Content on this page requires a newer version of Adobe Flash Player.

Get Adobe Flash player

Content on this page requires a newer version of Adobe Flash Player.

Get Adobe Flash player














free page counter












___________________________________________________________________________


மயிலிட்டி டொட் கொம் அறக்கட்டளையின் ஒரு வருட நிறைவையிட்டு மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு 19-04-2013 அற்று தாயகத்தில் நடைபெற்றபொழுது எடுக்கப்பட்ட புகைப்படங்கள். நன்றி


மயிலிட்டி . கொம் அறக்கட்டளை கல்வி கற்கையின் உதவி பெற்று படிக்கும் மாணவர்களின் ஒரு பகுதியினர்.

___________________________________________________________________________

நன்றி கூறல்

விடுமுறை காரணமாக  உங்களை சந்திக்கவில்லை எம் உறவுகளாகிய நீங்கள் தந்த ஆதரவிற்கு நன்றி கூறுகின்றோம். மயிலிட்டி மக்கள் உங்கள் இணைய தேவைகளை மயிலிட்டி டொட் கொம் இணையத்தினூடாக செய்துகொள்ளும்படி கேட்டுக்கொள்கின்றோம். நன்றி

___________________________________________________________________________

தாயக செய்தியாளர் தேவை

தாயகத்திலிருந்து மயிலிட்டி மக்களின் செய்திகளை மயிலிட்டி டொட் கொம்முக்கு தருவதற்கு செய்தியாளர் (ஆண்,பெண்) தேவைப்படுகின்றார். மயிலிட்டி மக்களாகிய நீங்கள் உங்கள் கிராமத்துக்கு உதவியாகவும் செய்யலாம் அல்லது நீங்கள் விரும்பினால் சேவைக்கேற்ற ஊதியம் வழங்கப்படும். புலம் பெயர் நாடுகளில் வாழ்கின்ற மயிலிட்டி மக்களுக்கு உடனுக்குடன் செய்திகள் சென்று அடையவேண்டும் என்பதற்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தொடர்புகளுக்கு மின் அஞ்சல் முகவரி worldwide@myliddy.com ,அல்லது பொறுப்பாளர்களுடன்.

நன்றி
மயிலிட்டி டொட் கொம்/ மயிலிட்டி டொட் கொம் அறக்கட்டளை

___________________________________________________________________________

மலர்வு 31-12-1947

உதிர்வு 08-11-2015

திருமதி விஜயராணி நவரட்ணராஜா


யாழ். பருத்தித்துறை பூதவராயர் கோவில் ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட விஜயராணி நவரட்ணராஜா அவர்கள் 08-11-2015 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற முத்துலிங்கம், விருத்தாம்பாள் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற விஜயரட்ணம், செல்வமணி(மயிலிட்டி) தம்பதிகளின் அன்பு மருமகளும்,

நவரட்ணராஜா அவர்களின் அன்பு மனைவியும்,

பிரியா, பிரிந்திகா, பிரிதிஷினி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற ஏரம்பமூர்த்தி, சிவராசா, ஜெயராணி, ஜீவராணி, இராசநாயகி, இரகுநாதன், இரங்கராஜா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

அருள்வேல், உதயகரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

ரட்ணராஜா, ரட்ணராணி, சுபாஷ் ரட்ணஜோதி, விஜயராணி, விஜயராஜா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காவியா, சங்கீதன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு:

பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447440705903

பிரித்தானியா
தொலைபேசி: +442088759754
செல்லிடப்பேசி: +447877915924

இவரது பிரிவால் துயருறும் குடும்பத்தினருக்கு அனைத்து உலக மயிலிட்டி மக்கள் சார்பாக
மயிலிட்டி . கொம் ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கின்றது.

___________________________________________________________________________

மயிலிட்டியின் மகள் நர்வினிடேரி நடித்து வெளிவந்த தமிழ் திரைப்படம் உயிர்வரை இனித்தாய் முதலில் ஐரோப்பாவில் திரையிடப்பட்டது, தற்போது தமிழ்நாட்டில் திரையிடப்படுகின்றது அவருக்கு எங்களின் வாழ்த்துக்கள்.
 
 

___________________________________________________________________________


கலைமகள் மகாவித்தியாலய அலை
ஓசை புத்தக வெளியீடு.

08-11-2015

___________________________________________________________________________

___________________________________________________________________________

___________________________________________________________________________


___________________________________________________________________________

மலர்வு 10-06-1935

உதிர்வு 06-07-2015

திரு. சிவகுரு துரைராசா


மயிலிட்டி நாவலடி ஒழுங்கையை பிறப்பிடமாகவும் நீர்கொழும்பை வசிப்பிடமாகக் கொண்ட
திரு. சிவகுரு துரைராசா அவர்கள் காலமானார்
அன்னார் வள்ளியம்மை(அமரர்),  அவர்களின் அன்புக்கணவரும்.
கனகராசா, காந்தரூபி, சற்குணராசா, தவகுலராசா(அமரர்) அவர்களின் அன்புத்தந்தையும்.
சேனாபதிராசா(அமரர்), தங்கராசா(அமரர்), அம்மன்கிளி, மகராசா, அன்னக்கிளி(அமரர்), மலர்மணி ஆகியோரின் அன்புச்சகோதரரும்.
இலட்சுமிஅம்மா(அமரர்), அருந்ததி(அமரர்) செல்வவேலாயுதம்(அமரர்), மலர் காசிப்பிள்ளை, இராசரட்ணம், செல்வநாயகம்(அமரர்), இராசையா(அமரர்), கந்தசாமி(அமரர்), ஆகியோரின் மைத்துணரும் ஆவார். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம்வல்ல மயிலிட்டி முருகனை வேண்டுகிறார்கள்.
அந்நியேட்டி: அன்னாரின் அந்நியேட்டிக் கிரியை யாழ் கீரிமலையில் (03-08-2015 திங்கள் கிழமை) நடைபெறவுள்ளது.
அதன்பின்பு (05-08-2015 புதன் கிழமை) 86, அலஸ் வீதி நீர்கொழும்பில் உள்ள அன்னாரின் இல்லத்தில்
“ஆத்மசாந்தி பூசை நடைபெற உள்ளது”
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், அயலவர், நண்பர்கள் அனைவரும் அன்புடன் ஏற்றக்கொள்ளவும்.

வீட்டு முகவரி:
86, அலஸ் வீதி
நீர்கொழும்பு
இலங்கை.


தொடர்புகளுக்கு:
இலங்கை:
கனகராசா -0094 7781 43 132
காந்தரூபி -0091 7770 47 493

இந்தியா:
அம்மன்கிளி -0091 431 6505812


பிரித்தானியா:

மலரமணி -0044 2036 898 794
பாபு -0044 7988 246 698
நேரு -00447455 978 305

பிரான்ஸ்:
சற்குணராசா -0033 995 1744 469
ரவிந்திரன் -0033 666 309 620


கனடா:
யோகராணி -0051 145 083 567
நிரஞ்சன் -0015 144 339 980

 

இவரது பிரிவால் துயருறும் குடும்பத்தினருக்கு அனைத்து உலக மயிலிட்டி மக்கள் சார்பாக
மயிலிட்டி . கொம் ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கின்றது.

___________________________________________________________________________

மண்ணின் தோற்றம்
28-06-1932
திருமலை

மண்ணின் மடியில்
13-06-2015
Catford, London.

திருமதி கதிர்காமத்தம்பி இலட்சுமிப்பிள்ளை,

விநாயகர் வீதி, மயிலிட்டி காங்கேசன்துறையைச் சேர்ந்த குணபாலசிங்கம் ( குணம் ) – பரமேஸ்வரியின் மகளான வளர்மதி ( லதா ) அவர்களின் பாசமிகு மாமியும் ( கணவனின் தாய் )
திருகோணமலை. முதூர் சேனையூர் 6ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும், யாழ்.  மயிலிட்டி , பருத்தித்துறை, முல்லைத்தீவு   ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், london, Lewisham Catford ஜ தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட கதிர்காமத்தம்பி இலட்சுமிப்பிள்ளை அவர்கள் 13-06-2015  சனிக்கிழமை அன்று வாழ்வாங்கு வாழ்ந்து சிவபதம் அடைந்தார்.
காலம்சென்றவர்களான ஏரம்பு தெய்வானைப்பிள்ளையின் அன்பு மூத்த மகளும், காலம்சென்றவர்களான இளையதம்பி நாகமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,
அன்னார் காலம்சென்ற கதிர்காமத்தம்பியின் அன்பு மனைவியும்,
நேசபாக்கியம், காலம்சென்றவர்களான அரசரட்ணம், சிவபாலசுந்தரம்,  மற்றும் ஆனந்தராசா, இராசலிங்கம், காலம்சென்ற தேவராசா,  சிவபாக்கியம், உதயராசா ( நேரு – லண்டன் ) ஆகியோரின் தாயாரும்,
கனகசிங்கம் ( சேனையூர் ), மகேஸ்வரி ( கட்டைப்பறிச்சான் ), சரஸ்வதி ( கட்டைப்பறிச்சான் ), ரதிதேவி ( சேனையூர் ), கௌரிதேவி ( தம்பலகாமம் ), பாலேஸ்வரி ( சல்லி ), வளர்மதி ( லதா ) -– யாழ். மயிலிட்டி –- லண்டன் ) ஆகியோரின் அன்பு மாமியும்,
பார்வதிப்பிள்ளை, காலம்சென்ற அமிர்தவதிப்பிள்ளை, சிவபாக்கியம், ருபவதிப்பிள்ளையின் அன்பு சகோதரியும்,

காலம்சென்றவர்களான ஆறுமுகம், சுப்பையா, ராசதுரை மற்றும்  சித்திரவேல் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
திருச்செல்வம், திருமதி, அருட்செல்வம், ஜெயச்செல்வன், ரதிசீலன், ஜீவா, அஜந்தா, சுகிர்தா, சுபேஸ், தர்சினி, தயாளினி, ரூபா, அஜந்தா, அர்ச்சனா, அகிலன், அரசி, ரேவதி, தீபன், செந்தூரன், சிந்துயா, தாசதீபன், கிருஜா, அஸ்வினி, அஸ்வரியா, அஸ்னவி, அஸ்வின், அர்ச்சனா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
கணவனின் வழியில் காலம்சென்றவர்களான பாக்கியம், ஐயாத்துரை, செல்வராசா, இராசரட்ணம் ஆகியோரின் சகலியும் ஆவார்,
அன்னார் அவர்களின் இருபத்தொரு பூட்டப்பிள்ளைகளுக்கு பாசமிகு பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், அயலவர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்,
குடும்பத்தினர்.

இலட்சுமி அம்மா —நேருவின் தாயார்..
அம்மா நீ மண்ணை விட்டு சென்றாலும், என் நெஞ்சை விட்டு செல்லவில்லை !!! 

நிகழ்வுகள் :

பார்வைக்கு:


திகதி:

வெள்ளிகிழமை ,03-07-2015,.. – 10:00  – 16.00 மணிவரை.
முகவரி:

123-125, Sydenham Road, SYDENHAM ,, LONDON..SE6 5HB, UK..

கிரிகை:


திகதி:

திங்கள்கிழமை, 06-07-2015 ,,-- 09:00 – 12:00 மணிவரை..
முகவரி:

St.Laurence Centre Church Hall ( A21 ),,, 37 Bromley Road , CATFORD, LONDON,  SE6 2TS ,, UK..

தகனம்:


திகதி:

திங்கள்கிழமை , 06-07-2015 ,13:00,-- 13:30  மணிவரை..
முகவரி:

HITHER GREEN Crematorium,, Verdant Lane,, CATFORD. LONDON, SE6 1TP,, UK..


செலவு ( 8 )      
வீட்டில் – செவ்வாய் 07.07.2015 

செலவு ( 31 )    
வீட்டில் – திங்கள் 13.07.2015     


தொடர்புகளுக்கு;
வீட்டு முகவரி,
50 Engleheart Road, CATFORD..
Lewisham , LONDON.
SE6 2HP.
UK,,

நேரு , லதா         :: வீட்டுத்தொலைபேசி  :: 00442035830892.
உதயராசா ( நேரு )   :: கைத்தொலைபேசி : 00447730660456..
வளர்மதி ( லதா )    ::  கைத்தொலைபேசி ::, 00447932245462.      
VIBER : 00447984254448.
SKYPE : neeru2000


இவரது பிரிவால் துயருறும் குடும்பத்தினருக்கு அனைத்து உலக மயிலிட்டி மக்கள் சார்பாக
மயிலிட்டி . கொம் ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கின்றது.

___________________________________________________________________________

மயிலிட்டி மக்கள் ஒன்றியம் பிரித்தானியா




பிரித்தானியாவில் இவ்வருடத்திற்கான தமிழ்பாடசாலைகள் விளையாட்டுச்சங்கத்தின்(tssa)உதைபந்தாட்டப் போட்டியில் எமது அணியாகிய மயிலிட்டி விளையாட்டுக்கழகம் . மயிலிட்டி றோமன் கத்தோலிக்க வித்தியாலயம் சார்பாக போட்டியிட்டு 12வயதிற்குட்பட்டோர் பிரிவில் 1ஆம் இடத்தைப்பெற்று எமக்கும் எமது ஊரிற்க்கும் பெருமை சேர்த்துள்ளார்கள் . அத்துடன் இப்போட்டியின் ஆட்ட நாயகனாகவும் எமது அணியைச்சார்ந்த சாரங்கன் தங்கக்குமரனையே தெரிவுசெய்துள்ளார்கள். இச்சாதனைக்குரிய வீர்ர்களை வாழ்த்துவதில் பிரித்தானிய மயிலிட்டி மக்கள் ஒன்றியம் பெருமை கொள்கின்றது. நன்றி.

___________________________________________________________________________

சைவ சித்தாந்தம் –( பகுதி – 12)
(நாகேந்திரம் கருணாநிதி)


திரு நாகேந்திரம் கருணாநிதி அவர்களின் சைவ சித்தாந்தம் மற்றும் அவருடைய ஆக்கங்கள் அனைத்தையும் இன்று முதல் அவருக்கென்று தனியாக உருவாக்கப்பட்ட பக்கத்தில் சென்று பார்க்கவும். நன்றி


___________________________________________________________________________

பிரித்தானியா மயிலிட்டி மக்கள் ஒன்றியத்தின் ஒன்று கூடல் 2015


பிரித்தானியா மயிலிட்டி மக்கள் ஒன்றியத்திள் ஒன்றுகூடல் 05-04-2015 அன்று மிகவும் சிறப்பாக நடைபெற்றது அவற்றின் சில புகைப்படங்கள்.
09-04-2015

___________________________________________________________________________

பிருத்தானியா மயிலிட்டி விளையாட்டுக்கழகத்தின் அறிவித்தல்

பிருத்தானியாவில் 2014ம் ஆண்டு நடைபெற்ற விளையாட்டுப்போட்டியில் பங்குபற்றி வெற்றி பெற்ற அனைவரையும் எதிர்வரும் 05-04-2015 அன்று நடைபெறும் ஒன்றுகூடல் நிகழ்வின்போது பிற்பகல் 5.00 மணிக்கு கெளரவித்து பரிசில்கள் வழங்கப்படவுள்ளது. எனவே அனைவரையும்
5.00 மணிக்கு முன்பாக சமூகமளிக்கும்படி நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கேட்கின்றார்கள். நன்றி
மேலதிக விபரங்களுக்கு 7771928086
03-04-2015

___________________________________________________________________________

பிரான்ஸ் அருண்குமாரின் copyright, மற்றும் மயிலிட்டி. சிஎ

மயிலிட்டி டொட் கொம் பல மணி நேரத்தோடு பணத்தையும் மயிலிட்டி மக்களுக்காக செலவு செய்கின்றது வேறு நாடொன்றின் செய்தியை வெளியிடும்போது ஒன்றிற்கு மேற்பட்ட தரம் தொடர்புகொண்டு அதன் பின் அவர்கள் தரும் புகைப்படங்களை வெட்டி ஒட்டி அழகாக்கிய பின்புதான் இணையத்தில் போடுகின்றோம். கிருபானந்தனின் மரண அறிவித்தல் எங்களால் வடிவமைக்கப்பட்டது அதை பிரான்ஸ் அருண்குமாரும், கனடா மயிலிட்டி. சி ஏயும் எங்களின் அனுமதியின்றி எடுத்து தங்களின் இணையத்தில் போட்டுள்ளார்கள். இப்படி செய்வது முதல் தரம் இல்லை அதனால்தான் இதை எழுதவேண்டியுள்ளது. அருண்குமார் தனது இணையத்தில் copyright ஐ போட்டுவிட்டு எப்படி இதை செய்யமுடியும். வேறு  இணையங்களை தங்கள் இணையத்தில் இணைத்துள்ளார்கள் மயிலிட்டி டொட் கொம்ஐ இணைக்கவில்லை. ஆனால் எங்களின் அனுமதியும் பெறாமல் எங்களின் பெயரும் போடாமல் தாங்கள் செய்து போட்டதுபோல் போட்டுள்ளார்கள். கேட்டால் அருண்குமார் தான் பிழை செய்யாததுபோல் பதில் கூறுவார். மக்கள் தங்கள் முக நூல்களில் போடும் ஆக்கங்களை நாங்கள் அவர்களின் அனுமதியின்றி எடுத்து  இணையத்தில் போட்டு பல மக்கள் எங்களோடு இருப்பது போன்று மக்களை நாங்கள் ஏமாற்றுவதில்லை, நாங்களே எங்கள் இணையத்தில் ஒரு அறிவித்தலை போட்டுவிட்டு அதற்கு நாங்களே வேறு வேறு பெயரில் நன்றி கூறியும் மக்களை ஏமாற்றுவதில்லை. எங்களால் முடியுமானதை மட்டுமே செய்கின்றோம்.
நன்றி
02-04-2015  

___________________________________________________________________________

மயிலிட்டி முருகன், அம்மன் ஆலயங்கள் புனரமைப்பு

யாழ்பாணத்தில் உள்ள ஒரு தபால் கந்தோருக்கு, சம்பத்தில் முருகள், மற்றும் அம்மன் ஆலயங்களின் பேரில் இரண்டு கடிதங்கள் வந்ததாகவும், இரண்டு ஆலயங்களையும் புனரமைப்பும் செயவதற்காக ஓவ்வொரு ஆலயத்துக்கும் தலா பத்துலட்சம் ரூபா வழங்கப் படவுள்ளதாகவும், அதற்காக ஆலயங்கனின் நிர்வாகிகளின் விபரங்களையும், மற்றும் வேறு தகவல்களையும் அரசாங்கம் கேட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கப் பெற்ற செய்தி ஓன்று தெரிவிக்கின்றது மேலும் மயிலிட்டி பிள்ளையார் மற்றும் காணிக்கை மாதா, ஆலயங்களும் இருந்தது, அவற்றையும் புனரமைப்பு செய்வதற்கு தாயக்கத்தில் உள்ள மயிலிட்டி மக்கள் முயச்சி செய்ய வேண்டும் என்று அனைத்துலக மயிலிட்டி மக்கள் சார்பாக மயிலிட்டி டொட் கொம் கேட்கின்றது.
நன்றி
23-03-2015  

___________________________________________________________________________

முதலமைச்சரை மயிலிட்டி மக்கள் சந்திப்பு

முதலமைச்சர் விக்னேஸ்வரன் அவர்களைச் சந்தித்து மயிலிட்டிக்கு மீள் குடியேற்றம் சம்மத்தமாக கதைத்துள்ளார்கள்

21-03-2015

___________________________________________________________________________

சில தினங்களில் ஐனாதிபதியும் அமைச்சர்களும் மயிலிட்டி கிராமத்தை பார்வையிட வருகிறர்கள்

ஐனாதிபதியையும் அமைச்சர்களையும்  நேரில் சந்தித்து மீள் குடியேற்றம் பற்றிய கருத்துக்களையும் கலத்து உரையாட உள்ளார்கள்

___________________________________________________________________________

மீள்குடியேற்றம்

வலிகாமம் வடக்கு, மன்னார் முள்ளிக்குளம், கிழக்கு மாகாணத்தில் மூதூர் போன்ற இடங்களில் வசித்த மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு அங்கு இராணுவத்தினர் நிலைகொண்டிருப்பதாகவும் அதனால் இடம்பெயர்ந்துள்ள மக்கள் பெரும் சிரமங்களுக்கு உள்ளாகியிருப்பதாகவும் புதிய ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கில் இருந்து வெளியேற்றப்பட்ட மக்கள் மீள்குடியேற்றப்படாத காரணத்தினால் இந்து மற்றும் கத்தோலிக்க மக்கள் தமது பாரம்பரிய வழிபாட்டுத் தலங்களுக்குச் செல்ல முடியாமல் தடுக்கப்பட்டிருக்கின்றார்கள் என்றும் அந்தப் பிரதேசத்தில் இருந்த 45 பாடசாலைகள் செயலிழந்திருப்பதனால் அந்த மக்களுடைய கல்வி பாதிக்கப்பட்டிருப்பதாகவும் புதிய ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
அத்தோடு, மயிலிட்டி பிரதேசத்தில் மக்கள் தமது கடற்தொழிலை இழந்து சிரமங்களுக்கு உள்ளாகியிருக்கின்றமை உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகளுக்கு அரசு தனது 100 நாள் வேலைத்திட்டத்தில் முன்னுரிமை அடிப்படையில் தீர்வுகாண முன்வர வேண்டும் என்றும் யாழ். மறைமாவட்டத்தின் நீதிக்கும் சமாதானத்துக்குமான ஆணைக்குழு கோரியிருக்கின்றது.

___________________________________________________________________________

பிரான்ஸ் மயிலிட்டி மக்களுக்கு

நீங்கள் மயிலிட்டி டொட் கொம்மின் மரியாதைக்குரியவரிடம் செய்தியில் ஒரு திருத்தம் செய்யும்படி கேட்டுள்ளீர்கள். முதலில் தொடர்பு கொண்டதற்கு நன்றி. நீங்கள் ஞாயமான தேவைகள் எதையும் உரிமையோடு நேரடியாக எங்களோடு தொடர்புகொண்டு பெற்றுக்கொள்ளலாம். உங்களது வேண்டுகோளுக்கு அதற்கான பதிலை தந்து மாற்றத்தை செய்வதற்கு தயாராக இருக்கின்றோம். உங்களது தொலைபேசி இலக்கத்தை கேட்டோம் தரவில்லை என்று கூறினார். உரியவர்கள் உடனடியாக தொடர்பு கொள்ளும்படி அன்போடு கேட்கின்றோம். மேலும் இணயத்தின் செயற்பாட்டிற்காக பிரான்ஸ் ஒன்றியத்தின் உதவிகள் எமக்கு தேவைப்பட்டது அதற்காக பல கடிதங்கள் ஒன்றியத்தின் பெயரிலுள்ள இணையத்திற்கு அனுப்பப்பட்டது பதில் எதுவும் ஒன்றியத்தினால் தரப்படவில்லை ஜெமின்தாரோடும், கெளசிகனோடும் தொடர்பு கொண்டு கேட்டபோது உரியவர் தங்களிடம் கடிதங்களை தரவில்லை என்று கூறினார்கள்.. அப்படியானால் இணையம் யாருடையது? இன்றும் எங்களுக்கான தேவை இருக்கின்றது யாருடன் தொடர்பு கொள்வது என்று தெரியவில்லை உரியவர்கள் தயவு செய்து எங்களுடன் தொடர்பு கொள்ளவும்.  தொலைபேசி இலக்கம் 14169483933
நன்றி. 09-02-2015

___________________________________________________________________________

மயிலிட்டி மக்களுக்கு

உங்களின் கருத்துக்களை பதிவு செய்வதற்காக கருத்து தெரிவித்தல் பக்கதில் இரண்டு வழிகளில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, அத்துடன் மயிலிட்டி டொட் கொம்மின் முதல் பக்க செய்திகளின் இணைப்பை மற்றவர்களுக்கும் நீங்கள் அனுப்பி பரிமாறிக்கொள்ளும் வசதிகள் செய்யப்பட்டுள்ளது. எங்களின் நல்லவற்றை மற்றவர்களிடம் கூறுங்கள், தவறுகளை உரிமையோடு தட்டிக் கேளுங்கள். நன்றி

___________________________________________________________________________

மயிலிட்டி மக்களால் வல்வெட்டித்துறை சிவன் கோவிலில் நாடாத்தப்பட்ட கொடியேற்ற திருவிழாவின் 2014 இன் வரவு செலவு அறிக்கை.



பங்குனி மாதம் 20 திகதி 2015 கொடியேற்ற உற்சவத்தில் நீங்கள் கலந்து கொள்வதிற்கும் உங்கள் பங்களிப்பை செய்வதிற்கும் திரு நா.வடிவேஸ்வரனுடன் தொடர்பு கொள்ளவும். எங்களுடன் தொடர்புகொண்டாலும் நாங்கள் அவர்களுடனான தொடர்பை ஏற்படுத்தித்தருவோம். நன்றி
ஒவ்வொரு வருடமும் இந்த திருவிழாவை நல்லமுறையில் முன்நின்று நடத்துவதிற்காக
நிரு நா.வடிவேஸ்வரன், திரு க.அருணகிரிநாதன், திரு இ.ஞானராசா அவர்களிற்கு அனைத்து உலக மயிலிட்டி மக்கள் சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்ளுகின்றோம்.

மயிலிட்டி டொட் கொம்

___________________________________________________________________________

மயிலிட்டி மக்களுக்கு

தாயகத்தில் மீழ் குடியேற்றக்குழு அவசர கூட்டம் ஒன்றை நடாத்தியுள்ளது இசைத்தட்டு வெளியீட்டு கணக்குகள் கொடுக்கப்பட்டுள்ளது. பல மாதங்களாக காட்டப்படாமல் இருந்த கணக்கறிக்கை இது. அந்த கூட்டத்திற்கு வந்திருந்த அவரது உறவினர்கள் நண்பர்கள் சிலர் மயிலிட்டி டொட் கொம் தவறு செய்ததுள்ளது என்று தெரிவித்திருக்கின்றார்கள்.  நாங்கள் மற்றவர்களைப்போல் ஒளிந்திருந்துகொண்டு இணையம், முகநூலை செயற்படுத்தவில்லை தொலைபேசி இலக்கம், மின் அஞ்சல் தந்திருக்கின்றோம் செய்திகளில் தவறு இருந்தால் ஏன் தட்டி கேட்கவில்லை நாங்கள் எழுதியபடியால்தானே நல்லது நடந்துள்ளது மக்கள் தானே எங்களை கேட்கச்சொல்லுகின்றார்கள். நாங்களும் மயிலிட்டி மக்கள்தான் என்பதை மறந்து விடாதீர்கள். ஒரு ஆதாரம் தருகின்றோம் சுவீசில் வசிக்கும் திரு அன்ரன் ஞானப்பிரகாசம் அவர்களிடம் பிரான்ஸில் வசிக்கும் அருண்குமார் தனது தகப்பனாரின் அடையாள அட்டை இலக்கத்தை  கொடுத்து பணத்தை அனுப்பச்சொல்லியுள்ளார் அவரும் ரூபா 25.000 ஆயிரத்தை நேரடியாக குணபாலசிங்கம்  அவர்களுக்கு அனுப்பியுள்ளார். ஆனால் தலைவர், செயலாளர், பொருளாளரால் கையெழுத்திடப்பட்ட கணக்கு அறிக்கையில்
அன்ரன் ஞானப்பிரகாசம் அவர்கள் கொடுத்த பணத்தின் தொகையை  வெளியிடவில்லை இது தவறுதலாக நடந்தது என்று கூறமுடியாது. கணக்கு அறிக்கை வெளியிட்டவுடன் அன்ரன் ஞானப்பிரகாசம் அவர்கள் அருண்குமாரோடு தொடர்பு கொண்டு அதற்கான பதிலை கேட்டுள்ளார் அருண்குமார் சரியான பதிலை கொடுக்கவில்லை.
அன்ரன் ஞானப்பிரகாசம் அவர்கள் மயிலிட்டி டொட் கொம்மை நம்பினார் கருத்து தெரிவித்தல் பக்கத்தில் எழுதினார் எழுதிய ஒரு மணி நேரத்தில் அருண்குமார் அன்ரன் ஞானப்பிரகாசத்தோடு தொடர்புகொண்டு தனது பெயரை நீக்கிவிடும்படி கெஞ்சியுள்ளார் அவரும் மனமிரங்கி பெயரை மட்டும் நீக்கிவிட்டார்.  பிரான்ஸ் அருண்குமார் நல்லவர் என்றால் ஏன் கெஞ்சவேண்டும் பெயரை நீக்கும்படி ஆனால் அவர் மின் அஞ்சல் மூலமாகவும் எங்களுக்கு ஏற்கனவே அனுப்பியிருந்தபடியினால் அதை மக்களின் பார்வைக்கு தருகின்றோம். மக்கள் சிந்தியுங்கள் நீங்கள் ஊமைகளாக இருக்கும்வரை பலபேர் மயிலிட்டியை கூறு போட்டு மக்களை பிரித்துவிடுவார்கள். இவர்களது உறவினர்களுக்கு அன்பான வேண்டுகோள் குறுந்தட்டு வெளியீடு என்றவுடன் முதல் சிறு தொகை பணமும் கொடுத்து சிறு தொகை கடனாகவும் கொடுத்து உதவி செய்தோம் பிழை என்றவுடன் மக்களுக்கு தெரியப்படித்தினோம் நல்லது நடந்தது. இப்படி யார் செய்தாலும் எங்களுக்கு அறியத்தாருங்கள் மக்களின் பார்வைக்கு எடுத்து செல்கின்றோம். நன்றி


Date: Sat, 31 Jan 2015 15:51:46 +0000
From: Anton Gnanapragasam <gganton65@hotmail.com>
Reply-To: Anton Gnanapragasam <gganton65@hotmail.com>
Subject: RE
To: "myliddy.com" <worldwide@myliddy.com>, Kumar Gunapalasingam <myliddy@myliddy.fr>

Anton Gnanapragasam:
மயிலிட்டி.கொம் பல உண்மைகளை மக்கள் முன் கொண்டுவருவதற்:கு என் வாழ்த்துக்கள்.

மயிலிட்டி ஆலயங்களுக்கான சிடி வெளியீட்டுக்காக 25 000.- களை தாயகத்தில் அதன் பொறுப்பளருக்கு அனுப்பி வைத்தேன். ஆனால் அதை கணக்கில் காட்டவில்லை ஏன் இந்த ஏமாற்றுத்தனம்?யுhராவது அரசியலில் இறங்குவதால் இறங்கட்டும் அது அவர்களின் ஜனநாயக சுதந்திரம்.ஊர்ப்பெயரை இழிவு படுத்தாது சொந்தப் பெயரில் இயங்கட்டும்.வாழ்த்துகின்றோம்.ஏமாற்ராதீர்கள்.

பதில் தரவில்லை?
Anton Gnanapragasam 1/11/2015 Keep this message at the top of your inbox 
To: Kumar Gunapalasingam

அன்பின் குமார்!
நான் உன்னுடன் தொலைபேசியில் உரையாடிய போது மயிலிட்டியின் பாடல் ஒலித்தட்டிற்கு 25,000ருபா உதவி செய்தது ஏன் கணக்கில் வரவில்லை எனக் கேட்டேன்.கணக்கு கொடுக்கப்பட்ட பிரதிம் உனக்கு அனுப்பியிருந்தேன் ஏன் என்னம் பதில் தரவில்லை?

அன்புடன்
அன்ரன் ஞானப்பிரகாசம்.

உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள்

___________________________________________________________________________

50ம் ஆண்டு நினைவு அஞ்சலி


திரு அன்ரன் ஞானப்பிரகாசம் (றாஜ்) அவர்களுக்கு அனைத்து உலக மயிலிட்டி மக்கள் சார்பாக மயிலிட்டி டொட் கொம் நன்றியை தெரிவிக்கின்றது..

23.12.1964 எமது ஊரில் மிகப் பெரிய ஒரு சூறாவளிப்புயல் ஏற்பட்டு இதில் 153 பேர் வரை கடலில் மரணித்ததாக தகவல் உள்ளது அதில் 96 பேர் மயிலிட்டி மக்கள் ஏனையோர் எம் ஊர் வள்ளங்களில் தொழில்புரிந்த ஏனைய ஊர் மக்கள்.

1964 மார்கழி 23ல் ஏற்பட்ட சூறாவளிப்புயலுக்கு இலக்காகி இறந்தவர்களின் 50ம் ஆண்டு நினைவாக மலரும் நினைவு ......

விட்டுப் போனவன் விண்ணில் சாந்திபெற

அறுபத்தி நான்கில் அலைகடல் ஓரத்தில்
பெரும்துயர் நடந்து போனது அன்று
ஐம்பது ஆண்டுகள் ஆகியும் இன்று
அன்றைய நினைவினை இங்கிதம் பகிர்கின்றேன்.

மண்ணில்ப் பிறப்பு நாமெடுக்கும் முன்பே
அள்ளுண்டு போநோர்க்கு அஞ்சலிகள் இன்று
பொல்லாத புயல் சொல்லாமல் வந்து
அந் நாளில் எம்மவர் உயிர் குடித்து சென்றதுவே.

மயிலிட்டிக் கரையில் மரண ஓலம்......
மாதாவின் பிள்ளைகளோ வாழ்விழந்த கோலம்......
மாரியம்மன் பக்தர்களோ விதவைகளாய் நின்றகாலம்......
மார்கழி இருபத்தி மூன்று மறக்க முடியாத சோகம்.....

பச்சிளம் பாலகர் படிப்பினைத் துறந்தனர்
தத்தளித்த குடும்பங்களின் தலைவர்கள் ஆயினர்
கட்டுமரம் ஏறி மீண்டும் கடல்மடி தவண்டனர்
தொண்ணூறு (15.06.1990) வரை கடலில் செல்வம் குவித்தனர்.

விண்ணகம் சென்றவர் சாந்தி பெற
மண்;ணிலிருந்து யாகங்கள் செய்கின்றோம்
விட்டுப் போனவரே விண்ணில் சாந்தி பெற....
விட்டுப் போனவரே விண்ணில் சாந்தி பெற....

அரை நூற்றாண்டு அமரர்களே
அடைந்திடுவீர் சாந்தி
ஆண்டவரின் பாதத்தில்
நித்திய சமாதானத்தில் இளைப்பாறக்கடுக

1964ல் சூறாவளியில் காலமானவர்களின் பெயர் விபரம்.

1)    மிக்கேல்பிள்ளை அந்தோனிப்பிள்ளை   
2)  கிறிஸ்து அந்தோனிமுத்து
3)  அந்தோனிமுத்து வேதநாயகம்
4)  செல்லத்துரை
5)  பாக்கிநாதன்
6)  கலித்தர் சந்தியாப்பிள்ளை
7)  இரத்தினர் ஜெயராமன்
8)  செல்லத்துரை
9)  கணபதிப்பிள்ளை
10) கணபதிப்பிள்ளை துரை
11) சரவணணை கந்தசாமி
12) சரவணனை செல்வராஜர்
13) கந்தசாமி
14) ஐயாச்சாமி ஆனந்தவேல்
15) பெரியதம்பி
16) ஐயாத்துரை
17) தேவசகாயம் அருளப்பு
18) ஆ.மார்க்கண்டு
19) சவரிமுத்து
20) சி.அழகரட்ணம்
21) நல்லையா
22) வல்லிபுரம்
23) சாம்பசிவம்
24) சிவனெளி
25) பச்சடியார்
26) சுப்பையா
27) சின்னராசா
28) இராமசாமி

29) இராசகனி
30) இராசலிங்கம்
31) ஆனந்தராசா
32) கந்தையா மருகன் --------
33) முருகேசு (ஆனையிறவு)
34) விசுவலிங்கம் தம்பியய்யா
35) கந்தசாமி (சுறுக்கன்)
36) சின்னத்துரை குமாரசாமி
37) முத்தையா ஐயாத்துரை
38) சின்னத்துரை செல்லச்சாமி
39) மாணிக்கர் இராசையா
40) துரைராசா
41) செல்லக்கண்டு மகன்-------
42) சாபாபதி இலச்சுமிகாந்தன்
43) செல்வநாயகம் அந்தோனிப்பிள்ளை
44) இரத்தினம்
45) சின்னத்தம்பி அர்சுனன்
46) வாவாசிங்கம்
47) செல்லத்தம்பி சின்னத்துரை
48) கனகசபை
49) சண்முகம்
50) தங்கலிங்கம்
51) பராசிங்கம்.
53) சின்னர் திருச்செல்வம்
54) யோசேவ்
55) அமிர்தநாதர்
56) சின்னத்தம்பி

மேலேயுள்ள பெயர்கள் பல மயிலிட்டியில் அழைக்கப்பட்ட பெயர்களாகவுள்ளன இவர்களின் முழுப்பெயர்தெரிந்தவர்கள் என்னுடன் தொடர்பு கொண்டு இதனை பூரணப்படுத்த உதவுமாறு வேண்டுகின்றேன்.அத்துடன் இந்தப் பெயர்பட்டியல்களில் இல்லாதவர்களின் விபரங்கள் தெரிந்தவர்கள் தயவு செய்து இதனைப் பூரணப்படுத்த உதவுமாறு வேண்டுகின்றேன்.

மயிலிட்டி மக்களின் ஒருவனாய்

அன்ரன் ஞானப்பிரகாசம் (றாஜ்)

AND TO SEE VIDEO

___________________________________________________________________________

___________________________________________________________________________

தெய்வீக ராகங்கள் பாடல்கள்


மயிலிட்டி மக்கள் பல நாடுகளிலிருந்து தங்களால் (CD)யை  பெறமுடியவில்லை என்று தெரிவித்திருந்தார்கள் அவர்களைப்போல் மேலும் உள்ள மயிலிட்டி மக்களுக்காக இந்த பாடல்களை இணையத்தில் எடுத்து வந்து அவர்களின் காதுகளுக்கு விருந்தாக்கி இருக்கின்றோம். தாயகத்தில் உருவாக்கப்பட்ட மயிலிட்டி ஆலயங்களின் மீதெழுந்த தெய்வீக ராகங்கள் பாடல்களின் இறுவெட்டு என்று வெளியீட்டாளர்கள் அறிவித்ததால் DVD என்று அறிவித்திருந்தோம் ஆனால் வெளியிட்டது குறுந்தட்டு (CD)  பாடல்கள்  என்பதை அறியத்தருகின்றோம். பாடல்கள் பற்றிய உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள். நன்றி 19-01-2014

___________________________________________________________________________

2013 இல் மயிலிட்டி டொட் கொம் அறக்கட்டளையின் உதவியில் கல்வி கற்கும் மாணவர்கள்.

___________________________________________________________________________

மயிலிட்டி டொட் கொம் வாக்கெடுப்பின் பயனாக மயிலிட்டித்துறை மீண்டும்
மயிலிட்டி என்று முதலாவதாக மீள் குடியேற்ற குழு மாற்றியுள்ளது.


மயிலிட்டி டொட் கொம் இணையம் வாயிலாக மயிலிட்டித்துறை பெயர் மாற்றம் பற்றி இரண்டு வருடம் வாக்கெடுப்பு நடத்தி அதன் முடிவு மக்கள் மயிலிட்டி யை தான் விரும்பினார்கள். இந்த முடிவு பெயர் மாற்றம் செய்த அனைவருக்கும் தெரியும். இந்த முடிவை கடல்தொழிலாளர் கூட்டுறவுச்சங்கம், மீள் குடியேற்ற குழு, வினாயகர் ஆலய பரிபாலன சபை, முன் பள்ளி, கலைமகள் படிப்பகம், ஆகியவற்றிற்கு முறைப்படி இரண்டு மாதத்திற்கு முதல் தபாலில் கடிதம் அனுப்பப்பட்டதும் அனைவரும் அறிந்தது. ஏற்கனவே மீள் குடியேற்ற குழு செயலாளரிடம் கடிதம் கொடுக்கப்பட்டுவிட்டது அதன் பிறகுதான் மக்களின் வாக்கிற்கு மதிப்பளித்து மீள் குடியேற்ற குழு மயிலிட்டி என்று மீண்டும் பெயரை மாற்றியுள்ளார்கள். வாக்களித்த மக்கள் மற்றும் அனைத்து மயிலிட்டி மக்கள் சார்பாகவும் மயிலிட்டி இடம் பெயர்ந்தோர் மீள் குடியேற்றக் குழுவுக்கு நன்றியை தெரிவிக்கின்றோம். மற்றவர்களுக்கும் தற்போது கடிதங்கள் கொடுக்கப்பட்டுவிட்டது. அனைவரும் பதில் தருவார்கள் என்று நம்புகின்றோம். தந்தவுடன் மக்கள் பார்வைக்கு போடப்படும்.
நன்றி - 05-08-2013


___________________________________________________________________________


திரு நா.கருணாநிதி அண்ணா அவர்களுக்கு உங்கள் வாழ்த்துக்களுக்கும், மயிலிட்டி டொட் கொம் இன் வளர்ச்சியில் நானும் ஒரு பங்காளனாக இருப்பேன் என்று கூறி எங்களுக்கு மேலும் ஊக்கமளித்ததிற்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்ளுகின்றோம். உங்களின் கடிதம் எங்களுக்கு  நடந்துகொண்டிருக்கின்றதை அப்படியே சொல்லுகின்றது அதில் ஒன்றுதான் சமீபத்தில் மயிலிட்டி டொட் கொம்ஐ அழிக்க முயற்சி செய்தது. இப்படிப்பட்டவர்களை மயிலிட்டி மக்கள் எப்போது திருத்தப்போகின்றார்கள்?

___________________________________________________________________________

அறிவித்தல்

மயிலிட்டி டொட் கொம் ஒரு ஊடகம் என்ற வகையில் மயிலிட்டி மக்களின் பெருமைகளை உலகறிய செய்வதோடு நின்றுவிடாமல் மயிலிட்டிக்கும் மயிலிட்டி மக்களுக்கும் பாதிப்பு ஏற்படக்கூடிய செயல்கள் நடைபெறும் பட்சத்தில் அவற்றை நிறுத்துவதிற்காக மயிலிட்டி மக்களின் பார்வைக்கு கொண்டுவருவதற்கு் கடமைப்பட்டுள்ளோம். நன்றி

___________________________________________________________________________

உண்மைக் கதை, கனடாவில் மயிலிட்டி மக்களின் நிலை என்ன ??



___________________________________________________________________________


நம்ம ஊரைப்போல வருமா!!!


கனடாவில் வணக்கம் FM ரேடியோவில் நம்ம ஊரைப்போல வருமா என்ற நிகழ்ச்சி நடைபெற்று வருகின்றது. அந்த நிகழ்ச்சிக்காக ரேடியோவிலிருந்து எங்களை அழைத்து மயிலிட்டிவரலாற்றை குறிகிய நேரத்தில் சொல்லும்படி கேட்டிருந்தனர். அவர்கள் கேட்டுக்கொண்டதிற்கு அமைவாக 10 நிமிடத்திற்குள் சுருக்கமாக சொல்லப்பட்டுள்ளது. இதுபற்றிய உங்கள் கருத்துக்களை எங்களுக்கு அறியத்தரவும்.
நன்றி

உங்கள் மயலிட்டி டொட் கொம்/ மயலிட்டி டொட் கொம் அறக்கட்டளை

கருத்துக்களுக்கு/ COMMENTS

___________________________________________________________________________

வாக்கெடுப்பு முடிவைந்துவிட்டது இரண்டு வருடம் நடைபெற்ற வாக்கெடுப்பில்
மயிலிட்டிக்கு 351 வாக்குகளும்
மயிலிட்டித்துறைக்கு 80 வாக்குகளும்
தேவன்துறைக்கு 61 வாக்குகளும்
மொத்தம் 492 பேர் வாக்கழித்திருந்தனர்.
மயிலிட்டியைதான் மக்கள் விரும்புகின்றார்கள் என்பதை மயிலிட்டி மக்கள் மயிலிட்டி டொட் கொம் இணையத்தின் மூலம் வாக்களித்து தங்களின் விருப்பத்தை தெரிவித்துள்ளார்கள் என்பதை மயிலிட்டி மக்கள் அனைவருக்கும் அறியத்தருகின்றோம். இந்த முடிவை தற்பொழுது பெயர் மாற்றம் செய்த
மயிலிட்டி கடற்றொழிலாளர் கூட்டுறவுச்சங்கம்,
மயிலிட்டி மருதடி வரசித்தி வினாயகர் ஆலய பரிபாலன சபை,
மயிலிட்டி கலைமகள் படிப்பகம்,
மயிலிட்டி முன் பள்ளி
மயிலிட்டி மீள் குடியேற்ற குழு ஆகியவற்றின் பொறுப்பாளர்களுக்கு முறைப்படி அறிவித்துள்ளோம். அவர்களிடமிருந்து மயிலிட்டி மக்களிற்கான பதிலையும் கேட்டிருக்கின்றோம். அவர்களின் பதில் எங்களுக்கு கிடைக்கப்பெற்றதும் மக்களின் பார்வைக்காக இங்கே போடப்படும் என்பதையும் தெரிவிக்கின்றோம். வாக்களித்த அனைவருக்கும் நன்றியை தெரிக்கின்றோம். தொடர்ந்தும் பெயர் மாற்றம் பற்றிய உங்களின் கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள்.
நன்றி


___________________________________________________________________________


இந்தியா தமிழ் நாட்டில் மயிலிட்டியை சேர்ந்த குடும்பங்கள் அகதி முகாம்களில் இருப்பதாக அறிகின்றோம். குடும்ப வருமானம் குறைந்த படிக்க ஆர்வம் உள்ள தகுதி உடைய மாணவர்கள் மயிலிட்டி . கொம் அறக்கட்டளையின் கல்வி உதவி திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம் மேலதிக விபரங்களுக்கு பொறுப்பாளர்களுடன் அல்லது மின் அஞ்சல் மூலம் worldwide@myliddy.com தொடர்புகொள்ளவும்.
___________________________________________________________________________

மயிலிட்டி மக்களின் மயிலிட்டி டொட் கொம்மின் அடுத்த மைல்கல்!!!

மயிலிட்டி டொட் கொம் மயிலிட்டி மக்களுக்கென்று ஒரு பாடல் பாடி இசை அமைத்து வெளியிடவுள்ளது. பாடலை நீங்கள் எழுத விரும்பினால் மயிலிட்டியும், மயிலிட்டி மக்கள் சம்பந்தப்பட்ட நல்லவைகள் என்று கருதும் அனைத்தும் உள்ளடங்கியதாக 4 முதல் 6 நிமிடம் வரை பாடல் வரக்கூடியதாக எழுதி அனுப்பவும். கிடைக்கும் பாடல்களில் ஒரு பாடலை அனைத்துலக பொறுப்பாளர்களினால் தெரிவு செய்யப்பட்டு வெளியிடப்படும். பாடலை பாட விருப்பம் உள்ளவர்கள் மற்றும், பாடல் சம்பந்தமாக மேலதிக விபரங்களுக்கும் பொறுப்பளர்களுடன் தொடர்புகொள்ளவும்.
நன்றி

___________________________________________________________________________

வெளிநாடுகளில் வாழுகின்ற மயிலிட்டி மக்களுக்கு

தாயகத்தில் இந்த அறக்கட்டளை மூலமாக எமது பிள்ளைகளுக்கு கல்வி கற்க உதவி செய்கின்றோம் பிள்ளைகளின் எண்ணிக்கை கூடிக்கொண்டு  போகின்றது. அவர்களின் குடும்ப சூழ்நிலையை அறியும் போது யாரையும் தட்டிக்கழிக்க முடியாமல் உள்ளது எனவே இதற்கு உதவி செய்ய விருப்பம் உள்ளவர்கள் பொறுப்பாளர்களுடன் தொடர்புகொண்டு மேலதிக விபரங்களை பெற்று உங்களால் முடிந்த உதவியை செய்யவும். உங்களின் ஒவ்வொரு ரூபாவும் அவர்களிற்கு நல்வாழ்வை வழங்க உதவும்.
நன்றி

___________________________________________________________________________

இலவச திருமண இணைவுச் சேவை

___________________________________________________________________________

மிகவும் பிடித்த பாரதியார் கவிதை

தேடிச் சோறு நிதந்தின்று – பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி – மனம்
வாடித் துன்பமிக உழன்று – பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து – நரை
கூடிக் கிழப்பருவம் எய்தி – கொடுங்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும் – பல
வேடிக்கை மனிதரைப் போலே – நான்
வீழ்வே னென்று நினைத்தாயோ !

___________________________________________________________________________

மயிலிட்டி டொட் கொம்மிற்கு மயிலிட்டியில் இருக்கும் கோயில்களின் பெயர்கள் கிடைத்துள்ளது. இவற்றில் சில கோயில்கள் எங்கே இருந்தது என்பது தெரியவில்லை இவை எங்கே இருந்தது என்ற விபரத்தை தெரிந்தவர்கள் எமக்கு அறியத்தரவும், இவை மயிலிட்டி வரலாற்றில் ஆவணப்படுத்தப்படவேண்டியவை, இவற்றில் இல்லாத கோயில்கள் தெரிந்தால் அவற்றையும் தெரியப்படுத்தவும்.

நன்றி மயிலிட்டி டொட் கொம் worldwide@myliddy.com


1
KOLLVIYAKALLATI VINAYAGAR TEMPLE
15
PUTHUKINNATRU VAIRAVAR TEMPLE
2
SRI MURUGAN TEMPLE
16
SANGVATHAI MANNIKA PILLAYAR TEMPLE
3
KANNAHAI AMMAN TEMPLE
17
MAILUVAKATTAI PILLAYAR TEMPLE
4
SRIPATHIRAKAALI AMMAN TEMPLE
18
THOPU PILLAYAR TEMPLE
5
PARASAKTHI AMMAN TEMPLE
19
KONDALADI VAIRAVAR TEMPLE
6
THEVIAKOLLAI AMMAN TEMPLE
20
KOTHAVATHI VAIRAVAR TEMPLE
7
MUTHUMARI AMMAN TEMPLE
21
MUNNIYAPPAR TEMPLE
8
PUVANESVARI AMMAN TEMPLE
22
MAILODAI VAIRAVAR TEMPLE
9
KANNAHAIAMMAN TEMPLE
23
NAVALADY VAIRAVAR TEMPLE
10
KATTAIKADU VAIRAVAR TEMPLE
24
SRI MURUGAN TEMPLE
11
THIRUPOOR PECHIAMMAN TEMPLE
25
VEERAPATHTHIRAR TEMPLE
12
POOTHVARAYAR TEMPLE
26
HOSPITAL MURUGAN TEMPLE
13
VADAPRUMPARPPU PILLAYAR TEMPLE
27
KAANIKKAI MAATHA TEMPLE
14
MARUTHADDI PILLAYAR TEMPLE
28
MULAVAI MAATHA TEMPLE
___________________________________________________________________________

என்ன நடந்தாலும்
எதை இழந்தாலும்
சோர்ந்து போகமாட்டேன்
காரணம்
நான் 100 வெற்றிகளை பார்த்தவன்
அல்ல
1000 தோல்விகளை பார்த்தவன்...

___________________________________________________________________________


கருத்துக்களுக்கு/ COMMENTS


Share






Content on this page requires a newer version of Adobe Flash Player.

Get Adobe Flash player