறமை மற்றும் அனுபவத்தைச் சரியான விகிதத்தில் யோசித்து எடுக்கும் முடிவுகள் நமது வாழ்வின் முக்கியத் திருப்புமுனையாக அமையும். 

இவையே நமது வெற்றியின் வளர்ச்சியைத் தூக்கிவிடும்.


மாவீரன் அலெக்ஸாண்டரின் கடைசி ஆசைகள்.......

மாவீரன் அலெக்ஸாண்டர் எல்லா நாடுகளையும் கைப்பற்றி விட்டு தாய்நாடு திரும்பும் வழியில் நோய்வாய்ப்பட்டார். பல மாதங்கள் ஆகியும் அவருக்கு அந்த நோய் தீரவில்லை. சாவு தன்னை நெருங்குவதை உணர்ந்தார் அவர்.

ஒருநாள் தன்னுடைய தலைமை வீரர்களை அழைத்து, "என்னுடைய சாவு நெருங்கி விட்டது. எனக்கு மூன்று ஆசைகள் உள்ளன. அவற்றை நீங்கள் கண்டிப்பாக நிறைவேற்றி வைக்க வேண்டும்" என்று கட்டளையிட்டார்.

அவர்களும் அவற்றை நிறைவேற்றுவதாக வாக்களித்தனர்.

முதல் விருப்பமாக, "என்னுடைய சவப்பெட்டியை எனக்கு சிகிச்சையளித்த மருத்துவர்கள் மட்டுமே தூக்கி வர வேண்டும்."

இரண்டாவது, 'என்னைப் புதைக்கும் இடத்திற்குச் செல்லும் வழியானது நான் சம்பாதித்து வைத்த, விலைமதிப்பற்ற கற்களால் அலங்காரம் செய்யப்பட வேண்டும்."

மூன்றாவதாக, "என் கைகள் இரண்டையும் சவப்பெட்டிக்கு வெளியில் தெரியுமாறு வைக்க வேண்டும்."

வீரர்களுக்கு இந்த ஆசைகள் வித்தியாசமாகத் தெரிந்தன. என்ன காரணமாக இருக்கும் என்று கேட்கப் பயந்தார்கள்.

அதில் ஒருவன் தைரியமாக முன்வந்து, "அரசே! நாங்கள் தங்கள் ஆசையைக் கண்டிப்பாக நிறைவேற்றுகிறோம். ஆனால், இதற்கான காரணத்தை தாங்கள் விளக்க வேண்டும்" என்று கேட்க, அலெக்ஸாண்டர் அதற்கு விளக்கமளித்தார்.

1. என்னுடைய சவப்பெட்டியை மருத்துவர்கள் தூக்கிச் செல்வதால், உலகில் உள்ள எல்லோரும் ஒரு விஷயத்தை அறிந்து கொள்வார்கள். மருத்துவர்களால் எந்த ஒரு நோயிலிருந்தும் ஒரு உயிரை நிரந்தரமாகக் காப்பாற்ற முடியாது. மரணத்தை அவர்களால் நிறுத்த முடியாது.

2. வாழ்க்கையில் எவ்வளவு பணமும், நாடுகளும், இன்ன பிற செல்வங்களும் சம்பாதித்தாலும், அவற்றை உன்னுடன் எடுத்துச் செல்ல முடியாது. அது சவக்குழி வரை மட்டும்தான்! மனிதர்கள் வீணாக அதன் பின்னால் செல்ல வேண்டாம் என்பதைத் தெரியப்படுத்துவதற்காக!

3.உலகையே வென்றவன் சாகும்போது கைகளில் ஒன்றுமில்லாதவனாகத்தான் இருக்கிறான் என்று அறிந்து கொள்வதற்காக....


ஆப்ரஹாம்லிங்கன் தன்மகனைத்துவக்கப்பள்ளியில் சேர்த்தார்.

அவர் தன் மகனுக்கு அறிவுரை சொல்லவில்லை.

ஆப்ரஹாம்லிங்கன் பள்ளி ஆசிரியருக்குஅவர்எழுதிய கடிதங்களின்சிலபகுதிகள்.... ......
..

*தோல்வியைஏற்றுக்கொள்ளவும்,  வெற்றியைக்கொண்டாடவும்என்மக னுக்குக்கற்றுக்கொடுங்கள்.*

*பொறாமையிலிருந்துஅவன்விலகி யேஇருக்கட்டும்.*

*வானப்பறவைகள், தேனீக்கள், சூரியன், பசுமையானசெடிகள், மலர்கள் இவற்றைரசிக்க அவனுக்குக்கற்றுக்கொடுங்கள்.*

*பிறரைஏமாற்றுவதைவிட, தோற்பதுகண்ணியம்என்று அவனுக் குக்கற்றுக்கொடுங்கள்.*

*சுயசிந்தனையில்நம்பிக்கைகொ ள்ளச்சொல்லுங்கள்.*

*மென்மையானவர்களிடம் மென்மையாகவும், உறுதியானவர்களிடம் உறுதியாகவும்நடந்து கொள்ளக்கற்றுக்கொடுங்கள்.*

*குற்றம்குறைகூறுபவர்களைஅவன் அலட்சியப்படுத்தட்டும்.*

*அளவுக்கு அதிகமாய் இனிமையாகப் பேசுபவர்களிடம்அவன்எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.*

*தன்மனதுக்குசரிஎன்றுதோன்று வதை அவன்துணிந்துநின்று போராடிநிறைவேற்ற அவனைப்பழக்குங்கள்.*

...................ஆப்ரஹாம்லிங்கன்....

இதோ இவரை விடவா உங்களுக்கு தோல்விகள் அதிகம் ?

01. 1831 ல் வியாபாரத்தில் தோல்வி.

02. 1832 ல் சட்டசபைத் தேர்தலில் தோல்வி.

03. 1834 ல் வியாபாரத்தில் மீண்டும் தோல்வி.

04. 1835 ல் அவரது காதலி மரணம்.

05. 1836 ல் அவருக்கு நரம்பு நோய் வந்தது.


06. 1838 ல் தேர்தலில் தோல்வி.

07. 1843 ல் காங்கிரஸ் தேர்தலில் தோல்வி.

08. 1848 ல் மீண்டும் காங்கிரஸ் தேர்தலில் தோல்வி.

09. 1855 ல் செனட் தேர்தலில் தோல்வி.

10. 1856 ல் துணை அதிபர் தேர்தலில் தோல்வி.

11. 1858 ல் செனட் தேர்தலில் மீண்டும் தோல்வி.

12. 1861 ல் அமெரிக்க அதிபர் தேர்தலில் வென்று அமெரிக்க ஜனாதிபதியானார்.இத்தனை தோல்விகளையும் சந்தித்தவர் வேறுயாருமில்லை.

உலகம் அறிந்த மிகவும் பிரபலமான அமெரிக்க அதிபர் ஆபிரகாம் லிங்கன்தான். அதிக தோல்விகள், அதிக பாடங்கள், இவையே வெற்றியின் இரகசியம்



முதன் முதலாகத் தேர்தலை சந்தித்து, தோல்வியடைந்த நேரத்தில், பிரார்த்தனைக் கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டார் ஆபிரஹாம் லிங்கன். கூட்டம் முடிந்ததும், “உங்களில் சொர்க்கத்துக்குச் செல்ல விரும்புவர்கள் மட்டும் கையை உயர்த்துங்கள்” என்றார் பாதிரியார்.

எல்லோரும் கையைத் தூக்க, ஆபிரஹாம் லிங்கன் மட்டும் பேசாமல் நின்றார். “ஆபிரஹாம்! நீ எங்கே போவதாக உத்தேசம்?” என பாதிரியார் கேட்க, தோல்வி அடைந்திருந்த அந்த மன நிலையிலும், “நான் செனட் உறுப்பினராகப் போகிறேன்” என்று உறுதியான குரலில் சொன்னார் அபிரஹாம்.

“நீ எதுவாக மாற விரும்புகிறாயோ, அதுவாக மாறுவாய்” என புன்னகையுடன் ஆசி வழங்கினார் பாதிரியார்.

1809ம் வருடம் அமெரிக்காவின் சின்னஞ்சிறு கிராமத்தில் பிறந்த லிங்கனை, “தோல்விகளின் செல்லக் குழந்தை” என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு தொடர் தோல்விகள் அவரைத் துரத்திக் கொண்டே இருந்தன. பிறந்த சில வருடங்களிலேயே தாயை இழந்தார். ஒரு கடையில் எடுபிடி வேலை பார்த்துக் கொண்டே இரவு நேரங்களில் மட்டும் பள்ளிப் பாடத்தை ஆர்வத்துடன் படித்தார். இளைஞனாகி, பக்கத்து நகருக்குப் போனபோது, அங்கே அடிமைகளை வியாபாரம் செய்யும் மனிதச் சந்தையைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். கறுப்பர்களின் அடிமை வாழ்க்கையைப் பற்றி அவர் கேள்விப்பட்டு இருந்தாலும் காய்கறி போல மனிதர்கள் விற்கப்படுவதை நேரில் கண்டதும் ரத்தம் சூடேற, லிங்கனுக்கு ஒரு புது லட்சியம் பிறந்தது. ஆட்சிப் பொறுப்புக்கு வந்தால் தான் இந்த அவலத்தை அகற்ற முடியும் என்று தெரிந்தும், அவசரமாக தனது 22வது வயதில் ஒரு நகராட்சி தேர்தல் வேட்பாளராக களம் இறங்கி, படுதோல்வி அடைந்தார். இந்த நேரத்தில், சொந்தமாகத் தொழில் தொடங்கி, அதில் பெரும் கடனாளியாக மாறியிருந்தார்.

சோர்ந்து போயிருந்த லிங்கனை ஒரு போராளியாக மாற்றியது, அவரது வளர்ப்புத் தாய் சாராபுஷ். ‘ஆட்சிப் பொறுப்புக்கு வரவேண்டும் என்றால், ஆசைப்படுவதைப் பெறுவதற்கான தகுதிகளை முதலில் வளர்த்துக்கொள்’. “நீ எதுவாக விரும்புகிறாயோ, அதுவாக மாறுவாய்!” என்றார் சாரா புஷ். பாதிரியார் சொன்ன அதே வார்த்தைகள்!

இப்போது லிங்கனுக்குத் தன் இலக்குப் புரிந்தது. மனதில் தெளிவு பிறந்தது. அடிமை வியாபாரத்தை சட்டம் போட்டுத்தானே ஒழிக்க முடியும்? எனவே, முழுமூச்சுடன் சட்டம் படிக்கத் தொடங்கினார் லிங்கன். மக்கள் மனதை மாற்றினால் மட்டுமே சட்டத்தை சுலபமாக அமல்படுத்த முடியும் என்பதால், சட்டப்படிப்புடன் பேச்சுத் திறமையையும் வளர்த்துக் கொண்டார். அடிமை ஒழிப்பைப் பற்றி ஊர் ஊராகக் கூட்டம் போட்டுப் பேசினார். ஒரு தலைவருக்கான தகுதிகளை வளர்த்துக் கொண்டு, 1834ல் நடந்த நகராட்சி உறுப்பினர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றியும் பெற்றார். அதன்பின் நகராட்சித் தலைவர், மாமன்ற உறுப்பினர், செனட் உறுப்பினர், உபஜனாதிபதி, எனப் பல்வேறு பதவிகளுக்குப் போட்டியிட்டு சில வெற்றிகளையும், பல தோல்விகளையும் சந்தித்து 1860ம் வருடம் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் நின்று வெற்றி பெற்றார். ஆம், எதுவாக மாற நினைத்தாரோ, அதுவாகவே ஆனார் லிங்கன்!.

இல்வாழ்விலும் அவருக்குத் தோல்விகள்தான்! 1835ல் அவரின் காதலி ‘ஆனி’ விஷக் காய்ச்சலால் மரணம் அடைந்தார். 33வது வயதில் மேரியுடன் திருமணம் முடிந்து நான்கு குழந்தைகள் பிறந்தன. மூன்று குழந்தைகள் சிறுவயதிலேயே மரணமடைந்தார்கள். மனைவிக்கு மனநோய் இருந்தது. இத்தனைத் தோல்விகளையும் மன உறுதியோடு எதிர்கொண்டதால் தான், லிங்கன் வெற்றி பெற முடிந்தது.

அமெரிக்க ஜனாதிபதி ஆனதும், அதிரடி நடவடிக்கை எடுத்து அடிமை அவலத்தை ஒழித்து, மாகாணங்களை ஒன்று சேர்த்து, அமெரிக்காவைத் தலை நிமிரவைத்தார் லிங்கன். அந்தச் சாதனையால்தான், அடுத்த முறையும் அவரே மீண்டும் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1865ல் நாடகம் பார்த்துக் கொண்டு இருந்தபோது ஒரு நிறவெறியனால் சுடப்பட்டு மரணம் அடைந்தார் லிங்கன்.

மணவாழ்க்கை பற்றி லிங்கன் கூறியது - மணவாழ்க்கை லிங்கனுக்கு அவ்வளவு உவப்பாக இல்லை. பிற்காலத்தில் தம் இல்லற வாழ்க்கை பற்றி குறிப்பிடும் போது “மண வாழ்க்கை மலர்ப் படுக்கை அல்ல; போர்க்களம்” என்று குறிப்பிட்டார்.

“நீ எதுவாக மாற விரும்புகிறாயோ அதுவாக மாறுவாய்” என்பது ஆபிரஹாம் லிங்கனுக்கு மட்டுமல்ல… நம்பிக்கையைத் தளரவிடாமல், லட்சியத்துக்காக விடாப்பிடியாக போராடும் ஒவ்வொருவருக்கும் வெற்றி மந்திரம்.


ஒரு நகரத்திற்கு ஒரு சட்டமிருந்தது.
அதன்படி யார் வேண்டுமென்றாலும் அந்த நகரத்திற்கு ராஜாவாக வரமுடியும். 
ஆனால்,அந்தப் பதவி ஐந்தாண்டுகள் மட்டுமே! ஐந்தாண்டு முடிந்த அடுத்த நாளே மன்னனை ஆற்றின் கரைக்கு மறுபுறம் உள்ள காட்டில் விட்டுவிடுவார்கள்.

அந்தக் காட்டில் மனிதர்கள் கிடையாது. 
வெறும் கொடிய விலங்குகள் மட்டுமே! 
மன்னன் காட்டிற்குள் நுழைந்தால் போதும்;
வனவிலங்குகள் கொன்று தீர்த்துவிடும். 
இந்த சட்டத்தை யாராலும் மாற்ற இயலாது. 
இந்த நிபந்தனைகளுக்கு ஒப்புக் கொண்டவன் மட்டுமே அரியணையில் அமரப் பொருத்தமானவன். 
ஆக, மன்னனாக முடிசூட்டிக் கொண்டவனின் தலையெழுத்து,ஐந்தாண்டுகளுக் குப் பின் கட்டாய மரணம்.

இந்தக் கடுமையான சட்டத்துக்கு பயந்தே யாரும் அந்தப் பதவிக்கு ஆசைபடாமலிருந்ததால் அந்த அரியணை பெரும்பாலும் காலியாகவே இருந்தது. 
இருப்பினும் ஒரு சிலர்'எப்படியிருந்தாலும் சாகத்தானே போகிறோம்; மன்னனாகவே மடியலாமே!' என்று பதவி ஏற்பதுண்டு. 
அதிலும் பாதி மன்னர்கள் இடையிலேயே மாரடைப்பால் மரணமடைவதுமுண்டு.

இப்படி ஒரு மன்னனுக்கு ஐந்து ஆண்டு ஆட்சிக்காலம் முடிந்தது. அன்று ஆற்றின் கரையைக் கடந்து காட்டிற்குச் செல்ல வேண்டும். 
அவனை வழியனுப்ப நாடே திரண்டிருந்தது.

மன்னன் வந்தான், அவனுடைய சிறப்பான ஆடைகளையும் நகைகளையும் அணிந்து,முடிசூடி, தங்க வாளேந்தி வைரங்கள் மின்ன மக்கள் முன் நின்றான். 
மக்கள் வாயைப் பிளந்தனர் ''இன்னும் அரை மணிநேரத்தில் சாகப் போகிறான்; அதற்கு இவ்வளவு அலங்காரமா!''

தான் செல்லவிருந்த படகைப் பார்த்துவிட்டு சினத்துடன் கூறினான், ''மன்னன் செல்லும் படகா இது! பெரிய படகைக் கொண்டு வாருங்கள்! நான் நின்றுகொண்டா செல்வது! சிம்மாசனத்தைக் கொண்டு வாருங்கள்!''

கட்டளைகள் பறந்தன; காரியங்கள் நடந்தன! சற்று நேரத்தில் அலங்கரிக்கப்பட்ட அழகான படகு ஆற்று நீரைத் கிழித்துக் கொண்டு மறுகரை நோக்கிப் பயணித்தது.

மக்கள் திகைத்து நிற்க, மன்னன் கையசைக்க பயணம் தொடர்ந்தது.

மிகவும் அதிர்ச்சியடைந்தவன் படகோட்டியே! காரணம், இதுவரை அவன் மறுகரைக்கு அழைத்துச் சென்ற எந்த மன்னனும் மகிழ்ச்சியாக சென்றதில்லை. அழுது புலம்பி,புரண்டு, வெம்பிச் செல்வார்கள். இவனோ, மகிழ்ச்சிக் களிப்பில் பொங்கி வழிகிறான்.

படகோட்டி பொறுத்துக்கொள்ள முடியாமல் கேட்டான் 
''மன்னா! எங்கே செல்கிறீர்கள் தெரியுமா?''

''தெரியும் மறுகரைக்குச் செல்கிறேன்!''

''அங்கே சென்றவர்கள் திரும்ப இந்த நகரத்திற்கு வந்ததில்லை தெரியுமா?''

''தெரியும். நானும் திரும்ப இந்த நகரத்திற்கு வரப் போவதில்லை!''

''பின்னே எப்படி உங்களால் இவ்வளவு மகிழ்ச்சியாக இருக்க முடிகிறது?''

''அதுவா! நான் என்ன செய்தேன் தெரியுமா?
ஆட்சிக்கு வந்த ஓராண்டு முடிவில் ஆயிரம் வேட்டைக்காரர்களைக் காட்டிற்கு அனுப்பினேன்; 
அவர்கள் கொடிய விலங்குகளை வேட்டையாடிக் கொன்று விட்டார்கள்!

இரண்டாமாண்டு முடிவில் ஆயிரம் விவசாயிகள் சென்றார்கள்; காட்டைத் திருத்தி உழுதார்கள்; 
இன்று ஏராளமான தானியங்கள் காய்கறிகள்.

மூன்றாமாண்டு முடிவில் ஆயிரம் கட்டடக்கலை வல்லுநர்கள், தொழிலாளர்கள் சென்றனர். 
இன்று வீடு, வாசல், அரண்மனை,அந்தப்புரம், சாலைகள் எல்லாம் தயார்!

நான்காம் ஆண்டு முடிவில் ஆயிரம் அரசு அதிகாரிகள் சென்றனர். நிர்வாகம் சீரடைந்தது. 
இந்த 4000 பேரும் தங்கள் மனைவி, குழந்தைகளுடன் சென்று அங்கே வாழ்கின்றனர்.

இப்போது நான் காட்டிற்குப் போகவில்லை;
என்னுடைய நாட்டிற்குப் போகின்றேன்! 
சாகப் போகவில்லையப்பா, வாழப் போகின்றேன்! 
அதுவும் மன்னனாக ஆளப்போகிறேன்! 
உனக்கு ஒருவேளை அரண்மனைப் படகோட்டி வேலை வேண்டுமென்றால், இந்தப் படகோடு இப்படியே வேலைக்கு சேர்ந்து விடு!'' என்றான் மன்னன்.................... .....................

########################## #####################

ஒரே ஒரு கேள்வியை மட்டும் எடுத்துக் கொள்ளலாம்.

மன்னனின் வெற்றிக்குக் காரணங்கள் யாவை?

பல காரணங்கள் இருந்தாலும் குறிப்பாக இரண்டினைக் கூறலாம்.

(1) ஐந்து ஆண்டுகளுக்குப் பின் உயிர் வாழவேண்டும்; 
அதுவும் மன்னனாகவே வாழவேண்டும் என்று முடிவு எடுத்தது.

(2) அந்த முடிவினை அடைவதற்காக திட்டமிட்டு உழைத்தது!

அந்த மன்னனுடைய வெற்றிக்கு மட்டுமல்ல;
நாம் அனைவருமே வெற்றி பெறவேண்டுமென்றால் நமக்குத்தேவை ஒரு இலக்கை நிர்ணயித்தலும் அதற்காக திட்டமிடுதலும் , திட்டமிட்ட பின் வெற்றி பெறும்வரை கடுமையாகவும் புத்திசாலித்தனமாக உழைப்பதுமே

இப்போது நீங்கள் என்ன செய்கிறீர்களோ அதுதான் உங்கள் எதிர்காலம்!

இப்போது ஒருவன் கடுமையாக உழைக்கிறானே அதுதான் அவனுடைய வருமானமாகப் பின்னால் வரும்!

இப்போது ஆழ்ந்து படிக்கும் மாணவனுக்கு அதுதான் தேர்ச்சி என்று ஒரு எதிர்காலத்தைக் கொண்டுவரும்.

அப்படிப் பார்த்தால் எல்லாமே இப்போது நாம் செய்வது செய்து கொண்டிருப்பதுதான் நம் நாளைய வாழ்வைத் தீர்மானிக்கிறது. அவை ஒவ்வொன்றையும் திட்டமிட்டு சிறப்பாகச் செய்தால் நம் வாழ்க்கை எவ்வளவு மேன்மையாக அமையும்!

எந்த ஒரு செயல் செய்வதற்கு முன் திட்டமிடுங்கள், அந்த திட்டத்தை செயல் படுத்துவதற்கு முன் பலமுறை யோசியுங்கள். நன்றாக இருக்கும் என்று நாம் உணர்ந்த பின் அதை செயல்முறை படுத்துங்கள் பின் வெற்றி நமக்கே !


கழுகுகள் நமக்கு கற்றுதரும் பாடம்:

பறவைகளில் கழுகுகள் மிக சக்தி வாய்ந்தவை. அவை மிக உயரமாகப் பறக்கக் கூடியவை. அவற்றை வலிமை மற்றும் தைரியம் ஆகியவற்றின் சின்னமாகக் கருதுகின்றோம். ஆனால் அந்தக் கழுகுகளின் பறக்கும் சாகச சக்திகளும், வலிமையும், தைரியமும் பிறப்பிலேயே வருபவை அல்ல. அவை கழுகுகளால் ஒரு கட்டத்தில் கற்றுக் கொள்ளப்படுபவை தான்.

குஞ்சுகளாகக் கூட்டில் சுகமாக, பாதுகாப்பாக இருக்கும் போது கழுகுகள் பலவ
ீனமாகவே இருக்கின்றன. அவை அப்படியே சுகமாகவும், பாதுகாப்பாகவுமே இருந்து விட்டால் வலிமையாகவும், சுதந்திரமாகவும் மாறுவது சாத்தியமல்ல. எனவே குஞ்சுகளாக இருக்கும் போது வேண்டிய உணவளித்து, பாதுகாப்பாக வைத்திருக்கும் தாய்ப்பறவை குஞ்சுகள் பறக்க வேண்டிய காலம் வரும் போது மாறி விடுகின்றது.

முதலில் கூடுகளில் மெத்தென இருக்கும் படுக்கையினைக் கலைத்து சிறு குச்சிகளின் கூர்மையான பகுதிகள் வெளிப்படும்படி செய்து கூட்டை சொகுசாகத் தங்க வசதியற்றபடி செய்து விடுகின்றது. 

பின் தன் சிறகுகளால் குஞ்சினை அடித்து இருக்கும் இடத்தை விட்டுச் செல்லத் தூண்டுகின்றது. தாய்ப் பறவையின் இம்சை தாங்க முடியாத கழுகுக்குஞ்சு கூட்டின் விளிம்புவரை வந்து நிற்கின்றது. அது வரை பறந்தறியாத குஞ்சு கூட்டின் வெளியே உள்ள உலகத்தின் ஆழத்தையும் உயரத்தையும் விஸ்தீரணத்தையும் பார்த்து மலைத்து நிற்கின்றது.

அந்தப் பிரம்மாண்டமான உலகத்தில் தனித்துப் பயணிக்க தைரியமற்று பலவீனமாக நிற்கின்றது. அது ஒவ்வொரு குஞ்சும் தன் வாழ்க்கையில் சந்தித்தாக வேண்டிய ஒரு முக்கியமான தவிர்க்க முடியாத கட்டம். 

அந்த நேரத்தில் அந்தக் குஞ்சையே தீர்மானிக்க விட்டால் அது கூட்டிலேயே பாதுகாப்பாகத் தங்கி விட முடிவெடுக்கலாம். ஆனால் கூடு என்பது என்றென்றைக்கும் பாதுகாப்பாகத் தங்கி விடக் கூடிய இடமல்ல. சுயமாகப் பறப்பதும் இயங்குவதுமே ஒரு கழுகுக்கு நிரந்தரப் பாதுகாப்பு என்பதைத் தாய்ப்பறவை அறியும்.

அந்தக் கழுகுக்குஞ்சு கூட்டின் விளிம்பில் என்ன செய்வதென்று அறியாமல் வெளியே எட்டிப் பார்த்துக் கொண்டு இருக்கும் அந்தக் கட்டத்தில் தாய்ப்பறவை அந்தக் குஞ்சின் உணர்வுகளை லட்சியம் செய்யாமல் குஞ்சை கூட்டிலிருந்து வெளியே தள்ளி விடுகிறது. 

அந்த எதிர்பாராத தருணத்தில் கழுகுக்குஞ்சு கஷ்டப்பட்டு சிறகடித்துப் பறக்க முயற்சி செய்கின்றது. முதல் முறையிலேயே கற்று விடும் கலையல்ல அது.

குஞ்சு காற்றில் சிறகடித்துப் பறக்க முடியாமல் கீழே விழ ஆரம்பிக்கும் நேரத்தில் தாய்க்கழுகு வேகமாக வந்து தன் குஞ்சைப் பிடித்துக் கொள்கிறது. 

குஞ்சு மீண்டும் தாயின் பிடியில் பத்திரமாக இருப்பதாக எண்ணி நிம்மதியடைகிறது. அந்த நிம்மதி சொற்ப நேரம் தான். 

தன் குஞ்சைப் பிடித்துக் கொண்டு வானுயரப் பறக்கும் தாய்க்கழுகு மீண்டும் அந்தக் கழுகுக்குஞ்சை அந்தரத்தில் விட்டு விடுகிறது. மறுபடி காற்று வெளியில் சிறகடித்துப் பறக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு அந்தக் குஞ்சு உள்ளாகிறது.

இப்படியே குஞ்சை வெளியே தள்ளி விடுவதும், காப்பாற்றுவதுமாகப் பல முறை நடக்கும் இந்தப் பயிற்சியில் கழுகுக் குஞ்சின் சிறகுகள் பலம் பெறுகின்றன. 

காற்று வெளியில் பறக்கும் கலையையும் விரைவில் கழுகுக்குஞ்சு கற்றுக் கொள்கிறது. அது சுதந்திரமாக, ஆனந்தமாக, தைரியமாக வானோக்கிப் பறக்க ஆரம்பிக்கிறது.

கழுகுக் குஞ்சு முதல் முறையாக கூட்டுக்கு வெளியே உள்ள உலகத்தின் பிரம்மாண்டத்தைக் கண்டு பயந்து தயங்கி நிற்கும் அந்தத் தருணத்தில் தாய்க்கழுகு அதனை முன்னோக்கித் தள்ளியிரா விட்டால் அந்த சுதந்திரத்தையும், ஆனந்தத்தையும், தைரியத்தையும் அந்தக் கழுகுக்குஞ்சு தன் வாழ்நாளில் என்றென்றைக்கும் கண்டிருக்க முடியாது.

பறக்க அறியாத அந்தக் குஞ்சை கூட்டினை விட்டு வெளியே தாய்ப்பறவை தள்ளிய போது அது ஒருவிதக் கொடூரச் செயலாகத் தோன்றினாலும் பொறுத்திருந்து விளைவைப் பார்க்கும் யாருமே அந்தச் செயல் அந்தக் குஞ்சிற்குப் பேருதவி என்பதை மறுக்க முடியாது

ஒவ்வொரு புதிய சூழ்நிலையும் யாருக்கும் ஒருவித பதட்டத்தையும், பயத்தையும் ஏற்படுத்தக் கூடும். ஆனால் அந்தக் காரணத்திற்காகவே அந்த சூழ்நிலைகளையும், அனுபவத்தையும் மறுப்பது வாழ்வின் பொருளையே மறுப்பது போலத் தான். 

கப்பல் துறைமுகத்தில் இருப்பது தான் அதற்கு முழுப்பாதுகாப்பாக இருக்கலாம். ஆனால் கப்பலை உருவாக்குவது அதை துறைமுகத்தில் நிறுத்தி வைக்க அல்ல. கப்பலின் உபயோகமும் அப்படி நிறுத்தி வைப்பதில் இல்லை. கழுகிற்கும், கப்பலுக்கும் மட்டுமல்ல, மனிதனுக்கும் இந்த உண்மை பொருந்தும்

தாய்க்கழுகு தான் குஞ்சாக இருக்கையில் முதல் முதலில் தள்ளப்பட்டதை எண்ணிப்பார்த்து "நான் பட்ட அந்தக் கஷ்டம் என் குஞ்சு படக்கூடாது. என் குஞ்சிற்கு அந்தப் பயங்கர அனுபவம் வராமல் பார்த்துக் கொள்வேன்" என்று நினைக்குமானால் அதன் குஞ்சு பலவீனமான குஞ்சாகவே கூட்டிலேயே இருந்து இறக்க நேரிடும். ஆனால் அந்த முட்டாள்தனத்தை தாய்க்கழுகு செய்ததாக சரித்திரம் இல்லை

அந்த தாய்க்கழுகின் அறிவுமுதிர்ச்சி பல பெற்றோர்களிடம் இருப்பதில்லை. 

"நான் பட்ட கஷ்டங்கள் என் குழந்தைகள் படக்கூடாது" என்று சொல்லக்கூடிய பெற்றோர்களை இன்று நாம் நிறையவே பார்க்கிறோம். ஒரு காலத்தில் கூட்டுக் குடும்பமும் அதில் கும்பலாகக் குழந்தைகளும் இருந்த போது பெற்றோர்களுக்குத் தங்கள் ஒவ்வொரு குழந்தை மீதும் தனிக்கவனம் வைக்க நேரம் இருந்ததில்லை. அதற்கான அவசியம் இருப்பதாகவும் அவர்கள் நினைத்ததில்லை.

ஆனால் இந்தக் காலத்தில் ஓரிரு குழந்தைகள் மட்டுமே உள்ள நிலையில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு மிக நல்ல வாழ்க்கை அமைத்துக் கொடுக்க வேண்டும் என்பதில் குறியாக இருக்கிறார்கள். அதில் தவறில்லை. 

ஆனால் தான் பட்ட கஷ்டங்கள் எதையும் தங்கள் குழந்தைகள் படக்கூடாது என்று நினைக்கும் போது பாசமிகுதியால் அவர்கள் அந்தக் கஷ்டங்கள் தந்த பாடங்களின் பயனைத் தங்கள் பிள்ளைகளுக்கு அளிக்கத் தவறி விடுகிறார்கள். 

அதற்காக "நான் அந்தக் காலம் பள்ளிக்கூடம் செல்ல பல மைல்கள் நடந்தேன். அதனால் நீயும் நட" என்று பெற்றோர்கள் சொல்ல வேண்டும் என்று சொல்லவில்லை. வசதிகளும், வாய்ப்புகளும் பெருகி உள்ள இந்தக் காலத்தில் அப்படிச் சொல்வது அபத்தமாகத் தான் இருக்கும்.

இன்றைய நவீன வசதி வாய்ப்புகளின் பலனை பிள்ளைகளுக்கு அளிப்பது அவசியமே. தேவையே இல்லாத கஷ்டங்களை பிள்ளைகள் படத் தேவையில்லைதான். 

ஆனால் 'எந்தக் கஷ்டமும், எந்தக் கசப்பான அனுபவமும் என் பிள்ளை படக்கூடாது' என்று நினைப்பது அந்தப் பிள்ளையின் உண்மையான வளர்ச்சியைக் குலைக்கும் செயலே ஆகும்.

வாழ்க்கையில் சில கஷ்டங்களும், சில கசப்பான அனுபவங்களும் மனிதனுக்கு அவசியமானவையே. அவற்றில் வாழ்ந்து தேர்ச்சி அடையும் போது தான் அவன் வலிமை அடைகிறான். அவற்றிலிருந்து பாதுகாப்பளிப்பதாகப் பெற்றோர் நினைப்பது அவனுக்கு வாழ்க்கையையே மறுப்பது போலத் தான்.

சில கஷ்டங்கள் பிள்ளைகள் படும் போது பெற்றோர்களுக்கு மனம் வருத்தமாக இருக்கலாம். ஆனால் கஷ்டங்களே இல்லாமல் இருப்பது வாழ்க்கை அல்ல, வாழ்க்கையின் அர்த்தமும் அல்ல, அது சாத்தியமும் அல்ல


ஆன்மிகத்தின் அடிப்படை
-------------------------- ---------
* உண்மையை மறைக்காமல் சொல்லும் மன வலிமை வேண்டும்.
* நமது ஒவ்வொரு எண்ணத்தையும் கடவுள் நன்றாக அறிவார்.
* நல்ல நட்பைப் பெற வேண்டுமானால், நீயும் நல்ல நண்பனாக இரு.
* உடல்சோர்வு பலவீனமே அல்ல. மனச்சோர்வு தான் பலவீனம்.
* தொண்டு தான் உண்மையான அன்பை வெளிப்படுத்துமே தவிர, வெறும் வாய்ச்சொல்லால் பயனில்லை.
* பொய்மை ஒருநாள் மறைந்து போகும். உண்மையே மேலே உயர்ந்து நிற்கும்.
* ஆன்மிக வாழ்வின் அடிப்படை குணம் அஞ்சாமை.
* மனப்பூர்வமாக உள்ளம் கனிந்து செய்யும் பிரார்த்தனையை இறைவன் ஏற்க மறுப்பதில்லை.
* உலகிலுள்ள எல்லா சக்திகளையும் விட, ஆன்மிக சக்தியே அதிக பலம் வாய்ந்தது.
* தவறை மன்னிக்கும் குணம் ஒருவரின் உயர்ந்த பண்பாட்டை வெளிப்படுத்துகிறது.

- காந்திஜி (நன்றி: தினமலர்)









புத்தரின் பொன்மொழிகள் 
-------------------------- ---------
பிராத்தனைகளுள் மிக உயர்ந்தது பொறுமை தான்.

நம் நற்செயல்களும் நம் தீய செயல்களும் நம்மை நிழல் போல் தொடர்கிறது 

கருமியை ஈகையாலும், பொய்யை மெய்யாலும் வெற்றிகொள்ள முடியம் 

சுபபோக வாழ்வு கூடாது. கொடிய விரதங்களை கடைபிடிக்க தேவை இல்லை 

அறிவுள்ள எதிரியை விட மூடனான நண்பனின் நட்பு துன்பம் தரும் 

பிறப்புக்கு எது காரணமோ இறப்புக்கும் அதுவா காரணம் 

தூக்கம் போன்றது சாவு. தூக்கம் நீங்கி விழித்து கொள்வது போன்றது பிறப்பு 

விரோதமற்ற மனிதன் எதை செய்தாலும் அது தழைத்தோங்கும் 

பிரியம் உள்ளவரை காண்பதும், பிரியம் இல்லாதவரை காண்பதும் வேதனை தரும் 

குரு போதிப்பதை அவரிடம் கொண்டுள்ள மதிப்பின் காரணமாக மட்டும் எற்றுகொள்ளதிர்கள் 

வயது முதிர்ந்த பெரியோரை விடாமல் வணங்கி வருபவனுக்கு ஆயுள், அழகு, இன்பம்,வலிமை ஆகிய நான்கும் அதிகரிக்கும் 

தலை மயிர் நரைத்து விட்டதனால் மட்டும் ஒருவர் பெரியவர் ஆகிவிட முடியாது.

ஆசைக்கு நிகரான நெருப்பு இல்லை,
பகைமைக்கு நிகரான பாவம் இல்லை,
உடல் துன்பத்திக்கு நிகரான துன்பம் இல்லை,
மனச் சாந்திக்கு நிகரான இன்பம் இல்லை.

உணவினை அனைவருக்கும் பகிர்ந்து கொடுத்து உண்ணவேண்டும், கவனத்தோடும் கருணையோடும் செய்யும் தானம் கடவுளர் உலகில் உங்களை சேர்க்கும் 

எல்லா தானங்களை விட தர்ம தானமே வெல்கிறது.எல்லா இனிமைகளையும் விட தர்ம இனிமை வெல்கிறது. எல்லா இன்பங்களை விட தர்ம அனுபவம் வெல்கிறது. எல்லாத் துன்பங்களையும் விட அவாவின்மை வெல்கிறது.

பொறாமை, வஞ்சனை,சுயநலம், முதலியவற்றை பிடுங்கி எறிந்துவிட்டு, எவர் வெறுப்பின்றி இருக்கிறாரோ அவரே பெரியவர்

╰─❀──❃──❋──❀──❃───❀───❀─── ❀──❀─╮
படித்தவர்களுக்கு அடக்கம் வேண்டும்
╰─❀──❃──❋──❀──❃───❀───❀─── ❀──❀─╮
* கல்வியின் பயன் உலகத்தை இயக்குகின்ற ஆண்டவனைத் தெரிந்து கொள்வது தான். ஆனால், இந்தக் காலத்தில் படிப்பவர்கள் பலபேருக்குத் தெய்வபக்தி என்பதே இல்லாமல் போய்விட்டது. 

* கல்வி கற்றதன் அடையாளமே அடக்கம் தான். பெரியவர்களைக் கண்டால் வணக்கம் சொல்லவேண்டும் என்பதை பிள்ளைகளுக்குக் கற்றுத்தரவேண்டும்.

* பெண்ணுக்கு இயல்பிலேயே அடக்கவுணர்வு அதிகம். கல்வி கற்கும்போது அது இன்னும் அதிகமாக வேண்டுமே ஒழிய குறையக்கூடாது. ஆனால், படித்த பெண்களுக்கு அடக்கம் என்பது அறவே இல்லாமல் போய்விடுவது பெருங்குறையே.

* அதிகமாகப் படித்துவிட்டோம் என்று பலர் அகங்காரத்தோடு நடந்து கொள்வது சரியல்ல. கல்வி குணத்தை உயர்த்துவதற்காகத்தானே தவிர, குணத்தை கெடுப்பதற்காக அல்ல.

* குருகுலக்கல்வி மீண்டும் நடைமுறைக்கு வருவதற்கு வாய்ப்பில்லை. ஆனால், நம் பழைய முறையின் பின்னணியை மறக்காமல், அடக்கம், பணிவு, தூய்மை, குருபக்தி உள்ள குழந்தைகளை வளர்க்கவேண்டியது இன்றைய ஆசிரியர்களின் கடமையாகும். 


கோபத்தை அடக்கச் சுலபமான வழிகள்..!

1. பொருட்படுத்தாதீர்கள். உங்களைப் பற்றி அவதூறாகவோ, மிக மட்டமாகவோ யார் பேசினாலும் அதைக் காதில் வாங்கிக் கொள்ளாதீர்கள். அதைக் கண்டு கொள்ளாமல் விட்டுவிடுங்கள். எதிரிகள் ஏமாந்து விடுவார்கள்.

2. எதையும் யாரிடமும் எதிர்பார்க்காதீர்கள். ஒருவரிடம் நாம் ஒன்றை எதிர்பார்த்து அது கிடைக்கவில்லையென்றால், அவர் மீது கோபம் நமக்கு வருவது இயற்கை தான். எனவே, யாரிடமும் எதையும் எதிர்பார்க்காதீர்கள்.

3. எதிரிகளை அலட்சியம் செய்யுங்கள். தனக்குப் பிடிக்காத மனிதர்களைப் பற்றி நினைத்துக்கூடப் பார்க்கக்கூடாது. அதனால் நமக்கு ஆத்திரமும், கோபமும் அடிக்கடி ஏற்படுவதை தவிர்க்கலாம். தன்னம்பிக்கை உள்ளவனை ஒரு போதும் அவதூறுகளும், ஏச்சு பேச்சுகளும் பாதிப்பதில்லை.

4. தேவையற்ற எண்ணங்களை நிறுத்தி விடுங்கள். பிடிக்காத நபர்கள் மற்றும் செயல்களைப் பற்றி எண்ணம் வரும்போது, அந்த எண்ணங்களுக்கு பெரிய பூட்டு போட்டுவிடுங்கள்.





SON: "Daddy, may I ask you a question?"
DAD: "Yeah sure, what is it?"
SON: "Daddy, how much do you make an hour?"
DAD: "That's none of your business. Why do you ask such a thing?"
SON: "I just want to know. Please tell me, how much do you make an hour?"
DAD: "If you must know, I make $100 an hour."
SON: "Oh! (With his head down).
SON: "Daddy, may I please borrow $50?"
The father was furious.
DAD: "If the only reason you asked that is so you can borrow some money to buy a silly toy or some other nonsense, then you march yourself straight to your room and go to bed. Think about why you are being so selfish. I work hard everyday for such this childish behavior."

The little boy quietly went to his room and shut the door.
The man sat down and started to get even angrier about the little boy's questions. How dare he ask such questions only to get some money?
After about an hour or so, the man had calmed down, and started to think:
Maybe there was something he really needed to buy with that $ 50 and he really didn't ask for money very often. The man went to the door of the little boy's room and opened the door.

DAD: "Are you asleep, son?"

SON: "No daddy, I'm awake".
DAD: "I've been thinking, maybe I was too hard on you earlier. It's been a long day and I took out my aggravation on you. Here's the $50 you asked for."

The little boy sat straight up, smiling.
SON: "Oh, thank you daddy!"
Then, reaching under his pillow he pulled out some crumpled up bills. The man saw that the boy already had money, started to get angry again. The little boy slowly counted out his money, and then looked up at his father.

DAD: "Why do you want more money if you already have some?"

SON: "Because I didn't have enough, but now I do.

"Daddy, I have $100 now. Can I buy an hour of your time? Please come home early tomorrow. I would like to have dinner with you."
The father was crushed. He put his arms around his little son, and he begged for his forgiveness. It's just a short reminder to all of you working so hard in life. We should not let time slip through our fingers without having spent some time with those who really matter to us, those close to our hearts. Do remember to share that $100 worth of your time with someone you love? If we die tomorrow, the company that we are working for could easily replace us in a matter of days. But the family and friends we leave behind will feel the loss for the rest of their lives. And come to think of it, we pour ourselves more into work than to our family.

Some things are more important.

 Keep going, even as you age,...... Wisdom worth listening to:

While you are alive, don't worry about what others will think or say about you - just do what you believe is right without paying much attention to praise and criticism.
 
Don't worry about what will happen after you are gone, because when you return to the dust, you will feel nothing about praise or criticism.

Don't worry too much about your children for children will have their own destiny and find their own way.
 
Do whatever you can to help them grow into responsible, caring and productive human beings, but don't be your children's slave.

Don't expect too much from your children. Caring children, though caring, could be too busy with their jobs and commitments to render any help.

Uncaring children may fight over your assets even when you are still alive, and wish for your early demise so they can inherit your property.

Your children take for granted that they are rightful heirs to your wealth; but you have no claims to their money.

As you grow older, don't trade in your health for wealth any more...
Because your money may not be able to buy your health …
Know when to stop making money and how much is enough (hundred thousand, million, ten million?)

Even if you had a thousand hectares of good farm land, you can only consume one quart of rice daily;
Even if you had a thousand mansions, you need only three square meters of space to rest at night.

So as long as you have enough food and enough money for your essential needs, that is good enough. So you should live happily.
 
Every family has its own problems. Just do not compare with others for fame and social status and see whose children are doing better, etc. but challenge others for happiness, health and longevity.
 
Dont worry about things that you can't change because worrying doesn't help and it will affect your health.

You have to create your own well-being and find your own happiness.

Strive to keep yourself in a good mood, think about happy things, do happy things daily and have fun in doing them, then you will pass your time happily every day.

One day passes, you will lose one day;…One day passes with happiness, and then you gain one day.

In good spirit, sickness will cure; in happy spirit, sickness will cure fast; in good and happy spirit, sickness will never come.

With good mood, suitable amount of exercise, lots of sun, variety of foods, reasonable amount of vitamin and mineral intake, you will enjoy years of healthy life.

Above all, learn to cherish the goodness around ……FAMILY and FRIENDS……..they all make you feel young and "wanted"





குப்பைக்கு போகும்...
50% உணவுப் பொருட்கள்!

ஒரு பக்கம் உணவுக்காக கையேந்தி நிற்கும் மக்களின் கூட்டம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. மறுபக்கமோ... உற்பத்தியாகும் உணவுப் பொருட்கள், தேவையில்லாமல் வீணடிக்கப்படுகின்றன. உற்சாக கொண்டாட்டங்கள், நட்சத்திர உணவகங்கள், ஆடம்பர திருமணங்கள் என்று பல இடங்களிலும் இப்படி வீணடிக்கப்படும் உணவுகள்... காணும்போது கண்ணீரைத்தான் வரவழைக்கும்!

இந்நிலையில்... ''உலக அளவில் உற்பத்தியாகும் உணவுப் பொருட்களில் 50 சதவிகிதம்... தேவையற்ற காரணங்களால் வீணாகிக் கொண்டிருக்கிறது'' என்று வருத்தம் பொங்க தன்னுடைய ஆய்வு அறிக்கையை வெளியிட்டுள்ளது... இங்கிலாந்தில் உள்ள 'இன்ஸ்டிட்யூஷன் ஆஃப் மெக்கானிக்கல் இஞ்ஜினியர்ஸ்' எனும் அமைப்பு.

''கடைகளில் காய், கனிகள் வாங்கும்போது... அவை பார்ப்பதற்கு சீராகவும் நேர்த்தியாகவும் இருக்க வேண்டும் என்கிற மனோபாவம் காரணமாக, பணக்காரர்களால் காய்கள் மற்றும் கனிகள் ஒதுக்கித் தள்ளப்படுகின்றன. இப்படி ஒதுக்கப்படுபவை.... பெரும்பாலும் வீணாக குப்பைக்குத்தான் செல்கின்றன. அதேபோல, கூடுதலாக இறைச்சி சாப்பிடும் பழக்கமும் தற்போது அதிகரித்துள்ளது. இப்படி பல காரணங்களால் உணவுப் பொருட்கள் வீணாகின்றன.

வளர்ந்து வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப உணவை வழங்கத் தேவைப்படும் இயற்கை வளங்கள் பூமியில் குறைவாகவே உள்ளன. இந்த நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் இன்னும் கூடுதலாக முன்னூறு கோடி பேருக்கு உணவளிக்க வேண்டிய நிலையும் ஏற்படும். இத்தகைய சூழலில்... உணவை விரயம் செய்யும் துர்பாக்கியம் இனியும் தொடரக் கூடாது'' என்று கேட்டுக் கொண்டிருக்கும் அந்த அமைப்பு...

''நீராதாரங்களின் மேலாண்மையும் மோசமாக இருக்கிறது. தவறான இடங்களில் ஆழ்துளை கிணறுகளை அரசுகளும் தனியாரும் தோண்டுவது இதற்கு ஓர் உதாரணம். பெருமளவில் நீர் ஆவியாகும் வகையில் விவசாயம் செய்வது மோசமான விளைவுகளையே ஏற்படுத்தும். எனவே, சொட்டுநீர் பாசனத்தை மேற்கொள்வது பலன் தருவதாக இருக்கும்'' என்றும் அந்த ஆய்வறிக்கையில் கோடிட்டு காட்டியுள்ளது!


முன்னோர்கள் சொன்னது.........
-------------------------- ----------------
ஆபத்துக்கு உதவாத மகன்,
கொடும் பசியில் இல்லாத உணவு,
தாகத்தை தீர்க்காத நீர்,
வறுமை அறியாத மனைவி,
கோபம் தணியாத மனிதன்,
ஆசான் வார்த்தை கேளாதவன்,
பாவத்தை தீர்க்காத தீர்த்தம் 

- இவையாவுமே பயன் இல்லை 

கடன் வாங்கிய தந்தை,
கணவனுக்கு அடங்காத மனைவி,
மூடனான மகன்,
பாசமில்லாத தாய்

-ஆகியோர் தனக்கு தானே பகையாவர்கள்.

நன்றி திரு கருணாநிதி அவர்களுக்கு